தமிழரசு ஜனநாயகம்: கோர்ட்டுக்குப்போன வீட்டுக்காரர்……! (மௌன உடைவுகள்-76)

பத்தாண்டுகளாக தலைமைப்பதவிக்கு  அரைத்தமாவை (யை )திருப்பி திருப்பி அரைத்தால் அது தமிழரசின் ஜனநாயகம்…….!

உள்வீட்டு பதவிச்சண்டையை பூட்டியகதவுக்குள் எது? எவருக்கு? என்று பங்கு போட்டுக்கொண்டால் அது எங்கள் வீட்டு பழம்பெருமை மிக்க பாரம்பரிய ஜனநாயகம்……..!

மேலும்

சுமந்திரன் சொன்னதுதான் சரி என்பது உறுதியாகின்றதா?

தமிழரசுக்கட்சி மீதான வழக்கு விடயத்தில் அக்கட்சியினர் எடுத்த முடிவு, அவர்கள் மீதான விமர்சனங்களை சரி என்று உறுதி செய்வதுடன், அக்கட்சியின் தலைமையின் பிழையான போக்கையும் உறுதி செய்துள்ளது என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

கிழக்கு அரசியல்:5. தனித்துவ கலை பண்பாட்டு அடையாளங்கள்.! (மௌன உடைவுகள்-75)

கிழக்கு மாகாணத்தின் கலை, இலக்கிய, பண்பாடு தனித்துவம் தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல, கிழக்கின் தனித்துவம் பேசும் அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை என்று விமர்சிக்கும் அழகு குணசீலன், இவர்கள் எவரும் இதில் போதிய அக்கறை காட்டவில்லை என்றும் கூறுகிறார். இது விடயத்தில் கிழக்கின் புத்திஜீவிகளும் மௌனம் சாதிப்பதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாகவும் முன்னேற்றத்துக்காகவும் உழைத்தது நிறைவே’-திருமதி றூபவதி கேதீஸ்வரன்(மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி)

பணி ஓய்வு பெறுகின்ற கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், அந்த மாவட்டத்தின் முதலாவது பெண் அரச அதிபர். அங்கேயே பிறந்து, வளர்ந்த அவர், அந்த மாவட்டம் மிகவும் சவாலான காலங்களை எதிர்கொண்டபோது அங்கு பணியாற்றியவர். அவருடைய அரச நிர்வாக அனுபவம் குறித்த செவ்வி. செவ்வி கண்டவர் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

கருணாவின் தேர்தல் தோல்வி சொல்லும் செய்தி.! கிழக்கு அரசியல்:4 (மௌன உடைவுகள் 74)

கிழக்கு அரசியலில் கிழக்கில் அபிவிருத்தி பேசும் கட்சிகள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளையும் அதன் விளைவுகளையும் இந்தப்பகுதி பேசுகின்றது. குறிப்பாக கடந்த பொதுத்தேர்தலில் விடப்பட்ட தவறுகளை அழகு குணசீலன் அலசுகிறார்.

மேலும்

தோழர் சந்திரகுமாரின் மரணம் ஒரு தனி மனிதப் பேரியக்கத்தின் முடிவு 

ஒரு இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரான தோழர் சந்திரகுமார் அவர்கள் தனது 76 வது வயதில் அண்மையில் காலமானார். தன் வாழ்நாள் முழுக்க ‘செயற்பாட்டு அரசியலில்’ தீராத ஈடுபாடு கொண்டு வாழ்ந்த அவர் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்து, நீண்டகாலமாக கொழும்பில் வாழ்ந்து வந்தார். இன்றைய இளைஞர்கள் அறிவதற்காக அவரைப்பற்றி எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் எழுதும் குறிப்பு

மேலும்

சுமந்திரனின்  சுயபரிசோதனை 

தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ஒருவரே தேவை என்பதால் சிறிதரனை கட்சியின் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்தார்கள் என்பதையும் தன்னால் அவ்வாறான அரசியலைச் செய்யமுடியாது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கும்  சுமந்திரனை பாராட்டும் பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் அவர்கள், மறுபுறம் ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல்  கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மையை புதிய தலைமை உணரவேண்டும் என்கிறார்.

மேலும்

மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்

அரசியல் ரீதியாக உயர் பதவிகளை தன்வசம் வைத்துக்கொள்வதற்காக மாவை சேனாதிராஜா சுயநலத்துடன் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டும் மூத்த பத்திரிகையாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள், கட்சி மாநாட்டை ஒத்தி வைத்ததும் அதே நோக்கிலானது என்றும் குற்றம் சாட்டுகிறார். இதற்கு தமிழரசுக்கட்சியினர் இடம் கொடுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

மேலும்

கிழக்கு அரசியல்:2  கிழக்கின் சமூக, அரசியல் ஐக்கியம்……! (மௌன உடைவுகள்-72)

கிழக்கு அரசியலின் மையமாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமே இருக்க வேண்டும் என்று கூறும் அழகு குணசீலன், வாக்கு மைய அரசியல் போட்டிகள் அதற்கு பாதகமாக தொடர்வதாக குறிப்பிடுகிறார்.

மேலும்

புலிகளின் தியாகத்தை விற்றுப் பிழைப்பு நடத்துவோர்!!

இன்றைய அரசியல்  விடுதலைப் புலிகளின் போராற்றல் என்கிற வீரம், அதற்கான தியாகம் (உயிரிழப்பு) அதைக் கொண்டாடும் மாவீரம் – ‘மாவீரர்’ என்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தப் போராளிகள் குமுறுகிறார்கள். தங்களையும் தங்களைச் சேர்ந்தவர்களையும் வைத்துப் பிழைக்கும் தமிழரசியலை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திட்டமிட்டுத் தமிழரசியல் புலிகளின் பிரதிநிதிகளாக இருப்போரின் நீக்கத்தை ஒரு பக்கம் செய்து கொண்டு, மறுபக்கம் புலிகள் இயக்கத்தின் போராற்றலையும் அதில் உயிரழந்தோரின் தியாகத்தைப் பயன்படுத்துவதையும் இவர்களால் ஏற்கமுடியாதிருக்கிறது. அதாவது இந்த இரண்டகத் தன்மையை…’

மேலும்