கற்பனையில் தமிழ்ச்சமூகம்!

“இங்கே கற்பனைக் குதிரைகளே அதிகம். அவை நிஜமாக ஓடுவதுமில்லை. நிஜமாகக் கனைப்பதுமில்லை. நிஜமாக வெற்றியடைவதுமில்லை.
 
பாவம் தமிழ் மக்கள். இல்லை இல்லை. மன்னிக்க வேண்டும். இன்னும் தண்டனை பெற வேண்டும் தமிழ் மக்கள். ஏனென்றால், இவ்வளவு பட்ட பிறகும் இன்னும் புத்தி தெளியாமல் இருந்தால், அதற்கான தண்டனையைப் பெறத்தானே வேண்டும்!.

ஆகவே தொடர்ந்தும் சிங்கள மேலாதிக்கத் தரப்புக்கு வெற்றிகளைக் குவிக்கிறார்கள் தமிழ் மக்கள்.”

மேலும்

மாகாணசபை தேர்தல்களை நடத்த மூன்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கை

“மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் அவசரம் காட்டுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்ற பரவலான ஒரு அபிப்பிராயமும் இருக்கிறது. எது எவ்வாறிருந்தாலும், மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முற்று முழுதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பேயாகும். அதை தட்டிக்கழிப்பதற்கு உருப்படியான எந்த காரணத்தையும் அரசாங்கத்தினால் கூறமுடியாது.”

மேலும்

ஒரு எச்சரிக்கை!

“16 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரன் இறந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதைத் தெரிந்து கொண்டே இவ்வளவு காலமும் இழுத்தடித்து வந்து இப்பொழுது சண்டையிடுகிறார்கள். இதை என்னவென்று சொல்வது?
அப்படித்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உச்ச முரண்பாடு நிலவுகிறது.”

மேலும்

எல்லா இனத்துப் பேரப்பிள்ளைகளுக்கும் ஒரு பாட்டனின் கதை!

முஸ்லிம் தமிழ் உறவு குறித்துப்பேசும்
‘இப்படியும் ஒரு காலமிருந்து’ என்ற பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் புத்தகம் பற்றிய எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் பார்வை இது.

மேலும்

செம்மணி: இனியும் உள்ளகப்பொறிமுறை சாத்தியமா……?(வெளிச்சம்:071)

“இறுதிவரை தோண்டி எடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு கூட இன்னும் இல்லை. புதைகுழியில் காணப்படும் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு, கண்ணியமான அடக்கத்திற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். இந்த வகையில் சர்வதேச மேற்பார்வைக்கான அழைப்புகள் முற்றிலும் நியாயமானவை…”

மேலும்

புதிய அரசியலமைப்பின் நோக்கம்? 

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பைப்  போன்றே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பதே புதிய அரசியலமைப்பு முயற்சியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அல்லாவிட்டால், புதிய அரசியலமைப்பு நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பது நிச்சயமானது.”

மேலும்

வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும்  நீதியையே, மாற்றத்தையே   விரும்புகின்றன

செம்மணிப் புதைகுழி உள்ளிட்ட விடயங்களை ஒவ்வொன்றாகச் சீர்ப்படுத்தினால்தான் நாட்டில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக நீதியுணர்ச்சி வலுத்து, நடைமுறையாக வேண்டும். அரசியலில் நீதியுணர்ச்சி என்பதற்கு ஏராளம் வியாக்கியானங்கள் உண்டு. அப்படி ஒன்று இல்லை என்ற கருத்தும் உண்டு. ஆனாலும் சட்டமும் நீதியும் மக்களின் நம்பிக்கையோடும் நாட்டின் நலனோடும் சம்மந்தப்பட்டவை. அதை நோக்கிச் செல்ல வேண்டும் என்றே செம்மணி என்புக்கூடுகளும் வலியுறுத்துகின்றன.

மேலும்

’13 ஆவது திருத்தத்தின் முழு அமுலாக்கலின் முக்கியத்துவம் (சொல்லித்தான் ஆகவேண்டும் -சொல்-43)

“இலங்கை-இந்திய சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்படாமைக்கும்-முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும்-இன்று இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார-அரசியல் பின்னடைவுகளுக்கும் முழுக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தன்முனைப்போடு கூடிய தவறான அரசியல் மற்றும் இராணுவச் செயற்பாடுகளே ஆகும். இதற்குப்போய் இந்திய அரசாங்கத்தையும் இலங்கை அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதில் எந்த அரசியல் நேர்மையும் இல்லை.”

மேலும்

ஈழம் -பாலஸ்தீனம் – சர்வதேசம்…! (வெளிச்சம்: 070)

இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிகள், இந்தியாவும் சீனாவும் எதிரிகள், இஸ்ரேலும் ஈரானும் எதிரிகள், உக்ரைனும் ரஷ்யாவும் எதிரிகள், அமெரிக்காவும் ரஷ்யாவும், சீனாவும் எதிரிகள் இவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து சிறிலங்கா அரசுக்கு  புலிகளை அழிக்க அனைத்து ஆதரவையும்  வழங்கக்கூடியதாக இருந்தது?  புலிகளுக்கு பயிற்சியும், ஆயுதமும் வழங்கிய இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்தே இதை செய்தார்கள் என்றால் அதற்கான காரணங்கள் யாருக்கு தெரியாவிட்டாலும் புலிகளுக்கு தெரியாமல் இருக்க முடியாது.

முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி ஈரான் உள்ளிட்ட  முஸ்லீம் உலகை பகைத்துக்கொண்டோம்.

பௌத்த கோயில்களில் தாக்குதல் நடாத்தி ஆசியாவின் பௌத்த நாடுகளை இலங்கை அரசின் பக்கம் நகர்த்தினோம்..

எதிரியுடன் இணைந்து இந்தியாவை எதிர்த்து, ராஜீவ்காந்தியை கொன்று  இந்தியாவிலும், தமிழகத்திலும் ஆதரவை இழந்தோம். 

ஈழத்திற்கு எதிரிகளையும், சிறிலங்காவுக்கு நேச சக்திகளையும் புலிகளே உருவாக்கினர்.

உலகமயமாக்கல் வியாபார அரசியல்  அன்றைய அனைத்து இராணுவ, வல்லரசு நிலைப்பாடுகளையும் தளர்த்தி பல பத்து ஆண்டுகளாகிறது. பூகோள அரசியல்  என்பது இன்று முழுக்க முழுக்க சந்தை பொருளாதார அரசியல். இதை புரிந்து கொள்ளாமல் கலாவதியாகிப்போன  குளிர்யுத்த கால வல்லரசு பூகோள அரசியலை “கலாநிதிகளும்” விளங்கிக்கொள்ளாததால், விளங்கியும் விடுதலையின் பேரில் கூலிக்கு மாரடித்ததால் வந்த வினை.”

மேலும்

வேந்தர் செல்வராசா: மட்டக்களப்பின் சுடர் ஒன்று அணைந்தது…..!(வெளிச்சம்: 069)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மானாகப்போடி செல்வராசா காலமானார்.
அவர் குறித்த அழகு குணசீலனின் ஒரு நினைவுக்குறிப்பு இது.
அன்னாருக்கு அரங்கத்தின் அஞ்சலியும் உரித்தாகட்டும்.

மேலும்

1 18 19 20 21 22 137