“தமிழ்த்தேசிய ஆயுத அரசியல் – அரசியல் தற்கொலைக்கு வழங்கிய வகிபாகம் என்ன….?
இதை இன்னும் கூட கேள்விக்கு உட்படுத்தாமல் கனடாவில், இங்கிலாந்தில் நடக்கின்ற அரசியல் கண் காட்சிகள் குறித்து ஏட்டிக்கு போட்டியாக தற்பெருமை கொள்கிறோம். இவர்கள் முள்ளிவாய்க்காலின் போது என்ன செய்தார்கள் என்று கேட்கின்ற திராணி கூட இல்லை.
தோல்வியை வெற்றியாகக் காட்சிப்படுத்துவது வெறும் கட்சி அரசியல். இதற்கு நிலம், புலம் என்று வேறுபாடில்லை. இந்த அரசியலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க போர்வீரர்களை வெற்றி வீரர்களாக நினைவுகூருகிறார். தமிழ்த்தேசியம் புலிப்போர்வீரர்களை தோற்றுப்போனவர்களாக நினைவுகூருகிறது. மொத்தத்தில் யுத்தம் மீண்டும் … மீண்டும்…எதிர்கால அரசியலுக்கு மூலதனமாகிறது.”