இலங்கையில் அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்துக்கான இலக்குடன் ஒரு அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை முன்வைத்து சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்னும் அமைப்பு விவாதங்களை நடத்தி வருகின்றது. அதற்கான ஒரு சந்திப்பில் மலையக மக்களின் தேவைகளையும் முன்வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு.
Category: அரசியல்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் நிலை – கழகத்தில் பெண்களின் பாத்திரம்! (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 19))
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது அனுபவம் குறித்துப் பேசிவருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு புளொட் அமைப்பில் பெண்களின் நிலைமை குறித்து பேசுகின்றார்.
“MINORITY TAMIL PEOPLE!” தமிழர் அரசியலில் சொற்சிலம்படி வித்தை! (காலக்கண்ணாடி 65)
தமிழர் அரசியல் வரலாற்றில் சமூக, அரசியல் சொற்களின் பயன்பாடு காலங்காலமாக சர்ச்சைக்குரியவையாகவே இருந்து வந்துள்ளன. இவை அண்மைக்காலத்திலும் சர்ச்சையாகியுள்ளன. ஆனால், இவை அனைத்தும் தர்க்க ரீதியாக அல்லாமல் வெறும் சொற் சிலம்பமாகவே தென்படுவதாக கூறுகிறார் அழகு குணசீலன்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி 21)
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலைமைகள் குறித்து பேசிவருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கையின் முக்கியமான நீதி நிர்வாகத்துறை மற்றும் கல்வி வாய்ப்பு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் அதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து பேசுவதுடன் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிவகைகளையு பரிந்துரைக்கிறார்.
தமிழ் அரசியலின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
சர்வதேச அரசியல் நிலைமைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் ஊடாக இலங்கை தமிழர் வட்டாரத்தில் நடக்கும் நிகழ்வுகளின் போக்கை ஆராய்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி: ஒரு முன்மாதிரி
தமிழ் முற்போக்குக் கூட்டணி தம்மை தேர்தல் ஆணைக்குழுவில் பதிந்துள்ளதை சுட்டிக்காட்டும் செய்தியாளர் கருணாகரன், மக்களுக்கு தேவையானதை அந்தக் கட்சியினர் செய்துள்ளதாக குறிப்பிடுகிறார். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அப்படிச் செயற்படுவதற்கான ஜனநாயகம் இல்லை என்பது அவர் விமர்சனம்.
சொல்லத் துணிந்தேன்-99 (மாற்று அரசியல் என்பது யாது?)
தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் தோல்விப்பாதையிலேயே சென்ற தமிழர் அரசியலுக்கு மாற்றாக ஒரு அரசியல் முயற்சியை முன்வைக்கிறார் கோபாலகிருஷ்ணன். அரசியல்வாதிகளின் சுயலாபங்களுக்கு அல்லாமல் மக்களின் சமூக, பொருளாதார நலனை முன்னிறுத்தியதாக அது அமைய வேண்டும் என்கிறார் அவர்.
உணவுப் பிரச்சினையை தீர்க்க நிதானம் தேவை
இலங்கை மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகள் இன்று மிக முக்கிய பிரச்சினையாக உணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன். அவற்றை எதிர்கொள்ள அரசாங்கங்கள் மிகுந்த நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது அவரது கருத்து.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 20)
வீழ்ச்சி நிலையில் உள்ள இலங்கையின் பொருளாதாரம் குறித்த தனது தொடரில் கடந்த இரு வாரங்களாக அடுத்த வரவு செலவுத்திட்டம் குறித்து பேசிவருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள், இந்த வாரம் அதைப்பற்றி மேலும் ஆழமாக அலசுகிறார், பொறியில் அகப்பட்ட நிலையில் இலங்கை பொருளாதாரம் இருப்பதை அது காண்பிப்பதாக அவர் கூறுகிறார்.
புளொட் கட்டுப்பாட்டுக்குழுவினுள் முளைவிட்ட குழுவாதமும் அதிகாரத்தின் மீதான மோகமும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் பயணம்! – பாகம் 17)
புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து எழுதி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு புளொட்டின் கட்டுப்பாட்டுக்குழுவுக்குள் குழுவாதம் முளைவிடத்தொடங்கியது பற்றி பேசுகின்றார்.
