சட்டத்தை ஆதாரமாகக் கொண்ட சர்வதேச முறைமை இல்லாத  ஒரு உலகம் 

“பிரகடனப்படுத்தப்படாத ஒரு அணுவாயுத நாடும் இதுகாலவரையில் அணுகுண்டுத் தாக்குதல்களை நடத்தி  பேரழிவை ஏற்படுத்திய ஒரேயொரு வல்லரசும் சேர்ந்து அணுவாயுதத்தை தயாரிப்பதாக தாங்கள் சந்தேகித்த ஒரு நாட்டின் மீது  படுமோசமான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி நாசம் விழைவித்திருக்கின்றன. சர்வதேச சட்டங்களை கிஞ்சித்தேனும்  பொருட்படுத்தாமல் போரைத் தொடங்குவதை மாத்திரமல்ல, போர்நிறுத்தத்தை எப்போது செய்வது என்பதையும் மத்திய கிழக்கில் இன்று  அமெரிக்காவும் இஸ்ரேலுமே தீர்மானிக்கின்றன.”

மேலும்

விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே!

“இந்தப்போராட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர்சி.வீ.கே. சிவஞானமும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் சென்றபோது அதே கட்சியைச் சேர்ந்தவர்களிற் சிலர் எதிர்ப்புக் காட்டியுள்ளனர். இந்த எதிர்ப்பை அவர்கள் கட்சிமட்டத்தில் காட்டியிருக்க வேண்டுமே தவிர, இப்படிப் பொது வெளியில் காட்டியிருக்கக் கூடாது. மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்தைப் பலவந்தமாகப் பறித்துத் தங்களுடைய கையில் எடுத்துத் தங்களுடைய அரசியல் லாபநட்டக் கணக்கைப் பார்த்திருக்கக் கூடாது என்ற பொது அபிப்பிராயம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தமிழரசுக் கட்சி, குறித்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேவேளை இவர்களைப் பொதுச் சமூகம் கண்டிக்க வேண்டும்.“

மேலும்

வோல்கர் டேர்க்: அநுரவின் காட்டில் மாயமான் வேட்டை…! (வெளிச்சம்: 065)

“மொத்தத்தில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் இனியும் சர்வதேசத்தின் பெயரை உச்சரிக்கும் தகுதியை இழந்து விட்டது மட்டும் அன்றி சர்வதேசத்தினால் ஏமாற்றப்பட்டும் உள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் குறித்து திருப்தியை வெளியிட்ட வோல்கர் , தமிழ்த்தேசிய தரப்பில் எத்தனை பெண்கள் பாராளுமன்றத்தில் எம்.பி.யாக  உள்ளனர் என்பது குறித்து பேசாதது கவலைக்குரியது.”

மேலும்

மண்முனை தென் எருவில் பற்று, பிரதேச சபையின் அரசியல் பழிவாங்கல்

“மொத்தத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றிய தமிழரசுக் கட்சியினர் தங்களுடைய முதல் நடவடிக்கையாக எடுத்திருக்கும் இந்த அரசியல் பழிவாங்கலால் சாதாரண ஏழைத் தமிழ் மக்களும், தமிழ் மக்களுக்காக சேவையாற்றி வந்த களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயமுமே பாதிக்கப்படுகின்றன என்பதே தெட்டத் தெளிவான உண்மையாகும்.”

மேலும்

தூய்மையான அரசியலே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செல்நெறி (சொல்லித்தான் ஆகவேண்டும் – சொல் 41)

மாற்றங்கள் மட்டுமே மாறாதவை. கட்சி மற்றும் தனிநபர் நலன் சார்ந்த மனோநிலையில் மாற்றமேற்பட்டு அவற்றைக் கடந்து மக்கள் நலன் சார்ந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் இம் மூவரிடமும் ஏற்படுமாயின்-உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த எண்ணங்களின் அடிப்படையில் மாற்றங்கள் மூவரிடமும் உள்வாங்கப்படுமாகவிருந்தால் மட்டுமே அழகு குணசீலனின் ஆதங்கம் நிறைவேற வாய்ப்புண்டு. கபட அரசியலுக்கு ஒரு போதும் (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு துணை போகாது. மக்கள் நலன் சார்ந்த தூய்மையான அரசியலே (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செல்நெறி.

மேலும்

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின்  வரலாற்றுப் பொறுப்பு

“தமிழ்ப் பெருந்திரள் சமூகத்தின் விடுதலைக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பங்களிக்க வேண்டிய பொறுப்பு பல வகையிலும் உண்டு. குறிப்பாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பினர் என்ற வகையில், தமிழ்ச் சமூகம் கூடுதலான பாதிப்பை சந்திப்பதற்கு இந்தக் கூட்டணியினரும் காரணமாகியுள்ளனர். ஆகவே இதையெல்லாம் கவனத்திற் கொண்டு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி செயற்பட வேண்டும். வரலாற்றைக் கட்டமைக்க – மாற்றியமைக்க வேண்டும்.”

மேலும்

விட்டுக்கொடுப்பு அரசியல்  செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்

“உள்ளூராட்சி சபைகளில் தலைவர், துணைத் தலைவர் தெரிவுகளை ஏதோ எதிரியின் முகாம்களை சண்டையிட்டுக் கைப்பற்றுவது போன்று அரசியல்வாதிகள் அறிவிப்புகளைச் செய்கிறார்கள். அது மாத்திமல்ல, தமிழ்க் கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் ஏட்டிக்குப் போட்டியாக செய்யும் பதிவுகள் தமிழ்த் தேசியவாதம் இணைய வெளியில் எந்தளவுக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.”

மேலும்

புண்ணியவான் டக்ளஸ் தேவானந்தா: பத்து புண்ணியங்கள்…!(வெளிச்சம்: 064)

“ஈழப்போராட்டம் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப்பார்த்தால் புலிகள் உட்பட இன்று தமிழ்த்தேசிய அரசியல் செய்யும் எவருக்கும், எந்த அணிக்கும், கட்சிக்கும்  டக்ளஸ் தோழரை நோக்கி சுட்டு விரலை நீட்ட எந்த அருகதையும் இல்லை. இவர்கள் முதலில் கண்ணாடிக்கு முன் தங்களை நிறுத்துவது நல்லது. தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்திற்கும், ஜனநாயக அரசியலுக்கும் மிகப்பெரிய “துரோகம்” இழைத்து இந்த போராட்டத்தை சிதைத்தவர்கள் புலிகளும்,  அதற்கு போட்டி போட்டு முட்டுக்கொடுத்த தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளுமே. வெவ்வேறு அரசியல் வியாபார பெயர்களிலும், இலச்சினைகளிலும் இவர்கள் மறைந்து கொண்டாலும் இது வெளிப்படையானது. இவர்கள் புலிகளின் ஆயுத அராஜகத்தை மௌனமாக அங்கீகரித்தவர்கள். இதை இன்றுவரை விமர்சனம் செய்கின்ற ஒரே வடக்கு தலைமையாக டக்ளஸ் இருப்பது புலிகளை விற்றுப்பிழைக்கும் இவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.”

மேலும்

தமிழர் அரசியல்வெளியில் அற்றுச் செல்லும் அரசியல் அறம்?-அரசியல் நாகரீகம்??- அரசியல் விழுமியங்கள்??? (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-40)

“ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மைத்தானே குறிசுட்டுக் கொண்டுள்ள கட்சிகளிடமிருந்த இரட்டை வேடம் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலில் இருக்கவில்லை.
 
 டக்ளஸ் தேவானந்தா பத்மநாபா தலைமையிலான ஈ பி ஆர் எல் எஃப் இயக்கத்திலிருந்த காலத்திலும்  பின் ஈ பி ஆர் எல் எப் ஐ விட்டுப் பிரிந்து ஈ பி டி பி கட்சியை ஆரம்பித்து ஜனநாயக வழிக்கு மீண்டு அரசியல் செய்த இன்று வரையிலான காலம்வரை புலிகளின் – பிரபாகரனின் பாசிசப் போக்குக்கு எதிராகவே இயங்கி வந்துள்ளார். அதனால் புலிகளின் கொலைத் தாக்குதல்களிலிருந்து பல தடவைகள் உயிர் பிழைத்துள்ளார். தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு தமது சுயலாப அரசியலுக்காகவும் தேர்தல் மைய அரசியல் தேவைகளுக்காகவும் உள்ளுக்குள்ளே புலிகளுக்கு எதிரான உணர்வுகளை வைத்துக் கொண்டு வெளியிலே புலிகளின் முகவர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டு புலிகளின் வாலைப் பிடித்துத் தொங்கிய போலித் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் போன்று ஒருபோதும் அவர் இரட்டை வேடம் போட்டதில்லை. சரி பிழைகளுக்கு அப்பால் அவரது அரசியல் வெளிப்படைத்தன்மையானது.”

மேலும்

வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle)

வயலின் இசைக்கருவியின் வரலாறு, உருவாக்கம், வகைகள், இசைக்கும் முறை, சிறந்த வயலின் கலைஞர்கள் பற்றிய ஒரு இசை ஆசிரியையின் சிறு குறிப்புகள் இவை.

மேலும்

1 13 14 15 16 17 53