எருமைகள் (கவிதை)

எருமைகள் (கவிதை)

எருமைகள்  

எருமைகள்  

சேற்றிலே நிக்கின்றன 

சேற்றிலே நடக்கின்றன 

சேற்றிலே மேய்கின்றன 

சேற்றிலே படுக்கின்றன 

எருமைகளுக்குப் சேறு சந்தணம். 

எருமை இயமனின் செல்லப் பிராணி  

இயமன் பொழுது போக்குவது எருமைகளுடன் 

இயமன் மொழி எமக்குப் புரியாது  

எருமைகளுக்குப் புரியும் 

எருமைகள் இயமன் சொல்லுவதை திருப்பிச் சொல்லும் 

எருமைகளுக்கு அது வேத வாக்கு   

அகத்திய முனிவரின் அற்புதத் தமிழ்  

எருமைகளுக்கெல்லாம் 

இயமனின் தொழில் 

படைத்தல் 

காத்தல் 

அருளல்  

அழித்தல் அல்ல.   

எருமைகளுக்கு வழிகாட்டி  

அரக்கு‘ எருமை 

இயமனின் பட்டியில் 

பல அரக்கு எருமைகள். 

அரக்கு எருமையில்தான்  

இயமன் ஊர்வலம் வருவான் 

முட்டக் கண்ணும் 

விரித்த சடையும் 

காதில் குண்டலமும்  

பாசக் கயிறும் எம்மைக் கலங்கடிக்கும்.  

மார்க்கண்டேயனாய்  

சிவனைத் தஞ்சமடைந்தால்  

இயமன் பஞ்சாய்ப் பறப்பான்  

எருமைகள் சேற்றில் மறையும்  

செந்தாமரைகள் பூக்கும்  

சிவனே சரணம்……..  

        —  சு.சிவரெத்தினம்