இனமுரண் நிறைந்த இன்றைய இலங்கைச் சூழலில் இன ஐக்கியத்தின் அடையாளமாக இன்று திகழும் மிகச்சிலரில் கிழக்கிலங்கையின் ஓட்டமாவடியைச் சேர்ந்த எஸ். எல். எம். ஹனீஃபா என்ற உன்னதமான இலக்கியனும் ஒருவர். இளைஞனுக்கு இளையனாக, அதேவேளை பக்குவம் மிக்க எழுத்தாளனாக திகழும் அவரைப் பற்றி கருணாகரன் அவர்கள் எழுதும் குறிப்பு இது.
Category: கட்டுரைகள்
உயிர்த்த ஞாயிறும் பிள்ளையான் பேசும் அரசியலும்! (காலக்கண்ணாடி 30)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை வந்ததையிட்டு, பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதில் யதார்த்தமான கருத்து எது? ஆராய்கிறார் அழகு குணசீலன்.
‘என் வழி தனி வழி’ (தமிழ் தேசியம் – சில கேள்விகள்)
தமிழ் தேசியவாதிகளாகவும், விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாகவும் தம்மை காண்பித்துக்கொள்ளும் பலரின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் கருணாகரன் இங்கு பல கேள்விகளை எழுப்புகிறார். அவர்கள் உண்மையான தமிழ் தேசியவாதிகளா என்பது அவரது முக்கியமான கேள்விகளில் ஒன்று.
நவீன கைத்தொழில் ஒன்றின் பின்னடைவு
தேங்காய் உரிமட்டை கழிவுகளில் இருந்து பசளையை ஒருவாக்கும் தொழில்துறை அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தின் பின்னடைவைக் கண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதன் பின்னணியை ஆராய்கின்றார் வேதநாயகம் தபேந்திரன்.
சொல்லத் துணிந்தேன் – 65 (இலவு காத்த கிளிகள்)
இலங்கை தமிழர் தரப்பின் ஜெனிவா முயற்சிகளை விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் தமிழர் தரப்பு முயற்சிகளை “இலவு காத்த கிளி”யின் நிலையுடன் ஒப்பிடுகிறார்.
‘கிழக்கிலங்கை முஸ்லிம் ஆளுமைக்கு வித்திட்ட சுவாமி விபுலானந்த அடிகளார்’. சாதி மத பேத மற்ற மகானாக வாழ்ந்த ஒரு அற்புத ஞானி- விபுலானந்தர் பற்றிய ஆவணப் படம் சொல்லும் பல அரிய உண்மைகள்
எமது ‘அரங்கம்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விபுலாநந்தர் பற்றிய ஆவணப்படம் குறித்து ஆய்வாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய குறிப்பு இது. அடிகளாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இதனை பகிர்கிறோம்.
புலம் பெயர்ந்த சாதியம்- 01
புலம்பெயர்ந்து உலகெல்லாம் சென்ற இலங்கைத் தமிழர்கள் தாம் சென்றவிடமெல்லாம் தம்முடையவை என்று அவர்கள் கருதும் அனைத்தையும் கொண்டு செல்வது வழக்கம். அப்படியாக சாதியத்தையும் அவர்கள் புலம்பெயர் நாடுகளுக்கு கொண்டு வந்துள்ளனர். அவை குறித்த தனது அனுபவத்தை பகிர்கிறார் பிரான்ஸில் இருந்து அ. தேவதாசன்.
“இச்சா” பற்றி ஒரு அறிமுக எழுத்தாளர்
கிழக்கு மாகாணத்தையும் கதைக் களமாகக் கொண்ட, ஷோபாசக்தி எழுதிய “இச்சா” அண்மைக்காலத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான ஒரு நாவல். இந்தக் குறிப்பு அவை பற்றியது அல்ல. அந்த நாவல் குறித்த ஒரு இளம் எழுத்தாளரின் கருத்து இது. ‘அகரன்’ என்ற ஒரு இளம் எழுத்தாளரின் அந்த நாவல் பற்றிய பார்வை இது.
தான் போக வழியில்லையாம், தவில் போலவாம் மாராப்பு!! (காலக்கண்ணாடி-29)
இலங்கை குறித்த அண்மைக்கால சர்வதேச, உள்நாட்டு நடப்புகளை தனக்கேயுரிய நகைச்சுவையுணர்வுடன் விமர்சிக்கிறார் அழகு குணசீலன். தான் போக வழியில்லையாம், தவில் போலவாம் மாராப்பு என்று சொல்லும் அவர், ‘சர்வதேசத்திற்கு சிறிலங்கா தேவையா? சிலங்காவிற்கு சர்வதேசம் தேவையா?’ என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.
பணிப்பெண்களுக்கு எதிரான வன்முறையும் அதன் வரலாற்றுப் பின்னணியும்
பெண்ணை, அடிமையாக, பணிப்பெண்ணாக பயன்படுத்துவது என்பது மனித வரலாற்றோடே வளர்ந்துவந்த ஒன்று என்கிறார் ஆய்வாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். பல நூற்றாண்டுகளாக பணிப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வளர்ந்து, இன்று உச்சம் தொட்டிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.