மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும்

ஈழப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை மதித்துப் போற்றவேண்டும் என்றால், அவர்களுடைய கனவுகளுக்கும் நடைமுறைகளுக்கும் நேர்மையாக – விசுவாசமாக இருக்க வேண்டும். இதனுடைய அர்த்தம், அவர்கள் கொண்டிருந்த அதே அரசியலை இன்றும் மேற்கொள்வது என்பதல்ல. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. அந்த அரசியல் நிலைப்பாடு இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதும் அல்ல. ஆனால், தாம் தேர்வுசெய்கின்ற அல்லது பிரகடனப்படுத்துகின்ற அரசியலுக்காக – அதை நடைமுறைப்படுத்துவதற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பண்பாடும் உளநிலையும் துணிச்சலும் இருக்கவேண்டும். அதுவே நேர்மையானது. அதையே நாம், தம்மை அர்ப்பணித்த போராளிகளுக்குச் செய்கின்ற நேர்மையான மதிப்பார்ந்த அஞ்சலியாகும். அவ்வாறில்லை என்றால், அவர்களுடைய பெயரைவைத்துப் பிழைக்கும் பிழைப்புவாத அரசியலைச் செய்வதாகவே அமையும்.

மேலும்

பட்ஜட்: தோற்றுத்தான் போவோமா…..?(வெளிச்சம்:091)

“அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க பாரிய முதலீட்டு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சிறிய, சிறிய சில திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சமூக நலன் சார்ந்த நடைமுறைச்செலவுகளை அதிகம் செய்து கொண்டு சமகாலத்தில் பாரிய முதலீடுகளை அரசாங்கம் செய்யமுடியாத நிலையில் உள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீடுகளை அது கோருகிறது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்ட எதிர்க்கட்சிகளின் “கனவை” மட்டும் அல்ல “வீழ்ந்து விடவும் மாட்டோம்” என்ற கூற்றையும்  காலமே தீர்மானிக்கும்.”

மேலும்

தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்”

இந்த நூலைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், ‘எல்லாப் பக்கமும் கூருள்ள ஆயுதமொன்றைப் போல இந்த நூல் உள்ளது’ எனலாம். அதனால் எல்லாத் தரப்பினருக்கும் விழுகிறது பாரபட்சமில்லாத அடி. கூடவே எல்லோருடைய பொறுப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டு நியாயமான முறையில் உணர்த்தப்படுகிறது. அதாவது, கடுமையான விமர்சனம். சிநேகபூர்வமான சுட்டிக் காட்டுதல்கள்.

மேலும்

கிழக்குத் தமிழர்களுக்குத் தனித்துவ அரசியல் கட்டமைக்கப்படல் அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்- சொல்-45)

“கிழக்கைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆர்வலர்களும்-கல்விமான்களும்-துறைசார் நிபுணர்களும்-விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட தொழிலாளர் சமூகமும்-எழுத்தாளர் கலைஞர் ஊடகவியலாளர்களும்-ஆன்மீகவாதிகள் என எல்லாத் தரப்பினரும் இணைந்து கிழக்குத் தமிழர்களுக்கானதோர் தனித்துவமான அரசியல் கட்டமைப்பை-பொறி முறையை-பாதையைக் கட்டமைக்கத் தாமதியாது செயலில் இறங்கவேண்டும்.”

மேலும்

‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்: பகிர்வுகள்

2023 இல் வெளிவந்த செங்கதிரோனின் ‘யாவும் கற்பனையல்ல’ சிறுகதைத் தொகுப்புக்கு (அமரர்) தெளிவத்தை யோசப் வழங்கிய முன்னுரை இது. காலம் கடந்து வந்தடைந்த இது, செங்கதிரோனின் குறிப்புடன் ‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடரின் இரண்டாவது பகிர்வாகப் பதிவாகிறது. பகிர்வுகள் தொடரும்.

மேலும்

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா?

“ஒரு வருட காலத்திற்குள் நடைபெற்ற மூன்று தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது எதிர்க்கட்சிகள் மத்தியில்  பெரிய வாக்கு வங்கியைக் கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியே விளங்குகிறது. மக்கள் ஆதரவை இழந்த மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமாக பெரிய அரசியல் அனுகூலம் தங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற அபிப்பிராயத்தை அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது.  அத்துடன் எதிர்க்கட்சிகள் கூட்டாக ஏற்பாடு செய்கின்ற பேரணியில் தனது தலைமைத்துவ ஆளுமைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் அவர் சந்தேகத்தைக் கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது.”

மேலும்

டைம்பாம்: ரணில் விட்டதும் அநுர தொட்டதும்..!(வெளிச்சம்:90)

“தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இன்று செயல்படும் விதத்தில் அவர்களின் பிரபலமான அடித்தளம் கணிசமாக பலவீனம் அடைவதைக்காணலாம். தேசிய மக்கள் சக்தியின் வேகம் குறைக்கப்பட்டு ஜே.வி.பி.யே தற்போது நாட்டை ஆட்சி செய்கிறது. இந்த அரசாங்கத்தை நடாத்துவது உயர் மட்டத் தலைமையே. தேசியமக்கள் சக்தி என்று ஒரு நிர்வாக சபை இருக்கிறது. ஆனால் அது ஏதோ ஒரு வகையில் செயலிழந்து விட்டது. இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பை பாதிக்கும்”. என்கிறார் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி.

மேலும்

அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்: பகிர்வுகள்

‘கடலாக இருக்கிறேன்’ எனுமிக் கவிதைத் தொகுப்பு மேற்கூறப்பெற்ற புரியாத புனைவுமொழி போன்ற பலவீனங்களிலிருந்து விடுபட்டு ஒரு தனித்துவம் மிக்கதாய் திகழ்வதே இதன் சிறப்பு ஆகும். காரணம் இந்நூலிலுள்ள ஆக்கங்கள் யாவும் அவை புதுக்கவிதைப் பாணியிலே அமைந்திருந்தாலும்கூடத் தெளிவாகவும் – இறுக்கமாகவும் – எளிமையாகவும் – நுகர்வோருக்கு அதாவது வாசகருக்குப் புரியும் மொழியிலும் புனையப்பட்டிருப்பதே.”

மேலும்

மாகாணசபை தேர்தல்கள்: தெற்கிலும் வடக்கு, கிழக்கிலும் அண்மைக்காலமாக தீவிரமடையும் கோரிக்கைகள்

“நீண்டகாலத் தீர்வுகளைப் பற்றி நெடுகவும் பேசிக்கொண்டிருக்கலாம். சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து தமிழ்க்கட்சிகள் முக்கால் நூற்றாண்டாகப் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றிடம் அத்தகைய தீர்வு ஒன்றை எவ்வாறு  அடைவது என்பதற்கான  வழிவரைபடம்  எதுவும் கிடையாது. 

அதனால், மாகாண ஆட்சிமுறையை அதன் குறைபாடுகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பது உடனடித்  தேவையாக இருக்கிறது. மாகாணங்களுக்கு உரிய பெருமளவு அதிகாரங்களை  மத்திய மத்திய அரசாங்கங்கள் பறித்தெடுத்திருக்கின்றன என்பது உண்மை. ஆனால், வடக்கு, கிழக்கில் மாகாணசபை முறையை அதற்கு இருக்கக்கூடிய எஞ்சிய அதிகாரங்களுடனாவது பயன்படுத்துவதற்கு முயற்சிக்காததில்  தமிழ்க்கட்சிகளுக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது என்பதும் உண்மையே.”

மேலும்

உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு

“ஒரு காலத்தில் மாகாண சபை அமைப்பை “வெளிநாட்டு தலையீடு” என்று குற்றம்சாட்டிய அதே இயக்கம், காலப்போக்கில் அதிலிருந்தே அரசியல் பலன் பெற்றது. அதன் பல தலைவர்கள் 13A மூலம் உருவாக்கப்பட்ட மாகாண அரசியல் அமைப்புகளின் வழியே உயர்ந்தனர்.
இப்போது அதே அமைப்பை தகர்ப்பது, அவர்கள் சொந்த வரலாற்றையும், சமாதானத்திற்காக போராடியவர்களின் தியாகத்தையும் மறுப்பதாகும்.”

மேலும்

1 13 14 15 16 17 137