“இப்போது வடக்கு கட்சிகளின் பின்னால் தமிழர் பெயரால் போகின்ற அரசியல் வாதிகள் மற்றொரு பாடத்தை படித்திருக்கிறார்கள். சுமந்திரனும், சிறிதரனும் இவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறார்கள். இனிமேலாவது எமது அரசியல் வாதிகள் கிழக்கின் அரசியல் தனித்துவம் பற்றி சிந்திப்பதற்கும், தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கும் காலம் கடந்துவிடவில்லை.” என்கிறார் குணசீலன்.
Category: கட்டுரைகள்
“கனகர் கிராமம்” -முஸ்லிம் பெண்ணை எட்டி உதைத்தவர் (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்-19)
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 19.
பந்து இப்போது தமிழ் மக்களின் பக்கத்தில் மட்டுமே உள்ளது (வாக்கு மூலம் – 100)
இந்த “வாக்குமூலம்” தொடரில் தமிழ் மக்களுக்கு தேவை என தான் கருதும் ஒரு மாற்று அரசியல் பொறிமுறையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த 100 ஆவது இறுதி பகுதியில் தான் இதுவரை சொல்லியவற்றை தொகுத்து கூறமுயல்கிறார்.
சுயம் இழந்து, புலிகளின் ஒளியில் குளிர்காயும் தமிழ்க்கட்சிகள்!
‘தம்மால் சுயமாக எதையும் செய்ய முடியாத நிலையில் புலிகளின் – அவர்களுடைய மாவீர்களின் ஒளியில் தங்களுடைய அரசியலை இவர்கள் மேற்கொள்ள விளைகின்றனர். இது அந்தப் போராளிகளுக்கும் அவர்களைப் பெற்று வளர்த்த பெற்றோருக்கும் அவர்களை மதிக்கின்ற மக்களுக்கும் இழைக்கின்ற அநீதியாகும்.
தமது அரசியல் ஆதாயங்களுக்காக போராளிகளையும் போராட்டத்தில் தம்முடைய இன்னுயிரை ஈய்ந்தோரையும் பயன்படுத்திக் கொள்ளுதல் மிகத் தவறானதாகும். இந்த வியாபாரத்துக்கு மக்களும் இடமளிக்கக் கூடாது.’
மிலிந்த மொரகொடவும். 13 வது திருத்தமும்
‘13 வது திருத்தம் ஒன்றே இலங்கை அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் இருக்கும் சட்டரீதியான ஏற்பாடாகும். இந்தியாவின் படைபலத்துடன் கூடிய நேரடித்தலையீடு தான் அதைச் சாத்தியமாக்கியது என்பதை விளங்கிக் கொள்வதற்கு எவரும் அரசியல் விஞ்ஞானம் படிக்கவேண்டியதில்லை.
உள்நாட்டுச் செயன்முறைகள் மூலமாக அதிகாரப் பகிர்வைச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட கடந்த கால முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெற முடியவில்லை என்ற வரலாற்று அனுபவம் எம் முன்னால் விரிந்து கிடக்கிறது.
என்றாவது ஒரு நாள் இலங்கை அரசாங்கம் ஒன்று 13வது திருத்தத்தை இல்லாமல் செய்தால் உள்நாட்டுச் செயன்முறையின் மூலமாக அத்தகைய ஒரு ஏற்பாட்டை மீண்டும் கொண்டுவரமுடியுமா?
அந்த திருத்தத்தின் பல்வேறு போதாமைகளுக்கு அப்பால் இந்த கேள்வி குறித்து தமிழ் அரசியல்வாதிகள் சிந்திப்பார்களா? அவர்கள் சிந்திக்காவிட்டாலும் தமிழ் மக்கள் சிந்திக்காமல் இருக்கமுடியாது.’
இந்தியாவில் இலங்கையின் சட்டவிரோத குடியேறிகள்? (மௌன உடைவுகள்-69)
‘சட்டரீதியற்றவர்கள் என்று எந்த மனிதரும் இல்லை என்று சர்வதேச அகதி அமைப்புக்கள் கூறுகின்றன. இந்தியாவில் சட்டத்தினால் சட்டவிரோத குடியேறிகளாக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளை ரணில் அரசு வழங்கும் கடவுச்சீட்டு இந்திய அரசிடம் இருந்து பிணையெடுக்கட்டும்.’
கனகர் கிராமம் (அங்கம்-18) ‘அரங்கம் ‘ தொடர் நாவல்
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 18.
தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…! (மௌன உடைவுகள்:68)
‘பழம்பெருமை பேசுகின்ற தமிழரசுக்கட்சி இருபத்தியோராம் ஆண்டின் சமகால அரசியலுக்கு பொருத்தமற்றது. அதனை முற்று முழுதாக இளைய தலைமுறை பொறுப்பு ஏற்று முழுமையான புனரமைப்பைச் செய்யவேண்டும். அது தனது இயலாமையை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பது மட்டுமன்றி கடந்த 50 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியதற்கும், யாழ்மையவாதத்தை முதன்மைப்படுத்தி கிழக்கு, மலையக, வன்னி மக்களுக்கான சம உரிமையை மறுத்து ஏமாற்றி போலி அரசியல் செய்ததற்காகவும் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்மக்களிடமும் சிறப்பாக கிழக்குமாகாண மக்களிடமும் மன்னிப்புக் கோரவேண்டும்.‘
விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?
‘உண்மையில் இப்பொழுது தன்னுடைய மனச்சாட்சியின்படி தமிழரசுக் கட்சி அரசியல் அரங்கிலிருந்தே விலகுவதே தமிழ் மக்களுக்கும் இந்தக் காலத்துக்கும் செய்கின்ற பெரும்பணியாக இருக்கும்.
நல்லதைச் செய்ய முடியாது விட்டால் பரவாயில்லை. நல்லன நிகழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்காது விட்டாலே அது ஒரு பெரிய பணியும் பங்களிப்பும்தான். ஏனென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உருவாக்கியளித்த கூட்டமைப்பு என்பதைக் கூட தமிழரசுக் கட்சியினால் தக்க வைக்க முடியவில்லை.’
தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும்-பகுதி-4. (வாக்கு மூலம்-99)
‘இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி இலங்கை அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய சக்தி இந்தியாவே ஆகும். இந்தியாவை ஓரம் கட்டி விட்டு வேறு எந்தச் சர்வதேச நாடுகளோ அல்லது சக்திகளோ இதில் ஈடுபடப் போவதுமில்லை. மறுதலையாக இந்தியாவை ஓரம் கட்டும் எந்தச் செயற்பாடுகளும் வெற்றியளிக்கப்போவதுமில்லை.
மேலும், இன்றைய இலங்கையின் தென்னிலங்கை – இந்து சமுத்திரப் பிராந்திய – பூகோள அரசியல் களநிலையில் உடனடியாக 13ஆவது திருத்தத்திற்கு மேல் இந்தியா நகரப் போவதுமில்லை.’