மரணமடைவதை பெரும்பான்மையானவர்களுடன் இணைவதாக (Joining the majority) கூறும் முதுமொழி ஒன்று இருக்கிறது. உலகில் வாழ்பவர்கள் அல்ல, காலமானவர்களே பெரும்பான்மையினர். சாமி ஐயா பெரும்பான்மையுடன் இணைந்துவிட்டார். நாங்கள் தான் சிறுபான்மையினர்.
சமூகத்தில் எமக்கு ஏதாவது அடையாளம் இருக்குமானால் அதற்கு காரணமானவர்களில் சாமி அவர்களும் ஒருவர். சென்றுவாருங்கள் சாமி ஐயா! உங்களை நினைத்துக் கொண்டிருப்பதை தவிர எங்களால் என்ன செய்யமுடியும்!