தனது சொந்த ஊரின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், சி.மூ.இராசமாணிக்கம் மற்றும் தந்தை செல்வா ஆகியோர் காலமான பின்னர் பட்டிருப்பிலும் இலங்கை மட்டத்திலும் தமிழர் அரசியலில் நடந்த சில மாற்றங்கள் பற்றி இங்கு பதிவு செய்கிறார்.
Category: தொடர்கள்
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர்? – (நீதி மறுப்பும் நீதி கோரலும்)
(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இது தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் தொடக்கி வைக்கிறது.)
அமிர்தலிங்கம் ஒரு இணையற்ற தலைவர் (சொல்லத் துணிந்தேன் -81)
இலங்கைத் தமிழர் தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான அமரர் அ. அமிர்தலிங்கம் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டு 32 வருடங்கள் ஓடிவிட்டன. அவரது படுகொலை ஒரு வரலாற்றுத் துரோகம் என இந்த பத்தியின் ஆசிரியர் கூறுகிறார். பலவிதமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஒரு உன்னதமான தமிழ்த் தலைவராக அவர் திகழ்ந்ததாக “அரங்கம்” அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.
‘கிழக்கை கையாள ஏஜண்டு தேவை?’ (காலக்கண்ணாடி 46)
அண்மையில் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் ஒரு காணொளியில் முன்வைத்த கிழக்கு மாகாணம் குறித்த கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறார் அழகு குணசீலன். கிழக்கு மாகாணத்தை கையாழ்வதில் ஒரு மேலாதிக்க மனோநிலையை அவரது கருத்து வெளிப்படுத்துவதாக அவர் சாடுகிறார்.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 05
இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட போட்டி எவ்வாறு இரு இனங்களையும் ஒன்றுடன் ஒன்று சமமாக வாழச் செய்வதற்கு பதிலாக ஒன்றுக்கொன்று எதிரியாக மாற்றியது என்று விளக்குகிறார் எழுவான் வேலன்.
மார்க்கண்டேயன் போல இளமை மாறாதிருப்பது நல்லது ஆனால் அறிவு முதிர்ச்சியடைய வேண்டும் (சொல்லத் துணிந்தேன் – 80)
தான் எழுதிய பதிவுக்கு எதிராக முகநூலில் ஒரு நபர் எழுதிய கருத்துக்கான தனது பதிலுரையின் இரண்டாவது பகுதியை இங்கு பகிர்கிறார் பத்தியின் எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன். அந்த நபர் அரைகுறை தகவல்களுடன் கருத்துக்களை முன்வைத்திருப்பதை இங்கு அவர் கோடிட்டுக் காண்பிப்பதுடன், தனது கடந்தகால நடவடிக்கைகள் குறித்த மேலதிக விபரங்களையும் தருகிறார்.
‘கிணறு வெட்ட பூதம் வந்த கதை’ (பிரதேசவாதம் என்பது சிறு குழு வாதமாக மாற்றம் பெற்றுள்ள பரிதாபம்?)
‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)‘ எனும் வி.சிவலிங்கம் அவர்களின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் களத்தில் எழுவான் வேலனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களை மீண்டும் முன்வைக்கிறார் வி. சிவலிங்கம்.
சொல்லத் துணிந்தேன் – 79
அரங்கத்தில் வெளியான கோபாலகிருஸ்ணன் அவர்களின் பதிவுக்கு எதிர்வினையாக முகநூல் பதிவொன்றில் வெளியான கருத்துகளுக்கு இந்த வாரம் பதிலளிக்கிறார் அவர். அரசியல் ரீதியான கேள்விகளுக்கு மாத்திரம் இங்கு கோபாலகிருஸ்ணன் பதிலளிக்கிறார். தன்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஊடக தர்மம் கருதி அவர் கருத்து எதனையும் முன்வைக்கவில்லை.
பாரம்பரியம் புரியாமல் குலைக்கப்படும் கிழக்கின் முஸ்லிம் – தமிழ் உறவு (காலக்கண்ணாடி 45)
கிழக்கில் முஸ்லிம் – தமிழ் உறவு என்பது அந்தப் பிராந்தியத்தின் ஒரு பாரம்பரியம். அதனைப் புரிந்துகொள்ளாது தவறான முன்னெடுப்புக்கள் மூலம் கெடுக்கும் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளும், மதத்தலைவர்களும் அவ்வப்போது ஈடுபடுகின்றனர். ஆனால், அந்த உறவை மீட்டெடுக்கும் சக்தி சாதாரண மக்களின் கைகளிலேயே இருக்கிறது என்று பல கடந்தகால ஆதாரங்களுடன் வாதிடுகிறார் அழகு குணசீலன்.
மலையக மக்களுக்கு துரோகம் செய்த யாழ் மேலாதிக்கம்-(சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 04)
கிழக்கு மக்களுக்கு எதிராக மாத்திரமல்லாமல் மலையக தமிழ் மக்களுக்கு எதிராகவுமே யாழ் மேலாதிக்கத்தின் செயற்பாடு இருந்தது என்று கூறுகிறார் எழுவான் வேலன். தனது கூற்றுக்கான ஆதாரங்களை அவர் சுதந்திரம் கிடைத்த கால நிகழ்வுகளில் இருந்து முன்வைக்கிறார். தேசியக் கொடி விவகாரத்திலும் யாழ் மேலாதிக்க தலைவர்களின் செயற்பாடு குழறுபடியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.