“வடக்கு கிழக்கில் உள்ளூர்மட்ட அதிகாரங்களை (இது மாகாண சபைக்கும் பொருந்தும்) எக்காரணம் கொண்டும் அது எத்தகைய முற்போக்கு முகத்தைக் கொண்டிருந்தாலும்கூட ஒரு தென்னிலங்கைச் சிங்களப் பெரும்பான்மைக் கட்சியிடம் (தேசிய மக்கள் சக்தியிடம்) ஒப்படைப்பதற்கு வடக்கு கிழக்குத் தமிழர்கள் முழுமையாக விரும்பவில்லை அல்லது அதற்குத் தயாரில்லையென்பதை உணர்வு பூர்வமாக எடுத்துச் சொல்வதற்கு வேறு மாற்றுவழியில்லாமல்தான் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அவை கடந்த காலங்களில் எத்தனை அரசியல் தெப்பிராட்டியங்களைப் பண்ணியிருந்தாலும்கூட அவற்றைப் பொருட்படுத்தாமல் பெரும்பான்மையாக வாக்களித்திருக்கிறார்கள்.”
- Home
- தொடர்கள்
Category: தொடர்கள்
அம்ஷிகா (தற்)கொலை : பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியும்…..!(வெளிச்சம்: 058)
“பாராளுமன்றத்தில் மகளிர் விவகார அமைச்சர் , அம்ஷிகா மரணம் தொடர்பாக அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை. இதே குறைபாட்டை பிரதமர் ஹருணி, பிரதம கொறடா அமைச்சர் பிமல் அளித்த பதில்களும் கொண்டுள்ளன. அவர்கள் அளித்த வரையறுக்கப்பட்ட பதில்கள் காரணமாக, அரசாங்க தரப்பை விடவும் சம்பவத்தை விபரமாக அறிந்திருந்த எதிர்க்கட்சியினர் மேலும் விபரங்களை அறிய முற்பட்டனர். ஆனால் அகப்பை அரசாங்க தரப்பின் கைகளில் இருந்தபோதும் பானையில் இருக்கவில்லை. இது சமூகத்தின் தோல்வியானால் இவர்களை தெரிவு செய்ததால் சமூகம் தோல்வியடைந்துள்ளது என்று சொல்லலாமா?”
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் கதையும் நிலையும்
‘நீண்ட கால நோக்கோடு (அரசியல் அழுத்தங்களின்றி) சரியான வழிகாட்டலில் திட்டங்களுக்கான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். ஒருங்கிணைப்புக்குழுவில் இது தொடர்பாகச் சரியான தீர்மானம் எடுக்கப்படுவது அவசியமாகும். இனியாவது கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு நல்லதொரு விடிவு கிட்டட்டும்.‘
உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் கூறும் செய்தி
“தங்களுக்கு தற்போது கிடைத்த வெற்றியை (தாங்கள் பங்கேற்காத கடந்தகாலப் போராட்டங்களை வெறுமனே நினைவு கூர்ந்துகொண்டு உணர்ச்சிமயமான கற்பிதங்களுடன் கூடிய கற்பனாவாத சுலோகங்களை எழுப்பும் (தோல்விகண்ட) அரசியல்பாதைக்கு தமிழ் மக்களிடமிருந்து கிடைத்த அங்கீகாரமாக தமிழ்க்கட்சிகள் நம்பினால் மீண்டும் தவறிழைப்பதாகவே அமையும்.”
வெளிகள் ஆயிரம் கோணங்கள் பல்லாயிரம்
தேவனின் வார்த்தைகளை விட சாத்தானின் வார்த்தைகளே இங்கே அதிகம் ஈர்ப்புடையவை. இல்லையெனில், தம்மைச் சூழ்ந்திருக்கும் நற்கனிகளை விளைப்போரையெல்லாம் புறமொதுக்கித் தள்ளிவிட்டு, காயடிப்போரைத் தோளில் தூக்கிச் சுமக்குமா ஈழத் தமிழ்ச் சமூகம்? ஈழ விடுதலைப் போராட்டத்திலும் சமூக விடுதலைப் போராட்டத்திலும் ஏன் இலக்கியத்திலும் கூட அத்தகைய நல்ல வித்துகளும் நல்விளைவுக்கான முயற்சிகளும் இருந்தன; இருக்கின்றன. அவற்றை ஏற்று முன்கொண்டு செல்வதை விட, அவற்றுக்கு ஆதரவளித்துப் பலமாக்குவதை விட, எதிர்ச்சக்திகளின் மீது மோகம் கொண்டதே விதியானது. என்பதால்தான் எத்திசையின் பயனுறு வார்த்தைகளும் வெறும் சருகாகிப் புறமொதுங்கின. நடேசன் இங்கே முன்வைத்துப் பேசும் பிரதிகளிற் பலவும் தேவ வாக்கைத் தம்முள் கொண்டமைந்தவை. ஆயினும் தமிழ்ப் பெருந்திரளோ அவற்றைத் ‘தொட்டாற் சுடும்’என்று கருதி முகச்சுழிப்போடு விலக்கம் செய்து வருகிறது. சிறிய வட்டங்களே அவற்றைப் பேசியும் வாதிட்டும் முன்னெடுத்துச் செல்கின்றன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டமும்
“பயங்கரவாதத்தைக் கையாளுவதற்கு கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் வேறு பல சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன என்று தாங்கள் நெடுகவும் கூறிவந்ததை ஜே.வி.பி. தலைவர்கள் மறந்துவிட்டார்கள் போன்று தோன்றுகிறது.”
மட்டக்களப்பு: இரு பேரலைகளை தாண்டிய படகு…..!(வெளிச்சம்:057)
“கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, முஸ்லீம் காங்கிரஸ் என்பன மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த நிலையில் இரண்டு பெரும், குறும் தேசிய பேரலைகளையும் தாண்டி படகு முன்னேறியிருக்கிறது. அதுவும் பிள்ளையான் கைது செய்யப்பட்டு பல்வேறு கதைகளும், சந்தேகங்களும் அரசியல் காரணங்களுக்காக பரப்பப்படுகின்ற இன்றைய சூழலில் பிள்ளையான் உள்ளே இருந்தால் என்ன? வெளியே இருந்தால் என்ன அவர் எங்கள் மனச்சிறையில் இருக்கிறார் என்பதாக இந்த வாக்குப்பதிவு அதிகரித்திருக்கிறது.”
உள்ளூராட்சித் தேர்தலில் தொங்கும் உறுப்பினர்கள். Over Hang members.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொங்கு நிலை உறுப்பினர்கள் என்றால் என்ன?
நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்களிலும் பார்க்க தெரிவில் அதிகரிப்பது எப்படி?
உள்ளூராட்சி…
“தேர்தல் வேட்பாளர்களால் வழங்கப்படும் வாக்குறுதிகள் உள்ளூராட்சி முறையை சரியாக புரிந்துகொண்டு வழங்கப்பட வேண்டும்.
இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் அந்த வட்டாரத்திற்கு தான்தான் சகலதும் என நினைப்பதும், தன்னால் எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்று வேட்பாளர்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பது வேடிக்கையாக இருக்கின்றது.”
உயிரின் கண்ணீர்த்துளி உலகின் இரத்தத் துளி
“1980 களின் முற்பகுதியில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் மொழிபெயர்த்த ‘பலஸ்தீனக் கவிதைகள்‘ தமிழ்ப்பரப்பில் உண்டாக்கியதையும் விடக் கூடிய கனத்தை, வலியை, வலிமையை இந்த மரித்தோர் பாடல்களில் காணலாம். இங்கே உள்ளவை ஒவ்வொன்றும் நம்முடைய உயிரில் அதிர்வை உண்டாக்குவன. அத்தனையும் சாட்சியமானவை.ஒவ்வொருவருடைய இறுதிக்கணச் சாட்சியங்கள். நிகழ் உண்மைகள். பலஸ்தீனக் கவிதைகள் அன்றைய நிலையில், போராட்டத்துக்கான பெரும் பங்களிப்பென்றால், இது இன்றைய சூழலில், மக்களின் மீதான அழிவுத் தாக்குதலில் பெரும் சான்றுத்துணையாகும்.”