மட்டக்களப்பில் நடந்த சாம். தம்பிமுத்து அவர்களுக்கான அஞ்சலி கூட்டத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டதை கடுமையாக விமர்சிக்கும் அழகு குணசீலன், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்கிறார்.
அப்படியானால் புலிகளின் விசுவாசிகள் தம்மை சுயவிமர்சனம் செய்ய உண்மையிலேயே தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
Category: அறிவித்தல்கள்
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ; தமிழர் அரசியல் எங்கே போகிறது?
‘இதே, நிலைவரங்கள் தொடருமாக இருந்தால், உலகம் கவனிக்காத ஒரு மக்கள் கூட்டமாக இலங்கை தமிழர்களும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் முழக்கங்களைச் செய்துகொண்டு குடாநாட்டுக்குள் மாத்திரம் கொக்கரிக்கின்ற ஒரு கூட்டமாக தமிழ் அரசியல்வாதிகளும் மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.’
தமிழ்ப் பொது வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டும் வேலை! (சொல்லித்தான் ஆகவேண்டும்! -சொல்-05)
தமிழ்ப்பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும் முயற்சி என்று கூறி, தமிழ் தேசியக்கட்சிகள் சில நடந்துகொள்ளும் விதம் வேடிக்கையாக இருப்பதாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், அவற்றின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கிறார்.
காலம் கோருவது வெறும் கருத்து உருவாக்கிகளை அல்ல, களப்பணியாளர்களையே
“பலிக்கடா”க்களாவது மெய்யான உணர்வோடு போராட்டக்களத்தில் குதிக்கின்ற மக்கள் அல்லது மாணவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய குடும்பங்களே பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்ட பல பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் பின்னர் பலருக்கு தெரியாமல் போய் விடுகிறது.
திருவிழாக் கடைகளின் தீர்மானம்! (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-04)
‘இலங்கைத் தமிழர் தரப்பு அரசியலை அரசியல் கோட்பாட்டு ரீதியாக நுணுகி ஆராய்ந்தால் ‘புலிச் சமூகம்’ வேறு ‘தமிழ்ச் சமூகம்’ வேறு. இரண்டும் ஒன்றல்ல. புலிகளின் பிரச்சினை வேறு. தமிழ் மக்களின் பிரச்சினை வேறு. புலிகளின் பிரச்சினையையும் தமிழ் மக்களின் பிரச்சினையையும் ஒன்றாகப் பார்த்தமைதான் இதுவரையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் பேரழிவுகளுக்கும் பிரதான காரணமாகும். ‘
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 32)
கனகர் கிராமத்தில் 1977 தேர்தலில் அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமைகள் குறித்து பேசும் செங்கதிரோன், அந்தவேளையில் நடந்த சில தேர்தல் வன்முறைகள் பற்றி குறிப்பிடுகிறார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமை கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும்
டயனா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னணியும் அவை குறித்த அதிர்ச்சித் தகவல்களும். மூத்த பத்திரிகையாளார் வீ. தனபாலசிங்கம் அவர்களின் ஆய்வு.
கிழக்கில் : பயனீட்டு அரசியலும், எதிர்ப்பு அரசியலும்…..! (மௌன உடைவுகள்- 86)
முஸ்லிம்களின் அரசியல் குறித்து கலாநிதி அமீர் அலி எழுதிய அண்மைய கட்டுரை பற்றி சிலாகிக்கும் அழகு குணசீலன், அக்கட்டுரையில் இருந்து கிழக்கு மாகாண முஸ்லீம்கள் மட்டும் அல்ல தமிழர்களும் கற்றுக் கொள்வதற்கும்,சிந்திப்பதற்கும் நிறையவே இருக்கிறது என்கிறார்.
எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்!
இலங்கையில் பல தரப்புகளின் நடவடிக்கைகளும் இனமுரணை தூண்டுகின்றன. சில வெளிநாடுகளும் அதற்கு தூபமிடுகின்றன என்று கூறும் செய்தியாளர் கருணாகரன், சமாதானம் வேண்டும் மாற்றுச்சிந்தனையாளர் பலவீனமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
