தமிழ்த்தரப்பு யார்…? அருணின் கேள்விக்கு என்ன பதில்!(வெளிச்சம்:035)
“தேசிய இனங்களை அங்கீகரிப்பதும், அவற்றின் அடையாளங்களை பேணுவதற்கான வசதி, வாய்ப்புக்களையும், உரிமைகளையும் வழங்குவது ஒரு இடதுசாரி (?) அரசாங்கத்தின் ஆகக்குறைந்த பட்ச கொள்கையாகவாவது அமையாவிட்டால் “இலங்கையர்” என்பது இல்லாத ஒன்றுக்கான கற்பிதம். அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட என்.பி.பி. எம்.பிக்கள் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக மனித உரிமைகளுக்காக போராடவேண்டும். இல்லையென்றால் இவர்கள் இலங்கையர்களாக இருந்து விட்டு போகட்டும் அது அவர்களின் உரிமை. ஆனால் இவர்கள் தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகளோ, தமிழ்த் தரப்போ இல்லை.”
இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும் புதுவருடத்தில் எவ்வாறு இருக்கும்?
“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் நீண்ட தாமதத்தை காட்டினால் அதை மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. முன்னைய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறாமல் நடந்துகொண்டதன் விளைவுகளை மக்களுக்கு இடையறாது சுட்டிக்காட்டிய வண்ணம் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி பொறுப்புக்கூறுவதில் அதற்கு இருக்கும் கடப்பாடு தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியிருக்கும்.”
செங்கதிரோனின் “யாவும் கற்பனையல்ல” சிறுகதைத் தொகுப்பு – ஒரு புதிய பரிமாணம்!
“இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவும், வழமையான சிறுகதைக்குரிய மரபு வழிவந்த வாய்ப்பாடுகளை மீறி அல்லது கட்டுடைத்து உருவம், உள்ளடக்கம், உத்தி என்பவற்றில் ஒரு வித்தியாசமான திசையைக் காட்டுவதன் மூலம் இந்நூலின் வரவு ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் புதிய பரிமாணமொன்றினை வெளிப்படுத்தியுள்ளது. “
மட்டக்களப்பில் எஸ்.பொன்னுத்துரையின் ‘முதல் முழக்கம்’ நாடகமும் பின்னணிக் கதையாடல்களும்
“இலங்கையின் தமிழ் நாடக வரலாறுகளை எழுதியோர் எஸ்.பொன்னுத்துரையின் நாடக அக்கறைகளையும் ‘முதல் முழக்கம்’ போன்ற நாடகத்தின் திணிவுகளையும் பேசாமல் இருட்டடிப்புச் செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் மீறி நாடகத்தின்மீதான எஸ்பொவின் ஊழியம் மேற்கிளம்பிவரும் காலம் அண்மித்துவிட்டது என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.”
மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” !
“அறக்கருத்துகளின் அடிப்படையில் எழுந்த, சிலப்பதிகாரத்தின் கதை, சோழ நாட்டிலே தொடங்குகிறது. பாண்டிய நாட்டிலே உச்சம் பெறுகிறது, சேரநாட்டிலே நிறைவு பெறுகிறது.
இவ்வாறு, முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிகளோடும், பூம்புகார், வஞ்சி, மதுரை ஆகிய மூன்று நகரங்களோடும், பேரியாறு, காவிரி ஆறு, வைகை ஆறு ஆகிய மூன்று பெரும் நதிகளோடும் தொடர்பு பட்டதாகவும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்குகின்ற ஒப்பற்ற செந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி மேடையேற்றிய இந்தப் பாரிய முயற்சியில், அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, இது தற்செயலா அல்லது தமிழ் அன்னையின்அருட்செயலா என்று வியந்து, நினைந்து, மகிழ்ந்து நிற்கிறோம்.”
வரலாற்றுச் சாபத்திற்கு ஆளாகாமல் இப்போதே அரசியற் செயல்பாடுகளை முன்னெடுக்கக் களமிறங்குங்கள் (சொல்லித்தான் ஆகவேண்டும்! – சொல்-31)
இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வில் இந்தியாவின் தலையீட்டை ஒரு காலகட்டத்தில் ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ என வர்ணித்து, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்து, இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் அதன் விளைவான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மூர்க்கமாக எதிர்த்த ஜே.வி.பி யைப் பிரதான-தலைமைக் கட்சியாகக்கொண்ட தேசிய மக்கள் சக்தி (என் பி பி) அரசாங்கத்தின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்-தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அரசியல் ரீதியாக உணர்ந்துகொண்டு இலங்கைக்கு நன்மையளிக்கும் வகையில் இராஜதந்திரரீதியாக நடந்துகொள்கிறாரென்றால், இலங்கைத் தமிழர்கள் அதனைவிடவும் அதிகமாக இந்தியாவை அனுசரித்துப் போவதே அரசியல் மதியூகம் நிறைந்தது என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!(வெளிச்சம்:034)
“எம்.ஏ. சுமந்திரனின் அதே அரசியல் குணாம்சங்களை கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழரசுகட்சிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இவரின் சிறிதரன், செல்வம் ஊடான நகர்வு நிச்சயமாக சுமந்திரனுக்கு எதிரானது என்பது வெளிச்சம். இது தமிழரசுக்கட்சியின் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?”
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிகள்
“அடிப்படை ஜனநாயக பண்பு கூட இல்லாதவர்களினால் தமிழ் மக்களை எவ்வாறு சரியான அரசியல் வழித்தடத்தில் வழிப்படுத்த முடியும் எனும் கேள்வி எழுகிறது. ஆனால் இந்தக் கேள்வி எதுவும் தழிழரசுக் கட்சியின் தொண்டர்களுக்கு எழுவதில்லை. அவர்களும் பொதுவெளியில் இரு அணிகளாகப் பிரிந்து நின்று ஆளையாள் குற்றம் சுமத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எண்ணையூற்றி எரியவைப்பவர்களாக புலம்பெயர் தமிழர்களும் சமூகஊடகங்களும் மிகக் காத்திரமாகச் செயற்படுகின்றன.
இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் எதிர்ப்பரசியலால் உணர்வூட்டப்பட்டு அரசியலுக்கு நுழைந்த இவ்வரசியல் தலைவர்கள் அந்த எதிர்ப்பரசியல் போக்கைத்தான் தமது கட்சியின் முரண்பாட்டுக்கும் தீர்வாகக் கருதுகிறார்கள். இதைத்தவிர அவர்களால் வேறு எதைத்தான் தர முடியும் தொண்டர்களுக்கும் அதுதானே தேவையாக இருக்கின்றது.”
வரலாற்றின் எதிர்பார்ப்பு
“எளிமையான அரசாங்கம் என்ற ஒரு புதிய தோற்றமும் பண்புருவாக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கப்படுகிறது. ஆனால், இவை மட்டும் மாற்றங்களுக்குப் போதாது. நாட்டுக்கு வருவாயைத் தேடும் வழிகளை அரசாங்கம் கண்டறிய வேண்டும். அவற்றை விருத்தி செய்ய வேண்டும். ஊழல் பெருச்சாளிகளாக நாட்டைச் சூறையாடியோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பை பொருத்தமான முறையில் பன்மைத்துவத்தின் அடிப்படையில், பல்லினத்தன்மைக்குரியதாக மாற்றியமைக்க வேண்டும். பொருளாதார மறுசீரமைப்புக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண வேண்டும். வடக்குக் கிழக்கிலிருந்து படைகளைக் குறைக்க வேண்டும். அங்கே மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலங்களை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன. “
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! -40 (நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் தொடர்கிறது..)
தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், இந்திய அமைதிப்படை காலத்தில் தனது ஊருக்கான பிரசைகள் குழுவில் தான் இணைந்து ஆற்றிய சில பணிகள் குறித்து இங்கு பேசுகிறார்.
