மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும்

உலக அரசியல் சூழல் அண்மைக்காலமாக பெரும்மாற்றத்தைக் கண்டு வருகின்றது. நவதாராளவாதத்தின் தோல்வி இதில் பெரும் பங்காற்றுகின்றது. இதே நிலைமை இலங்கையிலும் கணிசமாக காணப்படுகின்றது. இவற்றை ஒப்புநோக்க முயல்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்-86

தம்மை தமிழ் தேசியக் கட்சிகளாக கூறிக்கொள்ளும் குறுந்தேசிய அமைப்புக்கள் தம்மை விடுதலைப்புலிகளின் பதிலிகளாக காட்டிக்கொள்ள முயலுவதால் அவர்களை எவரும் அங்கீகரிக்காத நிலை தொடர்வதாக வாதிடும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழ் மக்கள் ஆதரவு இந்த அமைப்புகளுக்கு கிடைத்த போதிலும் அவை பிரயோசனமற்று போவதாக கூறுகிறார். அதற்கு மாற்று என்ன என்பது குறித்து அவர் ஆராய முயல்கிறார்.

மேலும்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 06

வடக்கு நோக்கி வந்த மலையக தமிழர்கள் எதிகொள்ளும் பிரச்சினையைப் பேசும் தொடர் இது. வழமைபோல ‘இந்தப் பிரச்சினையை இப்போது பேசவேண்டுமா?’ என்ற பேச்சுக்கள் எழத்தொடங்கிவிட்டன. ஆனால், இதனை தொடர்ந்து உரத்துப் பேசவே “அரங்கம்” விரும்புகின்றது. அதற்கான அவசியத்தை நாம் உணருகின்றோம். வாய் மூடி இருப்பது ஒரு சமூகத்தையே மேலும் புறக்கணிப்புக்குள்ளாக்கிவிடும் என்பது எமது கருத்து. கருணாகரனும் அதனையே வலியுறுத்துகிறார்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! – 01

இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் நிராகரிக்கப்பட முடியாத ஒரு பெயர் யோகன் கண்ணமுத்து (அசோக்). சிறுவயது முதலே பல்வேறுவகையான போராட்டங்களில் பங்கேற்ற இவர், ஆயுதப்போராட்டத்திலும் இருந்துள்ளார். ஆரம்பம் முதலே கண்ணியம் மிக்க போராளியாக அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படும் இவர், தனது சித்தாந்தங்கள் தொடர்பில் எந்தவிதமான சமரசமும் செய்ய மறுப்பவர். இவரது அரசியல் நேர்மையை அரங்கம் மதிக்கிறது. இவருடன் தேசம்நெற் ஆசிரியர் த. ஜெயபாலன் கண்ட செவ்வி இங்கு தொடராகப் பதியப்படுகின்றது.

மேலும்

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 08

தமிழ் தேசியத்தலைமைகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்பவர்கள் கிழக்கு மாகாண தமிழர்களின் பிரதிநிதித்துவ நலன்களுக்கு எதிராக மேற்கொண்ட சில விடயங்களை இங்கு விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றார் எழுவான் வேலன்.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – (பகுதி – 4)

இலங்கையில் சாதாரண மக்களின் வருமானம் அவர்களின் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட போதாமல் இருப்பதாக சுட்டிக்காட்டும் வரதராஜா பெருமாள் அவர்கள், அவை குறித்து அரசாங்கம் வெளியிடும் கணிப்பீடுகளும் ஏமாற்றுகள் என்று கண்டிக்கிறார்.

மேலும்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 05

தென்னிலங்கை வன்செயல்களால் வடக்கு நோக்கி வந்தமலையக தமிழர்கள் அங்கும் புறக்கணிப்புக்கு உள்ளாகினர். புறக்கணிக்கப்பட்ட அனைத்துச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் முகம் கொடுத்தனர்.

மேலும்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? –(இறுதிப்பகுதி)

தொடர்ச்சியாக பல தசாப்தங்கள் வலதுசாரிகளின் அதிகாரத்தின் கீழ் அழிந்துகொண்டிருக்கும் இலங்கையை மீட்க வேண்டுமானால், நாட்டின் மீது பற்றுக்கொண்ட மாற்றுக்கருத்தாளர்கள் முன்வந்து, இணைந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் இந்தப் பத்தியின் ஆசிரியர்.

மேலும்

துயரத்தின் படிக்கட்டில் விளைந்த பகடி அரசியல்

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி, அரசியலமைப்பு மாற்ற முயற்சி மற்றும் தேர்தல் சட்ட மாற்ற முயற்சி என்ற அடிப்படையில் இலங்கையில் சுதந்திரத்துக்கு பின்பான காலப்பகுதியில் தொடர்ந்து நடந்துவரும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் இவை குறித்த ஒரு ஏளன உணர்வை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டும் செய்தியாளர் கருணாகரன் அவர்கள், அவற்றால் நாட்டில் ஏற்பட்ட அழிவுகள் குறித்தும் கவலை கொள்கிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 85

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை முயற்சிகளின் பலம் பலவீனம் ஆகியவை குறித்து விமர்சிக்கிறார் பத்தியின் எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன். இந்த ஒற்றுமை முயற்சி ஆண்டிகள் கூடி கட்டிய மடமாக ஆகிவிடக்கூடாது என்பது அவரது கருத்து.

மேலும்