மட்டக்களப்பு என்பது எந்த இடத்தைக் குறிப்பது, அதற்கு கண்டியுடனான தொடர்பு, கண்ணகி வழிபாட்டின் பரம்பல் மற்றும் தமிழ்- முஸ்லிம் சமூகங்களில் காணாப்படும் குடிமுறைமை ஆகியவை குறித்து இந்த பகுதியில் பேசுகிறார் அழகு குணசீலன்.
Category: அறிவித்தல்கள்
‘தீர்த்தத் திருவிழாவோடு காணாமல் போய்விடும் திருவிழாக் கடைகள்’ (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-11)
தமிழ் மக்கள் பொதுச்சபை ஒரு திருவிழாக் கடைதான். ஜனாதிபதித் தேர்தல் (தீர்த்தத் திருவிழா) முடிந்த கையோடு இது காணாமல் போய்விடும்.
சுவிஸ் TV யில் துவாரகா……! (மௌன உடைவுகள் 94)
துவாரகா விவகாரம் மற்றும் அதில் இருக்கக்கூடிய ஊழல் பற்றிய சுவிஸ் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்சி பற்றிய விவரங்களை தமிழில் தர முயல்கிறார் அழகு குணசீலன்.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 38)
கிழக்கு மாகாணத்தில் முதன்முதலில் தமிழ்-முஸ்லிம் உறவு சீர்கெட்டது எப்போது, அதற்கு காரணம் என்ன, அதில் தமிழரசுக்கட்சியின் பங்கு என்ன என்பதை இங்கு “கனகர் கிராமம்” நாவலின் பாத்திரங்கள் உரையாடுகின்றன.
ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும்
விடுதலை புலிகள் 13 வது திருத்தத்தை எதிர்த்தார்கள் என்பதற்காக அதை தொடர்ந்தும் எதிர்ப்பது தமிழ்த் தேசியத்துக்கான தங்களின் கடமை என்று நினைக்கின்ற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.
அந்த திருத்தத்தை பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று சில அரசியல்வாதிகளும் சிவில் சமூக முக்கியஸ்தர்களும் பேசுகிறார்கள். அந்த திருத்தத்தை ஒரு தடியினால் கூட தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று ஒரு காலத்தில் கூறிய மூத்த தமிழ்த் தலைவர் சம்பந்தன் ஐயா அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கோருவதில் முன்னரங்கத்தில் நிற்பவர்களில் முதன்மையானவராக விளங்குகிறார்.
சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை : பல நூற்றாண்டுகள் உறவும், சில பத்து ஆண்டுகள் பகையும். (பகுதி:1)
சம்மாந்துறை- வீரமுனை பகுதிகள் இன்று பலராலும் பேசுபொருளாக்கப்பட்டுள்ளன. பெரும் படுகொலைகள் சிலகாலம் நடந்த இந்த ஊர்களில் சுமூக உறவின் காலம் பல நூற்றாண்டு. அவை குறித்து பேசுகிறார் அழகு குணசீலன்.
‘தமிழ் மக்கள் பொதுச்சபை’யின் அரசியல் வன்முறை (சொல்லித்தான் ஆகவேண்டும்!
‘தமிழர் அரசியல் பொதுவெளியில் ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ ஒரு சிவப்பு விளக்குச் சமிக்ஞையே. ஆம்! அது ஆபத்தானது. அதன் ஆரம்பமே அதன் ஜனநாயக மற்றும் கருத்துச் சுதந்திர மறுப்பாகவும் அரசியல் வன்முறைப் பிரயோகமாகவும் இருக்கிறதே.’
இரு வேறு பாதைகளில் தமிழ்த்தேசியம்!
“அரசும் சிங்களப் பேரினவாதமும் தம்மைத் தோற்கடித்து, நிர்க்கதியாக்கியுள்ளன என்ற கோபம் மக்களிடமிருந்தது. இதனைத் தமது அரசியலுக்கான முதலீடாக மாற்றுவதிலேயே தமிழ்த் தலைமைகள் தீவிர கரிசனையைக் கொண்டிருந்தன. பதிலாக மக்களைப் பலப்படுத்துவதிலும் பிரதேசங்களை வளர்த்தெடுப்பதிலும் கரிசனை கொள்ளவில்லை.”
அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்
கூத்துக்கலைஞர் ஓ . கணபதிப்பிள்ளை அகவை நூறு நிகழ்வாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்திய குழந்தை எழுத்தாளர் டாக்டர் ஓ.கே.குணநாதனின் “அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்’ (நாவல்) வெளியீடு 01.06.2024 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போது செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய புத்தக விமர்சன உரை .
பட்டுவேட்டிக் கனவில் கோவணத்தையும் இழந்த ஈழத் தமிழர்கள் (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-09)
‘இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் எத்தனையோ படித்த கல்விமான்கள் இருந்தும்-ஆற்றல் மிக்க ஆளுமைகள் இருந்தும்கூட அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளும் தோல்வியுற்றுப் பின் அகிம்சைப் போராட்டமும் தோல்வியுற்று அதற்குப் பின் அதன் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டமும் தோல்வியுற்று இறுதியாக இராஜதந்திர நகர்வுகளும் தோல்வியுற்று தென்னிலங்கை அரசியலில்-இந்து சமுத்திரப் பிராந்திய அரசியலில்-சர்வதேச அரசியலில் ஒரு ‘வேண்டா பொண்டாட்டி’ யாக இலங்கைத் தமிழ்ச் சமூகம் வந்துநிற்கிறது.’