தமிழ்த்தேசியக்கட்சிகளின் முயற்சிகளும் இணக்க அரசியலில் இதுவரை ஈடுபட்ட கட்சிகளின் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளதாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், இவர்கள் அனைவரும் இணைந்து மாற்று அரசியல் முயற்சியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும் என்கிறார்.
Category: செய்திகள்
வரிவலி….! வளர்ச்சிக்கு வாய்க்கரிசி போட்ட மக்களும், மன்னர்களும்.!(மௌனஉடைவுகள் -64)
இலங்கையின் இன்றைய பொருளாதார வலியானது பல்வேறு அரசாங்கங்களின் தவறான முடிவுகளின் விளைவு என்று கூறும் அழகு குணசீலன், மானியங்களுக்கு பழகிப்போன மக்களுக்கும் இதில் பொறுப்புண்டு என்கிறார்.
இமாலய பிரகடனம் : செயற்பாட்டு, எதிர்ச்செயற்பாட்டு அரசியல்…..! (மௌன உடைவுகள்- 63)
நாடாளுமன்ற அரசியல் மூலமும் ஆயுதப்போராட்டம் மூலமும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் புலம்பெயர் தமிழர் மற்றும் மகாசங்கத்தினரின் முயற்சிகளையும் நிராகரித்துவிடக்கூடாது என்று அழகு குணசீலன் மீண்டும் வலியுறுத்துகிறார்.
சீனக்கப்பல்கள் விவகாரம்; நெருக்குதல்களை தற்போதைக்கு தவிர்க்க இலங்கை சாதுரியமான தீர்மானம்
“சீன ஆய்வுக்கப்பல்களின் வருகையை தற்போதைக்கு தவிர்க்க இலங்கை சாதுரியமான முன்னெடுப்பை செய்துள்ளது. அதேவேளை பரந்த இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமக்கும் உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்ட சீனாவும் பெரும் பிரயத்தனங்களை செய்கிறது.”
பாலன் பிறக்காத பாலஸ்தீனம்…! இது நத்தாரா பெரிய வெள்ளியா? (மௌன உடைவுகள் -62)
“பாலஸ்தீன சிறார்கள் கொல்லப்படும் நாளை பாலன் பிறந்தநாளாக கொண்டாடுவது எப்படி” என்று கேள்வி எழுப்புகிறார் ஒரு பாலஸ்தீன கிறிஸ்தவ தாய். நத்தார் பாலஸ்தீனர்களுக்கு சமாதானத்திற்கான கிறிஸ்துமஸ் அல்ல .உலகம் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பாலஸ்தீன மக்கள் சிலுவையில் அறையப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதனால் இன்றைய நத்தார் பாலஸ்தீனர்களுக்கு”பெரிய வெள்ளி “.
ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் வரவு செலவுத் திட்டம் 2024
அடுத்த ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவு திட்டம், அதில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற உதவாது என்று கூறும் வரதராஜ பெருமாள், தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் பின்னர் சமாளித்துக்கொள்ளலாம் என்பது ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் போலும் என்கிறார்.
புலம்பெயர் மண்ணில் துப்பரவு பணி செய்து தாயகத்தில் பசுமை வளர்ப்பவர்
இலங்கையில் பசுமையாக்கல் முயற்சியில் ஈடுபடும் தரன் ஶ்ரீ ஒரு முன்னாள் விடுதலைப்போராளி. புலம்பெயர் வாசி. இங்கு தமது முயற்சிக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு போதாது என்கிறார். செவ்வி காண்பவர் செய்தியாளர் கருணாகரன்.
யாழ் நூலின் தோற்றம்
சிலப்பதிகாரத்திலும் மட்டக்களப்பு வாவியின் நீரரமகளிரின் பாடுமீன் இசையிலேயும் (பாடும்மீன்) மனதைப் பறிகொடுத்த சுவாமி விபுலானந்தர் பண்டைத் தமிழர்களுடைய இசைப் பாரம்பரியத்தில் பாவனையிலிருந்து அழிந்துபோன ‘யாழ்’ எனும் இசைக் கருவியை ‘யாழ்நூல்’ மூலம் மீளுருவாக்கம் செய்தார்.
நொச்சிமுனை வெள்ளம் சொல்லும் கதை
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் நொச்சிமுனை பகுதியில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு குறித்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உரிய அதிகாரிகள் தவறியமை குறித்து கலாநிதி. சு. சிவரெத்தினம் அவர்கள் ஒரு முறையீட்டை அரங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். உரிய முறைப்பாட்டை முன்னதாகவே தாம் செய்தும் அதிகாரிகள் அதற்கு தாம் பொறுப்பல்ல என்று தட்டிக்கழித்ததாக அவர் கூறுகிறார்.
கலைமகள் ஹிதாயா ரிஷ்வி: தாய்மையில் தமிழ் இலக்கியத்தை நேசித்தவர்
சாய்ந்தமருது தந்த சிறந்த கவிதாயினி கலைமகள் ஹிதாயா அவர்களின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பு.