‘தமிழரசு கட்சியின் சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவம் தமிழ் மக்களை இரக்கமற்ற முறையில் அலட்சியம் செய்தமை அரசியல் மாற்று ஒன்று இல்லாமல் துடைத்தெறியக்கூடிய சிறிய ஒரு தவறு அல்ல. மதசார்பற்ற அரசியலை மதத்தீவிரவாதம் முந்திச்செல்வதற்கு முன்னதாக மிகவும் தீர்க்கமானதும் தெளிவான சிந்தனையுடன் கூடியதுமான அரசியல் தீர்மானம் ஒன்றை அது அவசரமாக வேண்டிநிற்கிறது.’
Category: அரசியல்
புளியந்தீவில் சிலை உடைப்பு….! இனமத நல்லிணக்கத்திற்கு எதிரான வன்முறை….!(மௌன உடைவுகள்-83)
மட்டக்களப்பில் கடந்த காலத்தில் முக்கிய பிரமுகர்களின் சிலைகளை உடைத்தவர்கள் இன, மத நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களே என்கிறார் அழகு குணசீலன்
ஈஸ்டர் படுகொலை நூலும் தமிழ் தேசியவாதமும்
சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலை குறித்த நூல் பற்றிய ராகவனின் பார்வை இது. தமிழ் தேசியவாத சிந்தனையிலிருந்து கருவாகிய நூலே இது என்கிறார் அவர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் சிலர் மீண்டும் அரசியலுக்குள் மூக்கை நுழைத்திருப்பது பற்றியும் சில சிறப்பு சலுகைகளை அனுபவிப்பவிக்கும் அவர்கள் அதற்கான தார்மீக பொறுப்பற்று செயற்படிவது குறித்தும் பேசும் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம், அதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதகங்களையும் மட்டிடுகிறார்.
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
“இலங்கைத் தமிழ்ச் சமூகம் சரியான அரசியல் செல்நெறியில் தடம் பதிக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசிய அரசியலில் கருத்தியல் ரீதியாகப் -கோட்பாட்டு ரீதியாகப் ‘புலி நீக்கம்’ அவசியமாகும். அப்போதுதான் தமிழர் அரசியலில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு” என்கிறார் த. கோபாலகிருஸ்ணன்.
கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்!
சுதந்திர இலங்கையின் முதல் அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றான கல்லோயா அணைக்கட்டு மற்றும் அபிவிருத்தித்திட்டம், அதன் 75 ஆவது ஆண்டை எட்டியுள்ள நிலையில் அது பற்றிய ஒரு பார்வை.
“கனகர் கிராமம்”.‘அரங்கம்’ தொடர் நாவல் (அங்கம் – 29)
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 29.
இமிழ் ; கதை மலர்
அண்மையில் பிரான்ஸில் பாரிஸ் நகரில் இலக்கியச்சந்திப்பு நிகழ்வில் வெளியிடப்பட்ட ஈழ, புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறு கதைகள் அடங்கிய”இமிழ்” தொகுப்பு பற்றிய அகரனின் பார்வை இது.
உச்சி முகர்ந்து
மன்னாரைச் சேர்ந்த ஜெ. மதிவளனின் “உள்ளச்சிதறல்கள்” என்ற கவிதை நூலுக்கு கருணாகரன் எழுதிய முன்னுரை இது. நமது சூழலில் ஒரு கவிஞரின் வளர்ச்சிப்போக்கு எப்படி அமையும் அதில் தூண்டலை ஏற்படுத்துபவை எவை என்று விபரிக்கிறார்.
ஈஸ்டர் படுகொலை….!இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்: ஒரு பார்வை….! (மௌன உடைவுகள்-82)
அண்மையில் வெளியான சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலைகள் பற்றிய நூல் பலதரப்பட்ட வாக்குவாதங்களுக்கு வழி செய்துள்ளது. இது குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.