பல விதமான அரசியற் தவறுகளின் கூட்டு விளைவாகவே தையிட்டி விகாரைப் பிரச்சினை உள்ளது. தையிட்டிப் பிரச்சினை மட்டுமல்ல, அதைப்போலுள்ள ஏனைய பல பிரச்சினைகளும் உள்ளன. இவற்றைத் தீர்ப்பதற்கு அரசியல் வழிமுறையே சரியானது. அரசியல் உபாயங்கள் பெருமளவுக்குக் கை கொடுக்காது. ஏன் அரசியல் உபாயங்கள் கைகொடுக்காது என்றால், எதன்பொருட்டும் அரசாங்கம் மக்களுடன் சூதாட முடியாது. சூதாடக் கூடாது.
Category: அரசியல்
தையிட்டி: அபகரிப்புக்கு அரச அங்கீகாரம்….!(வெளிச்சம்:044)
“நல்லாட்சியில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எதிர்ப்பு இன்றி அதாவது மறைமுக ஆதரவுடன் இடம்பெற்ற இந்த திட்டத்தில் கஜேந்திரகுமார் அநுர அரசுக்கு மட்டும் அசௌகரியத்தை ஏற்படுத்தவில்லை . தமிழ்த்தேசிய கூட்டமைப்பு/தமிழரசுக்கட்சிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். “
பாரதியை இழந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகை உலகம்
பாரதியின் மறைவு எம்மிடமிருந்து பண்பும் ஆற்றலும் நிறைந்த ஒரு சிறந்த பத்திரிகையாளனை அபகரித்துச் சென்று விட்டது.
பாரதி ஒரு சிறந்த பத்திரிகையாளன் என்பதற்கு அப்பால் ஒரு சிறந்த மனிதநேயன். அரசியலைப் போன்றே போட்டியும் சூழ்ச்சியும் நிறைந்ததாக மாறிவிட்ட ஊடகத்துறையில் பாரதியைப் போன்று முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சகலருடனும் இணக்கப் போக்குடன் ஊடாட்டங்களைச் செய்யும் ஒரு பத்திரிகையாளனை இனிமேல் காணமுடியுமா என்று மனம் ஏங்குகிறது. மற்றவர்களுக்கு தீங்கு செய்வதை கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்காத ஒரு பிறவி பாரதி.
புன்சிரிப்பு மாறா பாரதி..
இலங்கையின் பத்திரிகை உலகில் கணிசமாக அறியப்பட்ட பத்திரிகையாளர் பாரதி அண்மையில் காலமானார். இனிய சகாவாக, மனம்விட்டுப் பேசக்கூடிய நண்பனாக எனக்கிருந்த பாரதியின் மறைவு என்னையும் தனிப்பட்ட வகையில் பாதித்த ஒன்று. அவருக்கு அரங்கத்தின் சார்பிலும் மனமார்ந்த அஞ்சலி. இது பாரதியின் மறைவு குறித்த செய்தியாளர் கருணாகரனின் அஞ்சலிக் குறிப்பு
அன்புடன்
சீவகன்
புதிய அரசியலமைப்பு : இப்போதைக்கு இல்லையா? எப்போதுமே இல்லையா….? (வெளிச்சம்:043)
“போகிற போக்கில் மக்கள் வாக்கெடுப்புடன் கூடிய புதிய அரசியல் அமைப்பு என்பது இப்போது மட்டும் அல்ல எப்போதும் சாத்தியமில்லை என்ற சந்தேகமே சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் வலுக்கிறது.”
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான படிப்பினைகள்
“வழமையாக அரசியல் தலைவர்களின் இறுதிச் சடங்குகள் பிளவுபட்டு நிற்கும் அவர்களின் கட்சிகளின் அணிகள் வேறுபாடுகளை மறந்து ஐக்கியப்பட்டுச் செயற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதே இயல்பாகும். ஆனால், ஒரு அரசியல் தலைவரின் இறுதிச்சடங்கு எவ்வாறு நடத்தப்படக்கூடாது என்பதற்கு கடந்த வாரம் மாவிட்டபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் உதாரணமாக அமைந்து விட்டது கவலைக் குரியதாகும்.”
தலைவர்களை இழந்த தமிழ்த்தேசிய அரசியல்!
“எப்போதும் மக்கள் அரசியலில் செயற்பட்டால் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இயங்கக் கூடிய ஒரு வெளியும் அரங்கும் அழியாது இருக்கும். அதுவே அரசியற் பலமாகும். தமிழ்த்தேசியத் தலைமையை உருவாக்க வேண்டுமெனில் இந்த உண்மையிலிருந்து படித்தால் நல்லது. அதாவது தேர்தலுக்கு அப்பாலும் அரசியல் உண்டு. அரசியற் பணிகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.”
அகிம்சாவின் குரல் அநுரவின் காதில் விழுகிறதா…..? (வெளிச்சம்: 042)
“வழக்கின் மூன்று முக்கிய கொலை சந்தேகநபர்களை விடுதலைசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் சிபார்சு செய்திருப்பது அநுர ஆட்சியிலும் நீதியின் அர்த்தம் அதற்கு முன் “அ” கரத்தை போடுவதுதானா? என்ற கேள்வியை எழுப்புகிறது.”
யாழ்ப்பாணம்: பிழையான கேள்வியும் சரியான பதிலும்….! (வெளிச்சம்: 041)
“ஒன்றுக்கு ஒன்று முன்னுக்கு பின் முரணான கேள்விகளையும், பதில்களையும் வழங்கி “பராக்கு காட்டும்” அரசியலை செய்கிறது என்.பி.பி. இதில் இருந்து வடக்கு கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் சில விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை கவனத்தில் எடுத்து வடக்கு, கிழக்கு மற்றைய மாவட்டங்களில் மக்களும், சிவில் அமைப்புக்களும், அதிகாரிகளும் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புக்களில் அவரின் அரசியல் தேவைக்கு பதிலளிப்பதை தவிர்த்து அந்தந்ந மாவட்டங்களின் மக்களின், சமூக பொருளாதார அரசியல் தேவைகளை முதன்மை படுத்தி கேள்வி எழுப்ப வேண்டும். ஜனாதிபதியை பதிலளிக்க தூண்ட வேண்டும்.”
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின் இடம்
“மகிந்தவின் விசுவாசிகள் போர் வெற்றிக்காக அவர் வரலாற்றில் நினைவு கூரப்படவேண்டியவர் என்று கொண்டாடலாம். மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் தேசியவாத சக்திகளின் நம்பிக்கைக்குரியவராக அவர் விளங்கக்கூடும். ஆனால் அவர் தவறான ஆட்சிமுறையின் ஒரு சின்னமாகவே நினைவு கூரப்படுவார் என்பதே உண்மை.”
