கிழக்கின் பெருந்தலைவர் செ.இராஜதுரை அவர்களின் மறைவை முன்னிட்டு அவரது பெருவாழ்வு பற்றிய பல்வேறு தகவல்களடங்கிய இக்கட்டுரை இன்றைய இளைஞர்களின் அறிதலுக்காக பிரசுரமாகின்றது.
Category: அரசியல்
2004 க்கு பிந்தைய மோசமான பேரழிவு: ஆட்சி சீர்திருத்த தேவை, தீராத தேசியப் பிரச்சினையால் தேசம் தொடர்ந்தும் பலவீனம்
“வலுவான நிறுவனங்கள், சமமான வளர்ச்சி மற்றும் உள்ளடக்கிய ஆட்சிமுறை இல்லாமல் நாடு மேலும் பலவீனப்படும்.
இயற்கை தெளிவான செய்தி அனுப்புகிறது.
மிக அதிக மையப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை ஒரு காலத்தில் பயனுள்ளதாக இருந்திருக்கும்;
இன்றைய காலநிலை மாற்ற சூழலில் அது போதுமானதல்ல.
நாடு பாதுகாப்பாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்க வேண்டுமெனில்
அதிகாரம் பகிரப்படவேண்டும், பிராந்திய அதிகாரங்களை வலுப்படுத்த வேண்டும், சமூகத்தையே மையப்படுத்த வேண்டும்.”
நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும்
“இந்தக் கருத்துக்களை தமிழர்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த போராளிகளை நிந்தனை செய்யும் நோக்கில் முன்வைக்கப்படுபவையாக வியாக்கியானம் செய்யவேண்டியதில்லை. அவர்களின் தியாகங்களை நினைவுகூருவதை மாத்திரம் முக்கியமான அரசியல் செயற்பாடாக முன்னெடுப்பதன் மூலமாக தங்களது அரசியல் இயலாமையை மறைக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கியவையே இந்த கருத்துக்கள்.”
வரலாற்றின் குற்றக் கிடங்கு
“ஆதிக்க அரசியலுக்காகப் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுச் சின்னங்களும் புதைகுழிகளும் இலங்கையில் ஏராளம் – தாராளம். இந்தப் புதைகுழிகள் வடக்கு, கிழக்கு,மேற்கு, தெற்கு, மத்தி என்று எந்த வேறுபாடுமில்லால் எல்லா இடங்களிலும் உண்டு. தமிழர்கள், சிங்களர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் என எல்லாத்தரப்பிலிருந்தும் கொன்று புதைக்கப்பட்டனர்; ஆற்றில் வீசப்பட்டனர்; தீயிட்டு எரிக்கப்பட்டனர். பலர் காணாமலாக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையின் ஆட்சிச் சிறப்பு இது. ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகாலம் நீடித்த அந்நியரின் (ஐரோப்பியரின்) ஆட்சியில் கொல்லப்பட்டோரை விடவும் சுதேச ஆட்சியில் – சுதந்திர இலங்கையில் கொல்லப்பட்டோர் அதிகம். இவ்வாறு கொல்லப்பட்டோருக்கான நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதிலும் உண்டு.”
நுகேகொட: ஆமை- முயல் -சிங்கம்….!(வெளிச்சம்:093)
“வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று சாதாரண கிராமிய விவசாயிகள், மீனவர்கள், தினக்கூலிகள்…. கருதுகிறார்கள். குற்றவாளிகள், ஊழல்வாதிகள் கைது செய்யப்படுவதை விடவும், சிறையில் அடைக்கப்படுவதை விடவும் தங்களின் வீடுகளில் மூன்று வேளையும் அடுப்பு எரிவதற்கு வழியில்லாமல் இருப்பது அவர்கள் பிரச்சினையாக உள்ளது.”
நுகேகொட போராட்டம்: ஒரு அரசியல் திருப்புமுனை!
“NPP தன் நெறிமுறையியல் mandate-ஐ கண்கூடான சாதனைகளாக மாற்றிக் காட்ட முடிந்தால், தளர்ந்து வரும் மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும். வெளிப்படைத் தீர்மானங்கள், சமூகநிலை வெற்றிகள் மற்றும் தொடர்ச்சியான தகவல்தொடர்பு மீள்வதற்கான முக்கிய தளங்களாக இருக்கும்.”
திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்
“ஜனாதிபதி திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வெறுமனே சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களின் கொள்கை என்று கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் கடைப்பிடித்த பாகுபாடான கொள்கைகள் மற்றும் அடக்குமுறைகளின் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவிக்கின்ற பிரத்தியேகமான பிரச்சினைகளை போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டினால் மாத்திரமே சமத்துவமான குடிமக்கள் என்ற உணர்வை அந்த மக்கள் மத்தியில் படிப்படியாக ஏற்படுத்த முடியும்.”
இனவாதம்: அம்பலப்படுத்திய புத்தருக்கு நன்றி….!(வெளிச்சம்: 092)
“ஒட்டு மொத்தத்தில் இனவாதத்தை , இனவாதத்தால் அணுகுகின்ற அரசியலே நிலவுகிறது. இது பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தால் அணுகும் முறை போன்றது. ஆபத்தானது. இதனால் புத்தர் திருகோணமலயின் கடற்கரையோரப்பாதுகாப்பு வலையத்தில் தற்காலிகமாக குடியேற்றப்படவில்லை என்பதே உண்மை. திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ளார். அந்த இடம் விரைவில் அவரின் நிரந்தரவதிவிடமாகவும் மாறும். திருகோணமலை வாக்காளர் பட்டியலில் புத்தரின் பெயர் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இனவாத வாக்குச்சேகரிப்புக்கு அவர் தனது பங்களிப்பை செய்யாமலா? இருக்கப்போகிறார்.”
கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேசவாதம் அல்ல – பகுதி 1 (சொல்லித்தான் ஆகவேண்டும்)
கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சமூக பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வென்றெடுப்பதற்குக் கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவமான அரசியற் கட்டமைப்பொன்று தேவையென்ற விடயம் அரசியல் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ மேலெழும் சந்தர்ப்பங்களிலெல்லாம், அதனைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல்-அதன் நடைமுறை யதார்த்தத்தை உணராமல் அல்லது உணர விரும்பாமல் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனத் தம்மை குறிசுட்டுக் கொண்டு சுயலாப அரசியல்-பிழைப்பு அரசியல் செய்கின்ற தமிழ்க் கட்சிகள் கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் விடயத்தைப் ‘பிரதேசவாதம்’ எனப் பெயர் சூட்டி முலாம்பூசி அதனை முடக்கிவிடும் முனைப்பையே காட்டி வருகின்றன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மாகாணசபை தேர்தல்களும்
“பதவிக்கு வந்த ஒரு வருட காலத்திற்குள் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அளித்த உறுதிமொழியை அதன் தலைவர்களில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், தற்போது அந்த தேர்தல்களை இயன்றவரை தாமதிப்பதற்கு அரசாங்கம் முன்வைக்கின்ற காரணங்களை நோக்கும்போது உள்ளூராட்சி தேர்தல்களை தாமதிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கடைப்பிடித்த அதே அணுகுமுறையையே இவர்களும் பின்பற்றுகிறார்கள் போன்று தெரிகிறது.“
