“வைரமுத்து தன்னுடைய வெவ்வேறு அரசியல் தொடர்புகளாலும் சினிமாவின் மூலமாகக் கிடைத்த பிரபலத்தினாலும் விருதுகளைக் குறிவைத்து வேட்டையாடும் ஒரு தாகமுடைய விலங்கு. அதற்குரிய நுணுக்கங்களையும் கீழ்மையான தந்திரோபாயங்களையும் செய்யும் மனிதர். தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய கீழ்மைச் செயல்களின் மூலமாக அவர் நேசிப்பதாகச் சொல்லும் தமிழையும் அதனுடைய வளமான இலக்கியச் செழிப்பையும் அவமதிப்புச் செய்துள்ளார். மட்டுமல்ல, தன்னையும் தன்னுடைய எழுத்துகளையும் ஞானபீடம் வரையில் முன்னிறுத்தியதன் மூலமாக தமிழின் செழிப்பான இலக்கிய வளத்தை வெளிச்சமூத்தின் முன் மறைக்க முற்பட்டிருக்கிறார். வைரமுத்துவை ஆதரிப்போருக்கும் வைரமுத்துவை விருதுக்காகத் தெரிவு செய்தோரையும் இந்தப் பழி சேரும்.”
Category: சிறுகதைகள்
“ஜல்லிக்கட்டு—கிளர்ச்சி எனும் சூழ்ச்சி”. -தேன்வதையின் சுவையும் கிறக்கமும் தரும் ஓர் நூல்
“இந்தக் கட்டுரை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை விமர்சிக்கிறது. அதேசமயம் உணர்ச்சி, எழுச்சியை முழுவதுமாக மறுக்கவில்லை.
கூட்டுத் தீர்மானம் மற்றும் கூட்டு தவறான முயற்சி இரண்டிற்கும் இடையிலான எல்லையை ஆராய்கிறது.
தமிழ் சமூகத்தில் பரவலாக கொண்டாடப்பட்ட ஒரு நிகழ்வை விமர்சனமாக இது படிக்கிறது.
இந்நூல் சர்ச்சையையும் விவாதத்தையும் நிச்சயம் உருவாக்கும். ஒரு ஆய்வின் சிறப்பே அது சர்ச்சையையும் விவாதத்தையும் உருவாக்கும் பண்புதான்.”
கவிஞர் திருமகள் குளோரியா ரூபா அன்ரனின் “பாரதியும் நானும்” கவிதைத் தொகுப்பு— ஒரு பார்வை
“ஆக்க இலக்கியத்தில் அதன் கனதி பிரதானமான ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. கனதி என்பது ஒரு கவிதையின் சொல்லமைப்பிலும், அது வெளிப்படுத்தும் பொருளிலும் உணர்விலும் ஆழத்திலும் உள்ள அடர்த்தியைக் குறிக்கும். இது கவிதையின் எடையை (Weight)அல்ல, மாறாக அதன் உணர்வுடனான கருத்தாழத்தின் செறிவைக் குறிப்பதாகும். ஒரு சிறந்த கவிதை என்பது “சொற்பமான சொற்களில் சொர்க்கத்தைக் காட்டுவது” என்பார்கள். அந்தச் செறிவே கனதி எனப்படுகிறது. இதன் முக்கிய கூறகளாக சொற்செறிவு(Verbal Density), பொருளாழம்(Semantic Depth), படிமம், குறியீடு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய பண்புகளைக் கவிஞர் ரூபாவின் ஒரு சில கவிதைகளைத் தவிர ஏனையவற்றில் மிகத் தெளிவாக அவதானிக்கலாம். வீரம், நறுமுகை, புரட்சி விதை, விழித்தெழு, அந்தாதிக் கவிதைகளிலும், கடும் புனல், உச்சிமீது வானிறங்கினும், சுவாசக் காற்றே, அச்சமில்லை ஆகிய கவிதைகளில் அதன் கனதியை மிகத் தெளிவாகக் காணலாம்.”
’51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை’ நூல் அறிமுகம்-பகிர்வுகள்(பகிர்வு – 08)
“பாலமுனை பாறூக்கின் ’51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை’ நூலின் வெளியீடு 23.11.2025 அன்று அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய உரை.”
ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியம் -பகிர்வுகள்(பகிர்வு – 07)
ஈழத்தமிழ்க் கலைஞர்களை நாடளவிய ரீதியிலே ஒன்றிணைக்கும் வலையமைப்பைக் கொண்டு செயற்பட்டு வருவது இவ்வமைப்பின் குறிப்பிடத்தக்க பரிமாணமாகும்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகம் பிராந்திய செயற்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழு பிராந்திய ரீதியாகத் தனித்தனியே மேடைக்கு அழைக்கப்பெற்று ஒவ்வொரு பிராந்தியக் குழுவுக்கும் பணிகளைப் பாராட்டும் சின்னங்கள் பிரதமர் விருந்தினர் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களால் வழங்கி வைக்கப்பெற்றன.
நீலாவணனின் காவியங்கள்: (பகிர்வுகள்- பகிர்வு6)
தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையும் தமிழ்ச்சங்கமும் இணைந்து
23.10.2025 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட
கேட்போர் கூடத்தில் மொழித்துறைத் தலைவர் (தெ.கி.ப) கலாநிதி அமரசிறி
விக்கிரமரத்ன அவர்களின் தலைமையிலும் கலை கலாசார பீடாதிபதி (தெ.கி.ப) பேராசிரியர் எம்.எம்.எம். பாஸில் அவர்களின் முன்னிலையிலும்
நடாத்திய ‘இலக்கியவெளி’ கலை இலக்கிய அரசியல் பண்பாட்டு இதழின்
நீலாவணன் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் ‘நீலாவணனின் காவியங்கள்’
எனும் தலைப்பில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய உரை.
மண்டூர் அசோகாவின் ‘எழுதப்படாத கவிதைகள்’ சிறுகதைத் தொகுப்பு: ஒரு பார்வை
இந்தத் தொகுப்பில் கோர்த்தெடுக்கப்பட்டிருக்கும் பத்து சிறுகதைகளில் ஐந்து சிறுவர்களின் கல்வி, அவர்களின் பாசத்துக்கான ஏக்கம், தவிப்பு, ஆசா பாசங்கள், சிறுவர் கல்வி, உரிமை மீறல்கள் ஆகியன உணர்வு பூர்வமாகப் பேசப்படுகின்றன. மூன்று சிறுகதைகளில் பெண்களின் திருமணத்துக்குப் பின்னரான பிறழ்வான பாலியல் நடத்தை, மனவெழுச்சிகள், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புகள், உறவுச் சிக்கல்கள் என்பவை உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிறுகதை போர்க்கால இழப்புக்களையும் அவல வாழ்வினையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் ஆழமாக விபரிக்கின்றது. ‘வேட்டை’ சிறுகதை இரு நண்பர்களின் இணைபிரியாத நட்புறவினையும் ஒருவரின் இழப்பு, மற்றவர் தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்வதும் வாசகரின் உணர்வுகளை உறைய வைப்பனவாக அமைகின்றது.
இத்தொகுதியிலுள்ள கதைகளின் தெரிவு என்பது கதை ஆசிரியர் வாழ்ந்த பிரதேசத்தில் ஊடாடிய மாந்தர்களுக்கு நேர்ந்த அவலங்கள், துன்ப, துயரங்கள், வாழ்க்கைப் போராட்டங்களில் அவர் உள்ளத்தை நெகிழ வைத்த உண்மைச் சம்பவங்கள் கதைத் தெரிவுகளாகவும் பொருளாகவும் கருவாகவும் அமைந்திருக்க வேண்டும்.”
‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்: பகிர்வுகள்
2023 இல் வெளிவந்த செங்கதிரோனின் ‘யாவும் கற்பனையல்ல’ சிறுகதைத் தொகுப்புக்கு (அமரர்) தெளிவத்தை யோசப் வழங்கிய முன்னுரை இது. காலம் கடந்து வந்தடைந்த இது, செங்கதிரோனின் குறிப்புடன் ‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடரின் இரண்டாவது பகிர்வாகப் பதிவாகிறது. பகிர்வுகள் தொடரும்.
புண்ணியபுரம்-வரலாற்று நாவல்
‘ஈழத்தைப் பொறுத்தவரை 1895 இலிருந்து ஆரம்பித்து இன்று 2025 வரையிலான 130 வருடகாலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய வரலாற்று நாவல்களே படைக்கப்பட்டுள்ளன எனும் பகைப்புலத்தில் இப் ‘புண்ணியபுரம்’ நாவலின் வரவு முக்கியத்துவம் மட்டுமல்ல இதன் உருவம் உள்ளடக்கம் மற்றும் உத்தி காரணமாக முன் வரிசையில் வைக்கப்பட வேண்டியதொன்றுமாகும். ‘
“இன்னும் கன்னியாக..”
கதைகளைப் பின்னியிருக்கும் புனைவு மொழி சிற்றாறு ஒன்று வளைந்தும் நெளிந்தும் ஆரவாரமில்லாமல் அமைதியாக ஓடுகின்ற ஒயிலாட்டம் இயல்பாகவும் – எளிமையாகவும் – சிக்கல்களில்லாமலும் மொழியின் ஓட்டம் அமைந்துள்ளது. வாசகனை வசீகரிக்கின்ற மொழிநடை நூலாசிரியருக்கு ‘வாலாயம்’ ஆகியுள்ளது.
