தமிழ் மக்களுக்கான பொதுவேட்பாளர் விடயம் பலன் தராது என்கிறது இலங்கை தமிழர் நலன் விரும்பும் அமைப்பு

தமிழ்‬‭ பொது‬‭வேட்பாளர்‬‭ விடயத்தில்‬‭ “இலங்கைவாழ்‬‭ தமிழர்‬‭ நலன்‬‭விரும்பிகள்‬‭ அமைப்பு‬,‭ (WTSL)‬‭” எனும் புலம்பெயர் தமிழர் அமைப்பு தமது‬‭ உலகளாவிய‬‭ ஒருங்கிணைப்பாளர்களிடையே‬‭ இடம்பெற்ற‬‭ தீவிர‬‭ கருத்தாடலின்‬
‭பின்‬‭ வெளியிட்ட‬‭ ஊடக‬‭ அறிக்கை இது.‬

‭அவுஸ்திரேலியாவில் இருந்து அதன் சர்வதேச இணைப்பாளர் ராஐ்‬‭சிவநாதன், இதனை வெளியிட்டுள்ளார்.

மேலும்

சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும்

மரணத்துக்குப் பிறகு சம்மந்தன் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மதிப்பை அவதானிக்கும்போது தமிழ்த்தேசிய அரசியலில் பின்பற்றப் பட்டுவரும் துரோகி – தியாகி என்ற அடையாளப்படுத்தலின் விசித்திரம் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. முன்னர் துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டு, எதிர்நிலையில் நிறுத்தப்பட்டவர்கள் பின்னர் ஏற்பு நிலைக்கு உயர்த்தப்படும் விநோத நிகழ்வு நிகழ்வதுண்டு. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரம், ஊடகவியலாளர் தராகி சிவராம் போல. அவ்வாறான ஒருவராகச்  சம்மந்தன் அவர்கள் இன்று பெருந்தலைவராகப் போற்றப்படுகிறார்.  ஊடகங்களும் தமிழ் அரசியற் கட்சிகளும் அப்படித்தான் விழிக்கின்றன.

மேலும்

‘தமிழர்கள் தாமே தமக்குள் தீர்மானங்களை எடுக்க வேண்டும்’ (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-12)

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் நிபந்தனைகளை முன்வைத்துப் பேரம் பேசும் விடயம் வெற்றியளிக்கப் போவதுமில்லை. ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ வாய்ப்பாடும் எந்த அற்புதத்தையும் நிகழ்த்திவிடப் போவதுமில்லை. இந்த அரசியல் யதார்த்தத்தின் ஊடாகத்தான் தமிழர்கள் பயணிக்க முடியுமே தவிர அதனை விடுத்துப் பெரிதாகப் பேசுவது எல்லாமே முடிவில் ‘ஏட்டுச் சுரக்காய்’கள்தான்.

மேலும்

பிரித்தானிய நியூஹாம் முன்னாள் நகரபிதா, காலம் சென்ற போல் சத்தியநேசன்

லண்டன் தமிழர்கள் மத்தியில் தனது பழகும் பாங்கால் பிரபலமானவர் நியூஹாம் கவுன்சிலின் முன்னாள் நகர பிதா போல் சத்தியநேசன். இவர் அண்மையில் காலமானார். அவர் பற்றிய ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் அஞ்சலிக்குறிப்பு இது.

மேலும்

இலங்கைத் தமிழர் அரசியலில் சம்பந்தனின் வகிபாகம்

இலங்கையின் மூத்த தமிழ் தலைவர்களில் ஒருவரான இரா. சம்பந்தனின் அரசியல் வாழ்வு குறித்த மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் அவர்களின் குறிப்புகள் இவை.

மேலும்

அரசியல் வியாபாரம்: வெறும் போத்தலுக்கு புது லேபல்…..! (மௌன உடைவுகள்-95)

தமிழ் தேசியக்கட்சிகள் பிரிந்தும் கூடியும் பெயர்களை புதிது புதிதாக மாற்றிக்கொள்கின்றனவே தவிர அவற்றினுள் உள்ளடக்கம் வெறுமையாகவே இருக்கிறது என்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 40)

“கனகர் கிராம” தொடர் நாவலில் இந்தப்பகுதியில் செங்கதிரோன் அவர்கள், 1977 தேர்தல், அதேவருடத்தில் நடந்த இனக்கலவரம் மற்றும் தாமதமாக நடந்த பொத்துவில் தொகுதி தேர்தல் ஆகியவை குறித்து பேசுகிறார்.

மேலும்

சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும். (பகுதி 4)

மட்டக்களப்பு உப்பேரி ஒரு வலைப்பின்னல் போல பிராந்தியத்தை இணைத்து, அதன் துறைகள் மூலம் ஏற்படுத்திய இணைப்பு அந்த புலம் முழுவதும் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாக ஏற்படுத்திய தாக்கங்களை இந்தப்பகுதியில் ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

இரா.சம்பந்தர் : தமிழர் தேசியத்துக்கு   நிகராக சிங்கள தேசியத்தை நேசித்தவர்…! (மௌன உடைவுகள்- 95)

தமிழ் அரசுக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார். இந்த நேரத்தில் இலங்கை அரசியலில் அவர் பங்கு பற்றிய அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும், சில பத்தாண்டுகள் பகையும். (பகுதி:3.)

குடி முறைமையின் வருகை, சீர்பாதர் உருவாக்கம், பட்டாணியர் வருகை, பட்டாணியர் – முற்குகர் தொடர்பு ஆகியவை குறித்து இந்த பகுதியில் பேசுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

1 10 11 12 13 14 101