இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர் காலம். (பகுதி 4)

“சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற சிவில் யுத்தம் என்பது சுயநிர்ணய உரிமை என்பதைச் சுற்றியே நிகழ்ந்தது. இதற்காக மக்கள் மிக அதிகளவு தியாகங்களைச் செலுத்தியுள்ளார்கள். இதன் காரணமாக, அரசியல் இலக்கு என்பது மிகவும் புனிதமான ஒன்றாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இக் கொள்கைகளைக் கைவிடுவது என்பது இறந்தவர்களை ஏமாற்றுவதாக, அவர்களின் தியாகங்களுக்குத் துரோகம் இழைப்பதாக அமையும் என்ற அளவிற்கு நம்பிக்கை வளர்ந்துள்ளது. இவ்வாறான உளவியல் தாக்கத்தை தமிழ் அரசியல் இன்னமும் கொண்டிருக்கிறது. குறிப்பாக ‘தனித் தமிழீழம்’ என்ற எண்ணக்கரு தமிழ் அரசியலில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகிறது. போரின் தோல்விகள், தேர்தல் தோல்விகள், சர்வதேச ஆதரவுச் சரிவு என பல யதார்த்தமாக தெரிந்த போதிலும் மிகவும் கணிசமான தமிழ் மக்கள் பிரிவினை இன்னமும் சாத்தியம் என்ற எண்ணக்கருவோடு வாழ்கின்றனர். இந்த உளவியல் தடையிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
இந்த உளவியல் தடையிலிருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டுமாயின் அம் மக்களின் கௌரவம் அல்லது அந்தஸ்து பாதுகாக்கப்பட வேண்டும். அதாவது நாட்டில் தாம் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல என்ற மன உணர்வு தோற்றம் பெற வேண்டும். அம் மக்கள் வாழும் பிரதேசங்கள் பாரபட்சமற்ற வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மாற்றம் ஒன்று நிகழ்வதை மக்கள் தாமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான மன உணர்வு தோற்றம் பெறுவதை பெரும்பான்மைச் சிங்கள மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். இம் மாற்றங்கள் தேசிய ஐக்கியத்தின் அவசியத்தை அம் மக்கள் மத்தியில் தோற்றுவிக்க வேண்டும். “

மேலும்

நீண்டகாலத்துக்கு பிறகு தமிழ்பேசும் அரசியல் கட்சிகளை ஓரணியில் கொண்டு வரும் பொதுத்தள முயற்சி

“ஒவ்வொரு கட்சியினதும் கடந்தகால அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் நெடுகவும் பகுப்பாய்வு செய்து கொண்டேயிருந்தால், நடைமுறைச் சாத்தியமான முறையில் எந்த காரியத்தையும் ஒருபோதுமே சாதிக்க முடியாமல்போகும்.

இந்த கட்சிகள் மாறிவிட்ட அரசியல் சூழ்நிலைகளில்  தற்போது எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதையும் பயன்தராத  முன்னைய அணுகுமுறைகளைக் கைவிட்டு நிலைவரம் வேண்டிநிற்பதற்கு இசைவான முறையில் செயற்படுவதற்கு தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் தயாராயிருக்கின்றனவா என்பதையும்  சற்று பொறுத்திருந்து பார்ப்பதே விவேகமானது.”

மேலும்

செம்மணி அகழ்வுகள்: நீதிக்கான தேடலா அல்லது அரசியல் சடங்கா?

“உண்மையில், செம்மணி விவகாரத்தின் மிக உறைப்பான பக்கம் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பில் தேங்கிக்கிடக்கும் ஆறாத துயரமும் ஏமாற்றமுமாகும். செம்மணி என்பது வெறும் ஒரு புவியியல் பகுதியோ அல்லது ஒரு குற்றவியல் நிருபணக் களமோ அல்ல; அது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடரும் பாதிக்கப்பட்ட மக்களுடைய கூட்டு மனவடுக்களின் (Collective Trauma) வாழும் சாட்சியமாகும்.”

மேலும்

சொல்லித்தான் ஆக வேண்டும்!(சொல் – 56)

“1987 இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அரசியல் தீர்க்க தரிசனத்துடன் அறிவுபூர்வமாகப் பயன்படுத்தாமல் விட்டது ஈழத்தமிழர் அரசியல் தரப்பு (தமிழீழவிடுதலைபுலிகள் இயக்கம்) இழைத்த மாபெரும் அரசியல் தவறு (முட்டாள்தனம்) ஆகும்.

இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப்போன முன்னாள் தமிழர் விடுதலைக்கூட்டணிச் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தைக் கொழும்பில் வைத்தும் – இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் பங்களித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட பதின்மூன்று தோழர்களைத் தமிழ்நாட்டில் வைத்தும் – இந்திய – இலங்கை சமதான ஒப்பந்தத்தின் பிதாமகரான இந்திய முன்னாள் பிரதமர் ராஜீங்காந்தி அவர்களை இந்தியாவின் தமிழ்நாடு மாநில மண்ணில் வைத்தும் புலிகள் படுகொலை செய்ததொரு பின் புலத்தில் இப்போது புலிகளின் ‘பதிலி’யாகத் தன்னைப் படம் காட்டிக்கொண்டு திரியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கோரிக்கைகளை தமிழ்நாடு மாநில அரசாங்கமோ அல்லது இந்திய மத்திய அரசாங்கமோ கண்டுகொள்ளப்போதில்லை.”

மேலும்

தமிழ்பேசும் சமூகங்களின் அரசியல் கட்சிகள் பொது மேடையூடாக வெளிப்படுத்த முயற்சிக்கும் கவலைகள் 

“அறியப்பட்ட பதற்றங்கள் மற்றும் வெளிப்படையான முரண்பாடுகளுக்கு மத்தியிலும், இந்தத் தளத்தின் பின்னணியில் உள்ள தலைவர்கள் தற்போது மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தும் ஒரு குறிப்பிட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட திட்டத்தை தெளிவாக முன்வைத்துள்ளனர் ; 

 ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் மற்றும் மக்களின் நிலங்கள் தொடர்பான மோதல்களுக்கு தீர்வு காணுதல். அத்துடன், மற்றைய சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்த உரையாடல்களுக்கான வாய்ப்புகளை இந்த தளம் படிப்படியாக உருவாக்கும் என்றும் அவர்கள் சேர்த்துக் கூறினர்.”

மேலும்

இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர்காலம். (பகுதி 3)

“தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வெறுமனே 13வது திருத்தத்தை மட்டும் நம்பிச் செயற்படுவது விவேகமான அணுகுமுறையா?
இத் திருத்தத்தைச் சுற்றியே தமிழ் அரசியல் செல்வது, மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப அரசியல் வியூகங்களை மாற்றுவதற்குத் தடையாக இருக்கிறது. மாற்று அரசியல் தீர்வை நோக்கிய கற்பனைகளை உறைய வைக்கிறது. மாற்று வகையில் தீர்வுகளைக் காணும் வாய்ப்பை மட்டுப்படுத்துகிறது. 13வது திருத்தம் மக்களின் உண்மையான தேவைகள் குறித்து எதையும் தரவில்லை. அதாவது, பொருளாதாரத் தேவைகள், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வித் தேவைகள், பிராந்திய அபிவிருத்தி, உள்ளுராட்சி தேவைகள் போன்றன கைவிடப்பட்டுள்ளன.”

மேலும்

தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) இறுதிப்பகுதி

“ஈழத் தமிழரின் அரசியலில் செல்வாக்குச் செலுத்திய விடுதலைப்புலிகளின் யுகம் முடிந்து விட்டது. அதற்கான பெறுமதிகள் அன்றைய வரலாற்றுக்குரியவையே தவிர, இப்போதுள்ள யதார்த்தத்துக்கும் எதிர்கால வழிமுறைகளுக்கும் அவை பொருந்தக் கூடியன அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொண்டு செயற்படும் நிலை – துணிச்சல் இவற்றிடம் இல்லை.”

மேலும்

நீர்கொழும்பு: வெளிச்சமும் இருட்டும்…..!(மூன்றாவது கண்:XXV)

“10 அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து அரசாங்கமும், சமூக ஊடகங்களும் பேசிய அளவுக்கு  21 கைதிகளுக்கு ஏற்பட்ட, நிகழ்ந்த அநியாயம் பற்றி பேசப்பட்டது குறைவு. கொல்லப்பட்ட  சிறைக் காவலர்களின் வீடு வாசல்கள் பற்றி பேசிய சமூக ஊடகங்கள் கைதிகள் எவரினதும் வாழ்வாதாரம் பற்றியோ, வாழ்க்கை கஷ்டங்கள், அவர்களின் குடும்ப நிலைமைகள் பற்றியோ பேசவில்லை. ஒட்டுமொத்தமாக கைதிகள் குற்றவாளிகள், வன்முறையாளர்கள் என்ற வகையில் முத்திரை குத்தப்பட்டனர். பொறுப்பை ஏற்பதாக கூறிய அரசதரப்பும் இந்த பிரச்சார யுக்தியையே பயன்படுத்தியது.”

மேலும்

இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர் காலம். (பகுதி. 2)

“இங்கு கோரிக்கைகள் அல்ல பிரச்சனை. அவற்றை அடைவதற்காக முன் வைக்கும் செயல்முறைகளே தீர்வை நோக்கிய பாதைகளை அடைத்து நிற்கின்றன. இதில் முக்கியமானது அதிகாரத்திலுள்ள அரசியல் கட்சிகளின் போக்குப் பற்றிய தெளிவான புரிதல் அன்றி கோரிக்கைகளை முன் வைப்பது ஆட்சியாளரைக் கடின நிலைக்குத் தள்ளுவதாக உள்ளது. ஜனநாயகம் என்பது கோரிக்கை என்பதில் மட்டும் தங்கியிருப்பதில்லை. எதிரியின் அல்லது ஆட்சியாளரின் இருப்பிற்கு அது எவ்வளவு உதவுகிறது? என்பதிலிருந்தே மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். உதாரணமாக, சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த வேளையில் அவருக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. ஆனால் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் தமிழ் அரசியல் அதிகபட்ச தீர்வை அழுத்துவதில் கொண்டிருந்த அக்கறை சந்திரிகா எதிர் நோக்கிய நெருக்கடிகளை தளர்த்துவதற்கான அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை. இதுவே அப் பேச்சுவார்த்தைகள் தொடர முடியாமல் போயின.”

மேலும்

தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 4

‘“ஆற்றுப்படுத்தும்’ பண்பு தலைமைக்கு இருக்க வேண்டும். வெறும் அரசியல் உரிமைகளைப் பேசுவதோடு நின்றுவிடாமல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வாதாரம், கல்வி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும்.கடந்த காலத்தில் ஒரு தனிநபரைச் சுற்றி நகர்ந்த அரசியல் நிலையை மாற்றி, பல்துறை வல்லுநர்கள், அறிவுஜீவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளடங்கிய ஒரு கூட்டுத் தலைமைத்துவக் கட்டமைப்பை (Collective Leadership Structure) உருவாக்க வேண்டும். மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளித்து, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்வாங்கிச் செல்லும் சகிப்புத்தன்மை அவசியம்.”

மேலும்

1 2 3 63