பெரியார் குறித்த தமது இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் அவரால் உருவாக்கப்பட்ட திராவிட கழகத்தின் தோற்றம் பற்றி பேசுகிறார்கள்.
Category: கட்டுரைகள்
சட்டரீதியாகச் செத்தவன் (சிறுகதை)
இதுவும் புலம்பெயர்ந்து தஞ்சக் கோரிக்கை ஏற்கப்படுவதற்காக காத்திருக்கும் ஒரு அகதியின் கதைதான். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமானது. விதி சில சந்தர்ப்பங்களில் ஆட்களைப் பார்த்து இப்படியும் சிரிப்பது உண்டு. அகரன் இதனை எழுதியுள்ளார்.
பொட்டு மான்மியம்
பொட்டு என்பது பொதுவாக பெண்கள் நெற்றியில் அணியும் ஒரு அடையாளம். இதன் பின்னணியில் பல கதைகள் இருக்கின்றன. பொட்டோடு சேர்ந்த பல மரபுகளும் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறார் வேதநாயகம் தபேந்திரன்.
13வது திருத்தம் என்பது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வின் ஆரம்பமா? அல்லது அதன் முடிவின் ஆரம்பமா?
இலங்கை அரசியல் நிலவரம் மிகவும் குழப்பகரமான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழ்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமலாக்குவதை கருதலாமா என்பதை இங்கு ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (20)
தனது ஊர் நினைவுகளை மீட்கும் ஶ்ரீகந்தராசா அவர்களின் சூறாவளி பற்றிய நினைவுகள் இன்று ஆரம்பமாகின்றன. சூறாவளி ஒருபுறம் கொடுமை. அவை குறித்தும் அதனைத் தொடர்ந்து நிவாரணத்தில் நடந்த பிரச்சினைகளை தாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது குறித்தும் அவர் இங்கு பேசுகிறார்.
“விடாய்” பேசும் மொழி : படுவான் வாழ்வியல் ஒரு மறுவாசிப்பு! (காலக்கண்ணாடி – 28)
மட்டக்களப்பின் நெற்களஞ்சியம் படுவான்கரை. அதன் வாழ்வும், மொழியும், மரபும் ஏனைய இடங்களில் இருந்து நிறைய மாறுபட்டவை. பழந்தமிழரின் வேர் அது. கவிஞை தில்லையால் எழுதப்பட்ட “விடாய்” என்ற கவிதை நூல், அதன் தலைப்பு முதல், வார்த்தைக்கு வார்த்தை படுவான்கரையின் பண்பு பேசுகின்றது. அழகு குணசீலனின் பார்வையில் அவை பற்றி…
மதகுரு யோசுவா : நீர் போதகரா, மீட்பரா?
இவர் ஒரு மதகுரு, மீட்பர், பல பழைய தாந்தோன்றிகளை மீட்க முயல்பவர். ஆனால், சிறந்த சமையல்காரர். யோசுவா என்ற இவர் வன்னியில் உணவில் பல கைவிட்ட விடயங்களை எமக்கு மீள அறிமுகம் செய்து வருகிறார். போதிப்பதைவிட, தானே செய்துகாட்ட முயல்கிறார். அவர் ஒரு மந்திரக்காரனோ? ஆமென் யோசுவா. எதிரொலியில் இருந்து…
சொல்லத் துணிந்தேன் – 64
ஐநா மனித உரிமைகள் பேரவை விவகாரத்தை தமிழர் தரப்பு கையாளும் விதம் குறித்து ஆராயும் கோபலகிருஸ்ணன் அவர்கள், சர்வதேச அரசியலைக் கையாளுவதில் தமிழர்தரப்பு அரசியல் தலைமைத்துவத்திற்குள்ள அறியாமையை –வறுமையை அல்லது நிபுணத்துவமின்மையைத்தான் இவை கோடிகாட்டுவதாக கூறுகிறார்.
யாழ்ப்பாணத்தில் புதிய பெருந்தெருவுக்கான தேவை
போருக்கு பின்னரான காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கில் பல புதிய வீதிகள் அமைக்கப்பட வேண்டிய தேவை அதிகரித்து வருகின்றது. அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் தேவையான ஒரு வீதியைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறார் கட்டுரையாளர் தபேந்திரன்.
பரதன் இராஜநாயகம் மறைந்தார்…
தமிழர் விடுதலைப்போராட்டத்தின் முன்னோடி போராளிகளில் ஒருவரும், முன்னோடி பல்துறை கலைஞருமான பரதன் இராஜநாயகம் லண்டனில் காலமானார். அவர் பற்றி செய்தியாளர் கருணாகரன் வழங்கும் ஒரு சிறு குறிப்பு.