மட்டக்களப்பு புதிய பொதுநூலகக்கட்டிடம் மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.
இதை செய்வதற்கு கிழக்குமாகாண சபைக்கும், மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்கும், உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள தடை அல்லது தயக்கம் என்ன?
அப்படி ஏதும் தடைகள் இருந்தால் அதை வெல்ல இந்த அரசியல் வாதிகளால் முடியாமல் இருக்கிறதா?
