வடக்கிலும் அழிக்கப்படும் கண்டல் தாவர காடுகள்

கிழக்கிலே, குறிப்பாக படுவான்கரையில் கண்டல் தாவரக் காடுகள் அழிக்கப்படுவது குறித்த படுவான் பாலகனின் ஒரு குறிப்பை அண்மையில் பார்த்தோம். இது அதேபோன்ற முல்லைத்தீவு மாவட்ட நிலைமை. ஒட்டுமொத்த சமூகப் பொறுப்பின்மையே இதற்கு காரணம் என்கிறார் செய்தியாளர் கருணாகரன். காணி அதிகாரம் பற்றிப் பேசும் நாம் அது கிடைக்க முன்னரேயே காணிகளை அழித்துவிடுவோம் என்பது அவரது கவலை.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 16)

இலங்கையின் விவசாயப் பொருளாதாரம் குறித்து கடந்த சில பகுதிகளில் ஆராய்ந்து வருகின்ற பொருளாதார ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை அடுத்து, இந்தப் பகுதியில் முக்கிய உணவுப் பொருட்களுக்கான உற்பத்தி நிலைமைகள் குறித்து அலசுகிறார். மிகவும் அத்தியாவசியமான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருந்தும் அதனை இலங்கை உற்பத்தித்திறனுடன் செய்யவில்லை என்கிறார் அவர்.

மேலும்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: நரியும் திராட்சையும் (காலக்கண்ணாடி 61)

அதிகாரமற்ற அமைப்பு என்று முன்னதாக தமிழ் தேசிய முக்கிய கட்சியால் புறக்கணிக்கப்பட்ட மாகாணசபைக்கான தேர்தல் வந்தால், அதில் கிழக்கு மாகாண நிலைமை எப்படி இருக்கும் என்று ஆராய்கிறார் அழகு குணசீலன். ஆனாலும் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எமக்கென்ன என்பதே மக்கள் தீர்ப்போ?

மேலும்

மட்டு கச்சேரி துப்பாக்கி கொள்ளையும் – தராக்கி சிவராமின் அரசியல் நுழைவும் – இன்று ஜனநாயகம் பேசுவோரின் கொலைமுகங்களும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! பாகம் 14)

தனது போராட்ட கால நினைவுகளை மீட்டி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு புளொட் அமைப்பின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்த சில தவறுகள் குறித்துப் பேசுகின்றார்.

மேலும்

‘அப்புக்காத்து’ அரசியல் (சொல்லத்துணிந்தேன் – 96)

வெற்றிகரமாக மக்களால் முன்னெடுக்கப்பட்ட சில போராட்டங்களைக்கூட சட்டத்தரணிகளால் வழிநடத்தப்பட்ட தமிழரசுக்கட்சி எப்படி தோல்வியில் முடியச் செய்தது என்பது குறித்து விபரங்களை உதாரணங்களுடன் விளக்குகிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

அரசாங்கத்தின் திட்டம் சரியானதா? விவசாயிகளின் போராட்டம் நியாயமானதா?

இயற்கை உரமே மனித, தாவர நலனுக்கு உகந்தது என்று தெரிந்திருந்தும், அதனை உடனடியாக முன்னெடுக்க விவசாயிகள் தயங்குவது ஏன் என்பதற்கான காரணங்களை ஆராய்கிறார் படுவான் பாலகன். பெருமளவு விவசாய நிலங்களைக் கொண்ட படுவான்கரை மக்கள் இதனால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும், அவற்றை தீர்ப்பதற்கான வழிவகை குறித்தும் அவர் விளக்க முயல்கிறார்.

மேலும்

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ : இப்போது ஏன்?

பொதுமக்களின் அதிருப்திக்கு காரணமான பல நடவடிக்கைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்த அரசாங்கம், அதே பாணியில் மீண்டும் பேரினவாதப் போக்கில் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற திட்டத்தை அமல்படுத்த முயல்வதாக குற்றஞ்சாட்டும் ஆய்வாளர் வி.சிவலிங்கம், நாடு ராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கிறதா என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும்

தமிழர் தரப்பு மாற்று வழியில் சிந்திக்க வேண்டும்

காலங்காலமாக பல முயற்சிகள் செய்தாலும் தீராத பிரச்சினைக்கு மாற்று வழியிலான சிந்தனையும், மாற்றுத்தலைமையும் தமிழருக்கு அவசியம் என்கிறார் பத்தியாளர். தூரத்துத்தண்ணி ஆபத்துக்கு உதவாது என்பது அவர் கருத்து.

மேலும்

நாட்டின் நலன் மக்கள் கையில்

நாட்டை பொருளாதாரப் பிரச்சினையில் இருந்தும் தொற்றுநோய் பிரச்சினையில் இருந்தும் மீட்பது மக்களின் பொறுப்பு என்கிறார் கருணாகரன். அரசும் மக்களும் கூட்டாக இதனைச் சாதிக்க முயலவேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. மக்களின் மனோ பலத்திலேயே அனைத்தும் தங்கியிருக்கிறது என்கிறார் அவர்.

மேலும்

மலையக தோட்டங்களை தொழிலாளர்களுக்கு வழங்குங்கள் (எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 15))

இலங்கை பொருளாதாரத்தின் முக்கிய அம்சமான தேயிலை பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்கும் நிலையில், அவற்றில் மாற்றுப் பயிர்களை செய்யும் நோக்கில் அவற்றை மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என்று கூறுகிறார் பொருளாதார ஆய்வாளர் அ.வரதராஜா பெருமாள்.

மேலும்

1 66 67 68 69 70 101