வாழைப்பழத்தை உரித்து கொடுத்த ரில்வின் சில்வா…!(வெளிச்சம்:027)

NPP யின் மூத்த உறுப்பினரான ரில்வின் சில்வா அவர்கள் அண்மையில் வெளியிட்ட சில கருத்துகள் குறித்த அழகு குணசீலனின் கடுமையான விமர்சனம் இது. அவரது பேச்சுகள் NPP யின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முரணானது என்கிறார் குணசீலன்.

மேலும்

தமிழர்களிடையே ‘மாற்று அரசியல் சக்தி’ யொன்று மேற்கிளம்ப வேண்டும்.(சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-28)

“தேசிய இனங்களின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து நடப்பதுதான் உண்மையான பண்பு மாற்றமாகும். தேசிய இனங்களின் தனித்துவமான அரசியல் அபிலாசைகளை இடதுசாரித்துவம் எப்போதும் அங்கீகரித்தும் வந்துள்ளது. இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி ஏனைய தென்னிலங்கைக் கட்சிகளைப்போல் வெறுமனே கட்சி அரசியலுக்குள் மூழ்கித் தவறிழைக்குமானால் தமிழ் மக்களின் மனதை அதனால் வெல்ல முடியாது போகும். அது கூறும் முறைமை மாற்றமும் அர்த்தமில்லாமல் ஆகிவிடும்.”

மேலும்

தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்

“கைவசம் இருக்கும் 13 வது திருத்தத்தில் தொடங்கி படிப்படியாக அதிகாரப்பரவலாக்கல் செயன்முறையை மேம்படுத்தி அதன் மூலமாக நீண்டகால அடிப்படையிலான அரசியல் தீர்வை நோக்கி பயணம் செய்வதே தமிழர்களுக்கு இன்று இருக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான ஒரே மார்க்கம். அதை வலியுறுத்துவதில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டம் காட்டினால் கணிசமானளவுக்கு வெளியுலகின் ஆதரவை பெறுவது சாத்தியமாகலாம்.”

மேலும்

ஜனாதிபதியின் உரை : கொட்டை நீக்கப்பட்ட கோது……..!(வெளிச்சம்-25)

“அபிவிருத்தியை அதிகாரப்பகிர்வுக்கு அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பதிலீடாக முன் வைக்கின்ற வழக்கமான போக்கே அநுரகுமார குமார அன் கோ அரசியலிலும் வெளிப்படுகிறது. இது பன்மைத்துவ சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளை அணுகுவதற்கான சரியான, பொருத்தமான அணுகுமுறையல்ல.“

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 56)

“கனகர் கிராமம்” தொடர்நாவலின் இந்தப்பகுதியிலும் நாடாளுமன்ற உறுப்புனர் கனகரட்ணம் அவர்களின் பல சினேகபூர்வ நடவடிக்கைகள் குறித்து பேசும் செங்கதிரோன், அன்றைய அலுவலக மட்ட சிக்கல்கள் குறித்தும் பேசுகிறார்.

மேலும்

எஸ்.பொன்னுத்துரை : இன்னமும் உரத்துப் பேசப்பட வேண்டியவர்

“எஸ்பொ தமிழ் இலக்கியத்தின் எழுத்துப் பெரியார். அவர்பற்றி யார்தான் அறியார்.? தமிழ் இலக்கியப் பரப்பில் அவர் பற்றி அறியாதார் தமிழ் இலக்கியம் அறியாதவரே எனல் தகுமா?
கங்காரு நாட்டில் அவர் உயிர் பிரிந்து இன்றுடன் பத்து வருடங்கள் முழுமை பெறுகின்றன. அதன் சாட்டிலே இக்கட்டுரை நகர்கிறது.”

மேலும்

வடக்கு, கிழக்கு  தமிழ் மக்கள் வாக்களித்த முறையை விளங்கிக்கொள்ளுதல் 

“முன்னைய சிங்கள தலைவர்களைப் போன்று சிங்கள கடும்போக்கு தேசியவாத சக்திகளினதும் மகாசங்கத்தின் பிரிவுகளினதும்  நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தால் ஜனாதிபதி திசாநாயக்கவும் வரலாறு வழங்கிய அரிய வாய்ப்புக்களை தவறவிட்ட தலைவர்களின் பட்டியலில் சேர்ந்து கொள்வார் என்பது நிச்சயம்.”

மேலும்

தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் இனியும் ‘பழைய குருடி கதவைத் திறடி’ தானா? (சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-27)

“’மாற்று அரசியல்’ கோட்பாட்டின் – கருத்தியலின் பயன்பாட்டை இன்று தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள முறைமை மாற்றத்துடன் தமிழ் மக்களும் கைகோர்த்துப் பயணிப்பதினூடாகவே அடைய முடியும். இதனையே தென்னிலங்கைப் பெரும்பான்மைச் சமூகமும் தமிழ் மக்களின் நலன்கள் மீது அக்கறை கொண்டுள்ள பிராந்திய அரசியல் சக்திகளும் சர்வதேச அரசியல் சக்திகளும் எதிர்பார்க்கின்றன.”

மேலும்

வெட்கமில்லை, வெட்கமில்லை, வெட்கம் என்பது இல்லையே….! (வெளிச்சம் :024)

“தென்னிலங்கை அரசியல் போன்று “இலங்கையர்” என்றும், இனவாதம் என்றும், வடக்கு அரசியல் “தமிழர்” என்றும், பிரதேச வாதம் என்றும் பேசுவது மேலாதிக்க அதிகார மனோநிலையின் வெளிப்பாடு. இதற்கு தெற்கு என்றும், வடக்கு என்றும் வேறுபாடில்லை. இந்த ஆதிக்க அரசியல் வரலாற்று பாடமே தொடர்கிறது.”

மேலும்

மட்டக்களப்பின் தேர்தல் முடிவுகளில் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

“மட்டக்களப்பு தமிழ்த் தேசியத்தை உள்ளார்ந்து உணர்ந்து அதனைப் பாதுகாத்தது என்பது மிகவும் மெருகூட்டப்பட்ட ஒரு கதையாடலாகும்.
தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றதென்பது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்திலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலும் காணப்பட்ட பலவீனங்களால் நடந்த ஒன்றாகும். தமிழரசுக் கட்சி 33.8 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருக்கின்றார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லதாகும்.”

மேலும்

1 3 4 5 6 7 30