தோழர் சந்திரகுமாரின் மரணம் ஒரு தனி மனிதப் பேரியக்கத்தின் முடிவு 

ஒரு இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரான தோழர் சந்திரகுமார் அவர்கள் தனது 76 வது வயதில் அண்மையில் காலமானார். தன் வாழ்நாள் முழுக்க ‘செயற்பாட்டு அரசியலில்’ தீராத ஈடுபாடு கொண்டு வாழ்ந்த அவர் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்து, நீண்டகாலமாக கொழும்பில் வாழ்ந்து வந்தார். இன்றைய இளைஞர்கள் அறிவதற்காக அவரைப்பற்றி எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் எழுதும் குறிப்பு

மேலும்

சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி!

“சிறிதரனின் ஆதரவாளர்களே இப்பொழுது சலித்துப் போகின்ற அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.
இது சிறிதரனின் ஆளுமைப் பிரச்சினையாகும்.
இதுவரையிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், எந்தப் பொறுப்பும் இல்லாமல் அதிரடிப் பேச்சை மட்டும் வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தவர் சிறிதரன்.“

மேலும்

கனகர் கிராமம் ‘அரங்கம்’ தொடர் நாவல்​(அங்கம் – 20)

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 20.

மேலும்

சுமந்திரனின்  சுயபரிசோதனை 

தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ஒருவரே தேவை என்பதால் சிறிதரனை கட்சியின் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்தார்கள் என்பதையும் தன்னால் அவ்வாறான அரசியலைச் செய்யமுடியாது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கும்  சுமந்திரனை பாராட்டும் பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் அவர்கள், மறுபுறம் ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல்  கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மையை புதிய தலைமை உணரவேண்டும் என்கிறார்.

மேலும்

மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்

அரசியல் ரீதியாக உயர் பதவிகளை தன்வசம் வைத்துக்கொள்வதற்காக மாவை சேனாதிராஜா சுயநலத்துடன் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டும் மூத்த பத்திரிகையாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள், கட்சி மாநாட்டை ஒத்தி வைத்ததும் அதே நோக்கிலானது என்றும் குற்றம் சாட்டுகிறார். இதற்கு தமிழரசுக்கட்சியினர் இடம் கொடுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

மேலும்

கிழக்கு அரசியல்:2  கிழக்கின் சமூக, அரசியல் ஐக்கியம்……! (மௌன உடைவுகள்-72)

கிழக்கு அரசியலின் மையமாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமே இருக்க வேண்டும் என்று கூறும் அழகு குணசீலன், வாக்கு மைய அரசியல் போட்டிகள் அதற்கு பாதகமாக தொடர்வதாக குறிப்பிடுகிறார்.

மேலும்

புலிகளின் தியாகத்தை விற்றுப் பிழைப்பு நடத்துவோர்!!

இன்றைய அரசியல்  விடுதலைப் புலிகளின் போராற்றல் என்கிற வீரம், அதற்கான தியாகம் (உயிரிழப்பு) அதைக் கொண்டாடும் மாவீரம் – ‘மாவீரர்’ என்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தப் போராளிகள் குமுறுகிறார்கள். தங்களையும் தங்களைச் சேர்ந்தவர்களையும் வைத்துப் பிழைக்கும் தமிழரசியலை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திட்டமிட்டுத் தமிழரசியல் புலிகளின் பிரதிநிதிகளாக இருப்போரின் நீக்கத்தை ஒரு பக்கம் செய்து கொண்டு, மறுபக்கம் புலிகள் இயக்கத்தின் போராற்றலையும் அதில் உயிரழந்தோரின் தியாகத்தைப் பயன்படுத்துவதையும் இவர்களால் ஏற்கமுடியாதிருக்கிறது. அதாவது இந்த இரண்டகத் தன்மையை…’

மேலும்

என். சண்முகதாசன்- சமரசம் செய்யாத ஒரு கம்யூனிசவாதியின் அரசியல் வாழ்வு 

இலங்கையின் மூத்த கம்யூனிஸவாதியான என். சண்முகதாசனின் 31 வது நினைவு தினம் (வியாழக்கிழமை) இன்றாகும். அதை முன்னிட்டு இந்த கட்டுரை பிரசுரமாகிறது.

இலங்கையின் மிகவும் காத்திரமான ஒரு கம்யூனிஸ்ட்டாக பலராலும் மட்டிடப்பட்ட இவர், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இடதுசாரிகளாலும் மதிக்கப்படுபவர். இலங்கை இனவிவகாரம் உட்பட பல அம்சங்களில் தனக்கென தனித்துவமான கொள்கையை கொண்டு செயற்பட்டவர். அவருக்கு அரங்கமும் தனது அஞ்சலியை செலுத்துகிறது.

மேலும்

கிழக்கு அரசியல்:1. தமிழரசின் வீழ்ச்சியும்- மாற்று அரசியல் எழுச்சியும்….! (மௌன உடைவுகள்-71)

போருக்குப்பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் கடுமையான சரிவை சந்தித்து வரும் தமிழரசுக்கட்சி, கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் அழகு குணசீலன். ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் கிழக்கு நிலை பொருந்தும் என்கிறார் அவர். கடந்த தேர்தல்களின் முடிவுகள் மூலம் இதனை அவர் நிறுவ முயல்கிறார்.

மேலும்

சனத் நிசாந்தவின் அகால மரணமும் பிரதிபலிப்புகளும் 

என்னதான் மனிதாபிமானப் பண்புகளைப் பற்றி நாம் பேசினாலும், பழிபாவத்துக்கு அஞ்சாத போக்குகள் நிறைந்த இன்றைய அரசியல் வாழ்வில் மரணங்களும் கூட குரூர திருப்தியுடன் நோக்கப்படும்  ஒரு  கலாசாரம் வளர்ந்திருப்பதை நாம் மறுக்கமுடியாது.

மேலும்

1 21 22 23 24 25 128