சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..?(மூன்றாவது கண்: VII.)

 “”விலகினேனா விலக்கப்பட்டேனா….?”  என்று கேட்டார் செ.இராசதுரை. 

” விலகேன் முடிந்தால் விலக்குங்கள்… பார்க்கலாம்…” என்று சவால் விடுகிறார் சி.சிறிதரன்.

இந்த அரசியலுக்கு வயது எழுபத்தியேழு என்ற பெருமை வேறு.

 பிறப்பின் அடிப்படையிலான மூப்பு அல்ல அரசியல் சாணக்கியம். தமிழரசுக்கட்சி தன்னை புதுமைப்படுத்த வேண்டும்.

 தூய்மைப்படுத்தவேண்டும். ஜனநாயகம் படுத்தவேண்டும்.
 
 அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களை செய்யவேண்டும்.

இல்லையேல் வருகின்ற வெள்ளத்தில் அது அடித்துச்செல்லப்படும்…….! அவ்வளவுதான்….!!”

மேலும்

மீண்டும் தலைதூக்கும் சிங்கள – பௌத்த தீவிரவாதம்: இலங்கையின் இரண்டாவது அறகலையின் மூலம் வீழ்த்தப்படுவாரா அநுர குமார திசாநாயக்க?

“’மத வெறியைத் தூண்ட வேண்டுமானால் முதலில் ஒரு எதிரியை கட்டமைக்க வேண்டும்’ என்பது, சிறுபான்மை சமூகங்களே சிங்கள -பௌத்த தீவிரவாத தரப்புக்களால் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வரும் அந்த எதிரி. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக ஆவேசமாக தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களை உன்னிப்பாக நோக்கினால் அவர் சிங்கள பெரும்பான்மை மக்களின் நலன்களை உதாசீனம் செய்து, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரை அளவுக்கு அதிகமாக அரவணைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது வீசப்பட்டு வருவதை பார்க்க முடியும். ‘சிங்களவர்களின் வாக்குகளால் வென்று, தமிழர்களின் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு முயற்சிப்பவர்’, ‘ஜனாதிபதி தமிழர்களுடன் சேர்ந்து தைப்பொங்கலை கொண்டாட முடியுமானால் சிங்கள புத்தாண்டை ஏன் கொண்டாட முடியாது?’ என்ற விதத்திலான குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்படுகின்றன. “

மேலும்

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.! (மூன்றாவது கண்:VI)

“எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ள சமஷ்டி நூற்றாண்டின் அவரது வேலைத்திட்டம்  சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகளை நிராகரித்து நடைமுறைச்சாத்தியமான, ஜதார்த்த அரசியலுடன் கூடிய காலத்திற்கு பொருத்தமான வேலைத்திட்டமாக அமையவேண்டும். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி/ என்.பி.பி அரசாங்கம் இந்த நாட்டு மக்கள் அனைவரும் ‘இலங்கையர்’ என்ற இலக்கை அவர்களின் முகவரி, கடவுச்சீட்டு, அடையாள அட்டை ஊடாக அடையமுடியாது. அனைத்து மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் இதயங்களில் “நாங்களும் இலங்கையர்” என்ற உணர்வு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டும்.”

மேலும்

முன்னாள் பாராளுமன் உறுப்பினர்களின் ஓய்வூதிய ஒழிப்பு  சட்டமூலம் தொடர்பான  விவாதம் 

“முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில் செய்த எச்சரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.  தன்னை ஒரு  ‘கெரில்லா’ என்று வர்ணித்த அவர் தன்னந் தனியானாக சாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் வாழ்வாதாரத்தை இழந்தால் வேறு பலரையும் கொலை செய்துவிட்டுத்  தானும் உயிரை மாய்ப்பதற்கு ‘தற்கொலைத் தாக்குதலை’  நடத்துவதற்கு அவர்  திட்டமிட்டிருந்தாரோ தெரியவில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான சட்டமூலத்தை அவரது முன்னாள் தோழர்களின் அரசாங்கம் ஜனவரி 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில்  சமர்ப்பித்ததை தொடர்ந்து,  அது குறித்து அரசியல் அரங்கில் ஒரு  விவாதம் மூண்டிருக்கும் வேளையில், குணதிலக உயிருடன் இல்லை.”

மேலும்

 ’51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை’ நூல் அறிமுகம்-பகிர்வுகள்(பகிர்வு – 08)

“பாலமுனை பாறூக்கின் ’51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை’ நூலின் வெளியீடு 23.11.2025 அன்று அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய உரை.”

மேலும்

(சு)தந்திரம்: தட்டிக்கேட்க ஆளில்லா விட்டால் தம்பி…..? (மூன்றாவது கண்: V)

“அநுர அரசாங்கத்திற்கும் இந்தியா, சீனாவுக்குமான உறவு வெறுமனே பொருளாதார நலன்கள் சார்ந்த உத்தியோகபூர்வ அரசாங்கங்களுக்கு இடையிலானது. ஜே.வி.பி.யை இந்தியாவும், சீனாவும் முதலாவது கிளர்ச்சியில் இனம்கண்டு கொண்டவை.  பண்டாரநாயக்கா, ராஜபக்ச குடும்பங்களுக்கும் இந்தியா, சீனாவுக்குமான உறவு ஜே.வி.பி.கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட காலத்தையும் விஞ்சிய நீண்டகால நட்புறவு. இந்த வேறுபாட்டை இலங்கையின் பூகோள அரசியல் எப்போதும் வெளிப்படுத்தும். சீன உல்லாசப்பிரயாணிகளான சாதாரண மக்கள் மகிந்த ராஜபக்சவை அதிகாரம்  அற்ற நிலையிலும் வீடு தேடிச்சென்று சந்திக்கிறார்கள் என்றால், அரசாங்க, பிரதான எதிர்கட்சி அரசியல் பிரமுகர்களை  தவிர்த்து நாமல் ராஜபக்ச  இந்திய குடியரசு தினத்தில் பிரதமர் மோடியுடன் கை குலுக்குகிறார் என்றால் அதன் பின்னணியில் உள்ள அரசியல் செய்திதான் (சு) தந்திரதினத்திற்கான இலங்கை மக்களுக்கான இந்தியாவினதும், சீனாவினதும் செய்தி.”

மேலும்

தமிழக தேர்தல் களம்: சில கருத்துகள்

“தேர்தல் வெற்றி – தோல்விகள், தேர்தற்கூட்டுகள் பற்றிய செய்திகளும் பேச்சுகளுமே சென்னைத் தெருக்களையும் ஊடகங்களையும் நிறைத்திருந்தன. ஓட்டோ ஓட்டுநர்கள், ஊபர் சாரதிகள், கடைக்காரர்கள், கடற்கரையில் காற்று வாங்கிக் களிப்பவர்கள் தொடக்கம் சந்திப்போரில் பெரும்பாலானோரும் தேர்தல் நிலவரத்தைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தனர்.”

மேலும்

ஐக்கிய நாடுகளுக்கு குழிபறிக்கும் நோக்கில்   டொனால்ட் ட்ரம்ப் அமைத்த சமாதான சபை

“சமாதான சபையின் இலச்சினையும் கூட, முழுமையாக ட்ரம்புக்கு விருப்பமான தங்கத்தின் நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் அமெரிக்க வரைபடத்தை கொண்டிருப்பதையும் தவிர,  மற்றும்படி  தோற்றத்தில் ஐக்கிய நாடுகளின் இலச்சினையை ஒத்ததாகவே இருக்கிறது. 

 ஒட்டுமொத்தத்தில் காசாவை மீளக்கட்டியெழுப்புவது என்ற போர்வையில் அமைக்கப்பட்டிருக்கும் சமாதான சபை சர்வதேச சட்டங்களை மீறுகின்ற ஒரு நபரின் தன்னகம்பாவத்துக்கு சேவைசெய்வதற்கான ஒரு சர்வதேச அமைப்பாகவே அமையப்போகிறது.”

மேலும்

தமிழரசு: சுமந்திரனின் வலையில் சிக்கிய சிறிதரன்…! (மூன்றாவது கண்: IV)

*பா.அரியநேந்திரன், கே.வி.தவராசா, சி.யோகேஸ்வரன்,…….. என்ற வரிசையில் தற்போது சிக்கி இருப்பவர் சி.சிறிதரன். ஞா.சிறிநேசனும் விரைவில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சிறிதரன் விவகாரத்தில் அவரின் முடிவே அதைத் தீர்க்மானிக்கும்.

*யார் என்னத்தை சொன்னாலும்,  தமிழரசை காப்பாற்ற  மட்டும் அல்ல சிறிதரனையும் காப்பாற்ற  சுத்துமாத்துக்களை செய்தாவது சுமந்திரனால் மட்டுமே முடியும்.

மேலும்

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

*எமது கட்சியின் இலக்கு விரைவில் எட்டப்பட வேண்டும். அது இலங்கை மக்களின் பெரும்பான்மையவரின் இணக்கத்தோடு மட்டுமே அடையப்படலாம். அதிகாரப் பகிர்வு சகல மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன். இந்த வருடத்தோடு SWRD பண்டாரநாயக்கா இலங்கைக்கு சமஷ்டி என்ற எண்ணக் கருவை அறிமுகம் செய்து 100 ஆண்டுகள் நிறைவாகின்றது. அதை மையமாக வைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால், அது சிங்கள மக்கள் பலரது ஆதரவையும் பெற உதவும் என்பது எனது நம்பிக்கை.

*சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில் மீளப் பெறப்பட முடியாத அதிகாரப் பகிர்வு முறையை அடைய வேண்டும். அதற்கு நிச்சயமாக எதிர்த் தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும். 

*இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது. 

மேலும்

1 4 5 6 7 8 160