என். சண்முகதாசன்- சமரசம் செய்யாத ஒரு கம்யூனிசவாதியின் அரசியல் வாழ்வு 

இலங்கையின் மூத்த கம்யூனிஸவாதியான என். சண்முகதாசனின் 31 வது நினைவு தினம் (வியாழக்கிழமை) இன்றாகும். அதை முன்னிட்டு இந்த கட்டுரை பிரசுரமாகிறது.

இலங்கையின் மிகவும் காத்திரமான ஒரு கம்யூனிஸ்ட்டாக பலராலும் மட்டிடப்பட்ட இவர், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இடதுசாரிகளாலும் மதிக்கப்படுபவர். இலங்கை இனவிவகாரம் உட்பட பல அம்சங்களில் தனக்கென தனித்துவமான கொள்கையை கொண்டு செயற்பட்டவர். அவருக்கு அரங்கமும் தனது அஞ்சலியை செலுத்துகிறது.

மேலும்

சனத் நிசாந்தவின் அகால மரணமும் பிரதிபலிப்புகளும் 

என்னதான் மனிதாபிமானப் பண்புகளைப் பற்றி நாம் பேசினாலும், பழிபாவத்துக்கு அஞ்சாத போக்குகள் நிறைந்த இன்றைய அரசியல் வாழ்வில் மரணங்களும் கூட குரூர திருப்தியுடன் நோக்கப்படும்  ஒரு  கலாசாரம் வளர்ந்திருப்பதை நாம் மறுக்கமுடியாது.

மேலும்

கிழக்கில் தலைமைத்துவமும் தனிக்கட்சியும்…! (மௌன உடைவுகள்-70)

“இப்போது வடக்கு கட்சிகளின் பின்னால் தமிழர்  பெயரால் போகின்ற அரசியல் வாதிகள் மற்றொரு பாடத்தை படித்திருக்கிறார்கள். சுமந்திரனும், சிறிதரனும் இவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறார்கள். இனிமேலாவது எமது அரசியல் வாதிகள் கிழக்கின் அரசியல் தனித்துவம் பற்றி சிந்திப்பதற்கும், தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கும் காலம் கடந்துவிடவில்லை.” என்கிறார் குணசீலன்.

மேலும்

பந்து இப்போது தமிழ் மக்களின் பக்கத்தில் மட்டுமே உள்ளது (வாக்கு மூலம் – 100)

இந்த “வாக்குமூலம்” தொடரில் தமிழ் மக்களுக்கு தேவை என தான் கருதும் ஒரு மாற்று அரசியல் பொறிமுறையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த 100 ஆவது இறுதி பகுதியில் தான் இதுவரை சொல்லியவற்றை தொகுத்து கூறமுயல்கிறார்.

மேலும்

சுயம் இழந்து, புலிகளின் ஒளியில் குளிர்காயும் தமிழ்க்கட்சிகள்!

‘தம்மால் சுயமாக எதையும் செய்ய முடியாத நிலையில் புலிகளின் – அவர்களுடைய மாவீர்களின் ஒளியில் தங்களுடைய அரசியலை இவர்கள் மேற்கொள்ள விளைகின்றனர். இது அந்தப் போராளிகளுக்கும் அவர்களைப் பெற்று வளர்த்த பெற்றோருக்கும் அவர்களை மதிக்கின்ற மக்களுக்கும் இழைக்கின்ற அநீதியாகும்.

தமது அரசியல் ஆதாயங்களுக்காக போராளிகளையும் போராட்டத்தில் தம்முடைய இன்னுயிரை ஈய்ந்தோரையும் பயன்படுத்திக் கொள்ளுதல் மிகத் தவறானதாகும். இந்த வியாபாரத்துக்கு மக்களும் இடமளிக்கக் கூடாது.’

மேலும்

மிலிந்த மொரகொடவும். 13 வது திருத்தமும்

‘13 வது திருத்தம் ஒன்றே இலங்கை அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் இருக்கும் சட்டரீதியான ஏற்பாடாகும். இந்தியாவின் படைபலத்துடன் கூடிய நேரடித்தலையீடு தான் அதைச் சாத்தியமாக்கியது என்பதை விளங்கிக் கொள்வதற்கு எவரும் அரசியல் விஞ்ஞானம் படிக்கவேண்டியதில்லை.

  உள்நாட்டுச் செயன்முறைகள் மூலமாக அதிகாரப் பகிர்வைச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட கடந்த கால முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெற முடியவில்லை என்ற வரலாற்று அனுபவம் எம் முன்னால் விரிந்து கிடக்கிறது.

என்றாவது ஒரு நாள் இலங்கை அரசாங்கம் ஒன்று 13வது திருத்தத்தை இல்லாமல் செய்தால் உள்நாட்டுச் செயன்முறையின் மூலமாக அத்தகைய ஒரு ஏற்பாட்டை மீண்டும் கொண்டுவரமுடியுமா? 

  அந்த திருத்தத்தின் பல்வேறு போதாமைகளுக்கு அப்பால் இந்த கேள்வி குறித்து தமிழ் அரசியல்வாதிகள் சிந்திப்பார்களா? அவர்கள் சிந்திக்காவிட்டாலும் தமிழ் மக்கள் சிந்திக்காமல் இருக்கமுடியாது.’

மேலும்

இந்தியாவில் இலங்கையின் சட்டவிரோத குடியேறிகள்? (மௌன உடைவுகள்-69)

‘சட்டரீதியற்றவர்கள் என்று எந்த மனிதரும் இல்லை என்று சர்வதேச அகதி அமைப்புக்கள் கூறுகின்றன. இந்தியாவில் சட்டத்தினால் சட்டவிரோத குடியேறிகளாக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளை ரணில் அரசு வழங்கும் கடவுச்சீட்டு இந்திய அரசிடம் இருந்து பிணையெடுக்கட்டும்.’

மேலும்

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! (மௌன உடைவுகள்:68)

‘பழம்பெருமை பேசுகின்ற தமிழரசுக்கட்சி இருபத்தியோராம் ஆண்டின் சமகால அரசியலுக்கு பொருத்தமற்றது. அதனை முற்று முழுதாக இளைய தலைமுறை பொறுப்பு ஏற்று முழுமையான புனரமைப்பைச் செய்யவேண்டும். அது தனது இயலாமையை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பது மட்டுமன்றி கடந்த 50 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியதற்கும், யாழ்மையவாதத்தை முதன்மைப்படுத்தி கிழக்கு, மலையக, வன்னி மக்களுக்கான சம உரிமையை மறுத்து ஏமாற்றி போலி அரசியல் செய்ததற்காகவும் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்மக்களிடமும் சிறப்பாக கிழக்குமாகாண மக்களிடமும் மன்னிப்புக் கோரவேண்டும்.‘

மேலும்

தோற்றதுத்தான் போவோமா ? தோற்றது சுமந்திரனா….? இல்லை…சாணக்கியனா….? (மௌன உடைவுகள்:67)

பலத்த போட்டிக்கும், சலசலப்புக்கும் மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி, இந்த முடிவின் எதிர்காலம் என்ன? அலசுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலும் தமிழர் அரசியலின் எதிர்காலப் போக்கும் 

தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில் அதன் பின்னணியில் இலங்கைத்தமிழர் அரசியலை ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்