“NPP தன் நெறிமுறையியல் mandate-ஐ கண்கூடான சாதனைகளாக மாற்றிக் காட்ட முடிந்தால், தளர்ந்து வரும் மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும். வெளிப்படைத் தீர்மானங்கள், சமூகநிலை வெற்றிகள் மற்றும் தொடர்ச்சியான தகவல்தொடர்பு மீள்வதற்கான முக்கிய தளங்களாக இருக்கும்.”
Category: அறிவித்தல்கள்
திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்
“ஜனாதிபதி திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வெறுமனே சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களின் கொள்கை என்று கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் கடைப்பிடித்த பாகுபாடான கொள்கைகள் மற்றும் அடக்குமுறைகளின் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவிக்கின்ற பிரத்தியேகமான பிரச்சினைகளை போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டினால் மாத்திரமே சமத்துவமான குடிமக்கள் என்ற உணர்வை அந்த மக்கள் மத்தியில் படிப்படியாக ஏற்படுத்த முடியும்.”
இனவாதம்: அம்பலப்படுத்திய புத்தருக்கு நன்றி….!(வெளிச்சம்: 092)
“ஒட்டு மொத்தத்தில் இனவாதத்தை , இனவாதத்தால் அணுகுகின்ற அரசியலே நிலவுகிறது. இது பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தால் அணுகும் முறை போன்றது. ஆபத்தானது. இதனால் புத்தர் திருகோணமலயின் கடற்கரையோரப்பாதுகாப்பு வலையத்தில் தற்காலிகமாக குடியேற்றப்படவில்லை என்பதே உண்மை. திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ளார். அந்த இடம் விரைவில் அவரின் நிரந்தரவதிவிடமாகவும் மாறும். திருகோணமலை வாக்காளர் பட்டியலில் புத்தரின் பெயர் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இனவாத வாக்குச்சேகரிப்புக்கு அவர் தனது பங்களிப்பை செய்யாமலா? இருக்கப்போகிறார்.”
கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேசவாதம் அல்ல – பகுதி 1 (சொல்லித்தான் ஆகவேண்டும்)
கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சமூக பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வென்றெடுப்பதற்குக் கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவமான அரசியற் கட்டமைப்பொன்று தேவையென்ற விடயம் அரசியல் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ மேலெழும் சந்தர்ப்பங்களிலெல்லாம், அதனைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல்-அதன் நடைமுறை யதார்த்தத்தை உணராமல் அல்லது உணர விரும்பாமல் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனத் தம்மை குறிசுட்டுக் கொண்டு சுயலாப அரசியல்-பிழைப்பு அரசியல் செய்கின்ற தமிழ்க் கட்சிகள் கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் விடயத்தைப் ‘பிரதேசவாதம்’ எனப் பெயர் சூட்டி முலாம்பூசி அதனை முடக்கிவிடும் முனைப்பையே காட்டி வருகின்றன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மாகாணசபை தேர்தல்களும்
“பதவிக்கு வந்த ஒரு வருட காலத்திற்குள் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அளித்த உறுதிமொழியை அதன் தலைவர்களில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், தற்போது அந்த தேர்தல்களை இயன்றவரை தாமதிப்பதற்கு அரசாங்கம் முன்வைக்கின்ற காரணங்களை நோக்கும்போது உள்ளூராட்சி தேர்தல்களை தாமதிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கடைப்பிடித்த அதே அணுகுமுறையையே இவர்களும் பின்பற்றுகிறார்கள் போன்று தெரிகிறது.“
மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும்
ஈழப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை மதித்துப் போற்றவேண்டும் என்றால், அவர்களுடைய கனவுகளுக்கும் நடைமுறைகளுக்கும் நேர்மையாக – விசுவாசமாக இருக்க வேண்டும். இதனுடைய அர்த்தம், அவர்கள் கொண்டிருந்த அதே அரசியலை இன்றும் மேற்கொள்வது என்பதல்ல. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. அந்த அரசியல் நிலைப்பாடு இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதும் அல்ல. ஆனால், தாம் தேர்வுசெய்கின்ற அல்லது பிரகடனப்படுத்துகின்ற அரசியலுக்காக – அதை நடைமுறைப்படுத்துவதற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பண்பாடும் உளநிலையும் துணிச்சலும் இருக்கவேண்டும். அதுவே நேர்மையானது. அதையே நாம், தம்மை அர்ப்பணித்த போராளிகளுக்குச் செய்கின்ற நேர்மையான மதிப்பார்ந்த அஞ்சலியாகும். அவ்வாறில்லை என்றால், அவர்களுடைய பெயரைவைத்துப் பிழைக்கும் பிழைப்புவாத அரசியலைச் செய்வதாகவே அமையும்.
பட்ஜட்: தோற்றுத்தான் போவோமா…..?(வெளிச்சம்:091)
“அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க பாரிய முதலீட்டு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சிறிய, சிறிய சில திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சமூக நலன் சார்ந்த நடைமுறைச்செலவுகளை அதிகம் செய்து கொண்டு சமகாலத்தில் பாரிய முதலீடுகளை அரசாங்கம் செய்யமுடியாத நிலையில் உள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீடுகளை அது கோருகிறது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்ட எதிர்க்கட்சிகளின் “கனவை” மட்டும் அல்ல “வீழ்ந்து விடவும் மாட்டோம்” என்ற கூற்றையும் காலமே தீர்மானிக்கும்.”
தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்”
இந்த நூலைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், ‘எல்லாப் பக்கமும் கூருள்ள ஆயுதமொன்றைப் போல இந்த நூல் உள்ளது’ எனலாம். அதனால் எல்லாத் தரப்பினருக்கும் விழுகிறது பாரபட்சமில்லாத அடி. கூடவே எல்லோருடைய பொறுப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டு நியாயமான முறையில் உணர்த்தப்படுகிறது. அதாவது, கடுமையான விமர்சனம். சிநேகபூர்வமான சுட்டிக் காட்டுதல்கள்.
கிழக்குத் தமிழர்களுக்குத் தனித்துவ அரசியல் கட்டமைக்கப்படல் அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்- சொல்-45)
“கிழக்கைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆர்வலர்களும்-கல்விமான்களும்-துறைசார் நிபுணர்களும்-விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட தொழிலாளர் சமூகமும்-எழுத்தாளர் கலைஞர் ஊடகவியலாளர்களும்-ஆன்மீகவாதிகள் என எல்லாத் தரப்பினரும் இணைந்து கிழக்குத் தமிழர்களுக்கானதோர் தனித்துவமான அரசியல் கட்டமைப்பை-பொறி முறையை-பாதையைக் கட்டமைக்கத் தாமதியாது செயலில் இறங்கவேண்டும்.”
‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்: பகிர்வுகள்
2023 இல் வெளிவந்த செங்கதிரோனின் ‘யாவும் கற்பனையல்ல’ சிறுகதைத் தொகுப்புக்கு (அமரர்) தெளிவத்தை யோசப் வழங்கிய முன்னுரை இது. காலம் கடந்து வந்தடைந்த இது, செங்கதிரோனின் குறிப்புடன் ‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடரின் இரண்டாவது பகிர்வாகப் பதிவாகிறது. பகிர்வுகள் தொடரும்.
