“ஒட்டுமொத்தத்தில் சிறுபான்மை மக்களுக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை வழங்குவது என்பது எந்த ஆட்சி முறையாயினும் மைய அதிகாரம் பாராளுமன்றத்திற்கா…? அல்லது ஜனாதிபதிக்கா….? ஜனாதிபதி நல்லவரா….., ?கெட்டவரா……? என்பனவற்றுக்கு எல்லாம் அப்பால் அடுத்த தடவை அதிகார கதிரையில் அமர்வதையே குறியாகக்கொண்டது என்பதையும், கடந்த காலங்கள் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி பெரும்பான்மை சமூகம் தனித்து தங்களுக்கான ஆட்சியை தீர்மானிக்க முடியும் என்பதையும் சாதாரணமாக கடந்து செல்லும் அரசியல் அனுபவங்களாக கொள்ள முடியாது.”
Category: அரசியல்
மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும்
“மக்கள் NPP க்கு அதிகாரத்தை – ஆணையை வழங்கியது மாற்றங்களைச் செய்வதற்கே. அதாவது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தமது நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும்.
ஆனால், அதைச் செய்யாமல், கடந்த கால ஆட்சித் தவறுகளைத் தொடருவதும் கடந்த கால ஆட்சியாளர்கள் காட்டிய தயக்கத்தையும் – விட்ட தவறுகளையும் (ஊழலைத் தவிர) தொடருவதும் நல்லதல்ல. அது ஆட்சித் திறனுமல்ல.”
கண்ணகி விழா: கலை இலக்கியங்களின் ஊடாக ஓர் அறிவார்ந்த சமூகம் நோக்கி..
2025 செப்டம்பர் 25, 26, 27, 28 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் நடைபெற்ற பத்தாவது ‘கண்ணகி கலை இலக்கிய விழா – 2025’ இன் மூன்றாம் நாள் (27.09.2025) தொடக்கவிழா காலை அமர்வான ‘கூல வாணிகன் சாத்தானார் அரங்கு’ இல் கண்ணகி கலை இலக்கியக் கூடல் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஆற்றிய தொடக்கவுரை.
இராசரெட்ணம் : மட்டக்களப்பிற்கு வளம் சேர்த்த பல்துறை ஆளுமை.(வெளிச்சம்:084)
“கிழக்கிலங்கையின் சமூக, பொருளாதார, அரசியலில் – கல்வி ,கலை, இலக்கிய, பண்பாட்டு தளத்தில் தடம்பதித்த ஆளுமைகளுள் ஒருவரான முத்துக்குமார் இராசரெட்ணம் காலமானார். அவருக்கு “அரங்கம்” தனது அஞ்சலியை செலுத்துகிறது. அவர் பற்றிய அழகு குணசீலனின் நினைவுக்குறிப்பு இது.”
மன்னாரில் ஒரு அரகலய – மக்கள் போராட்டம்….!
“பொருளாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கை அற்ற கோஷங்களை மட்டும் மூலதனமாக இட்டு அறிக்கை அரசியல் செய்கின்ற தமிழ்த்தேசிய அரசியலும் மன்னார் மக்களின் இன்றைய இக்கட்டான நிலைக்கு பொறுப்புக் கூறவேண்டும். வெறுமனே அநுர அரசாங்கத்தின் தலையில் மட்டும் மிளகாய் அரைத்து தப்பிக்க முடியாது.
இந்திய நிறுவனத்திற்காக அன்று மூடிய வாயை திறக்க முடியாமல் தமிழ்த்தேசிய அரசியல் இன்று திண்டாடுகிறது.
தமிழ்த்தேசியத்திற்கே விலை பேசுகின்ற இவர்களுக்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன……?”
அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும்
“அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டல்களைச் செய்வதற்கு எதிரணி கட்சிகள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. ஆனால், விக்கிரமசிங்க அவரது கைதுக்கு பிறகு கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கக்கூடிய அளவுக்கு பலம் பொருந்திய ஒரு தலைவராக மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. 1975 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராவும் நடத்தியதைப் போன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரம் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மாகாநாட்டில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.”
இது போர்க்களமல்ல; அரசியற் களமே!
“மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவது என்பது, ஜனாநாயக அடிப்படையிலான கோரிக்கையாகும். அதை வலியுறுத்துவது ஜனநாயக அடிப்படையிலானது. எந்த நிலையிலும் எதன் பொருட்டும் அரசாங்கம் ஜனநாயக மறுப்பைச் செய்யக் கூடாது என்பதாக இந்தப் போராட்டங்களும் கோரிக்கைகளும் அமைய வேண்டும்.”
சத்தியசோதனை: ஜெனிவாவில் மூன்று நாள் மௌனவிரதம்.?(வெளிச்சம்:082)
“தமிழ்த்தேசிய அரசியல் பூகோள அரசியலில் சிக்காமல் விரலுக்கு ஏற்ற வீக்கத்துடன், சாத்தியமற்ற கனவுகளில் இருந்து விடுபட்டு மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரப்பகிர்வை கோருவதில் ஒருமித்து செயற்படவேண்டும்.
.
இல்லையேல் ,
இருந்ததையும் இழந்தாய் போற்றி….!
இலங்கையராவோம் போற்றி……. …….!”
மண்முனைக் கண்ணகைக்கு வரலாற்றில் ஒரு பெருவிழா….!(வெளிச்சம்:081)
“வீரசைவ வழிபாட்டு முறைகளும், சிறு தெய்வ வழிபாடு என்று ஒதுக்கப்பட்ட சனங்களின், சாமிகளின் இன்றைக்குமான இருப்புகளும் மட்டக்களப்பின் யதார்த்தம். மகுடி கூத்து, நாட்டுக் கூத்து, பள்ளு, வசந்தன் ஆட்டம், கொம்பு விளையாட்டு…. போன்ற பண்டைய அடையாளங்களோடும், பறை மேளம், உடுக்கை…. போன்ற எண்ணற்ற இசைவடிவங்களோடும் வாழ்ந்து வருகின்றனர் அவர்கள்.
தாய்வழி சமூகத்தின் எச்சங்களை இன்றுவரை கொண்டுள்ள மட்டக்களப்பில் பெண் தெய்வ பண்புகளும், பெண் நாட்டார் வழக்காறுகளும் நிறைந்து காணப்படுகின்றன.
இச்சனங்களின் வாழ்வியல் விழுமியங்களை தக்கவைக்கும் எத்தனிப்பு அவசியமானது. அந்த மீள் உயிர்ப்பே பிராமணிய கருத்தியலுக்கு எதிரான நமது சமூகத்தின் பன்முக அடையாளங்களை தேடுவதற்கான முயற்சியாகும். நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட இச் சனங்களின் பண்பாட்டில் இருந்துதான் நமது விடுதலைக்கான கூறுகளை முன்னெடுக்க முடியும்….”
ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க
இனத்துவ உறவுகளும் தேசிய இனப்பிரச்சினையும் இதுகாலவரையில் சிங்கள அரசியல் சமுதாயத்தினாலும் தமிழ் அரசியல் சமுதாயத்தினாலும் கையாளப்பட்ட நடைமுறைகள் காரணமாக இலங்கையின் இனப்பிளவு தொடர்ந்தும் ஆழமானதாகவே இருந்துவருகிறது. இனத்துவ உறவுகளுடன் தொடர்புடைய விவகாரங்களில் வடக்கும் தெற்கும் இரு வேறு உலகங்கள் போன்றே காணப்படுகின்றன. அத்தகைய கவலைக்குரிய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கு சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மாத்திரமல்ல, பெரும்பான்மைச் சமூகத்தையும் பழைய சிந்தனைப் போக்கில் இருந்து விடுபட வைக்கக்கூடிய மார்க்கத்தில் பயணம் செய்வதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் இனிமேலாவது தயாராக வேண்டும்.
