முறைமை வீழ்ச்சி….!   (வெளிச்சம்:051)

உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பு ஆடம்பர வாழ்க்கையை அன்றி மகிழ்ச்சியை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். இலாபத்தை உச்சப்படுத்தல் மூலம் இதை அடையமுடியாது. பொருளாதாரவளர்ச்சியும், மக்களின் திருப்தியும் நீண்ட காலமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கவில்லை. காலனித்துவ கால சுரண்டலும், வள அபகரிப்பும், மலிவான உழைப்பும் நேரடியாக இன்றைய காலநிலைப் பிரச்சினைக்கு காரணமானவை. நீர், மின்சாரம், போக்குவரத்துமுறை, வீட்டுத்தேவை, வர்தகமயப்படுத்தல் போன்ற என்னவெல்லாவற்றையும் நவகாலனித்துவத்தில் முதலாளித்துவம் முதன்மைப் படுத்துகின்றதோ அவை அனைத்தும் பெரும்பாலான மக்களை நிராகரிக்கின்றன.

மேலும்

சுமுகமான உறவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்ட மோடியும் திசாநாயக்கவும்

“இந்தியாவுக்கு விரோதமான கொள்கையுடன்  தொடங்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் தலைமையின் கீழான  ஆட்சியில் இந்தியாவுடனான உறவுகள் மற்றைய கட்சிகளின் அண்மைய  ஆட்சிக் காலங்களில் இருந்ததையும் விட மிகவும் சுமுகமானதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்ற ஒரு சுவாரஸ்யமான அரசியல் நிலைவரத்தைக் காண்கிறோம்.”

மேலும்

அநுர – மோடி பற்றிக் கொண்ட கரங்களுக்குப் பின்னால்…

“1980 களின் இறுதியில் இலங்கைத்தீவில் ஆயுதம் தாங்கிய இரண்டு அமைப்புகள் இந்தியாவைக் கடுமையாக எதிர்த்தன. ஒன்று ஜே.வி.பி. மற்றது விடுதலைப்புலிகள். ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தி, மாற்றியமைத்தது. அதனால் ஆட்சியைக் கைப்பற்றியது. இப்பொழுது அந்த ஆட்சியைத் திறம்பட நிகழ்த்திக் காட்ட முற்படுகிறது.
 
விடுதலைப்புலிகள் மாற்றத்தைப்பற்றிக் கவனத்திற் கொள்ளவில்லை. சூழலின் – காலத்தின் மாற்றத்தைப் பொருட்படுத்துவதில் தவறிழைத்தது.  அதனால் அது களத்தில் இருந்து அகற்றப்பட்டது.”

மேலும்

பிள்ளையான் கைது: ஒன்றும் ஒன்றும் இரண்டா….? (வெளிச்சம் :050)

“இனப்படுகொலை அழிவுகளையும், இறுதியுத்த அழிவுகளையும் செய்த அரசபயங்கரவாத இராணுவ இயந்திரத்தை பாதுகாத்துக்கொண்டு என்.பி.பி.யினால் எவ்வாறு நீதியை நிலைநாட்ட முடியும். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.வி.பி.னால் கொல்லப்பட்ட 1300 பேரின் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதற்கு ஜே.வி.பி.யின் நீதி என்ன?”

மேலும்

அழகு குணசீலனின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’-செங்கதிரோன் பார்வையில்

(அழகு குணசீலன் அவர்களின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
நூல் 01.03.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராசா முன்னிலையிலும், கிழக்குப் பல்கலைக்கழகக் கலாசார பீடத் தமிழ் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரம் தலைமையிலும் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றபோது பன்முகப்படைப்பாளியும் திறனாய்வாளருமான செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.)

மேலும்

வரி -வலி: பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்…..!(வெளிச்சம்: 049)

“கூட்டாளிகள் பொதுவாக ஒரே பண்பை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அப்போதுதான் ஒத்தோடமுடியும்.  அந்த கூட்டாளி அரசியலையே அநுரகுமார அரசாங்கமும் செய்கிறது. இது மாற்றத்திற்கான வழியல்ல. அமெரிக்க வரிவிதிப்பில் மட்டும் அல்ல ஒட்டு மொத்த இலங்கை பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கவும் இது அவசியம். இல்லையேல் நாடு மற்றொரு பொருளாதார மந்தத்தை சந்திப்பதது தவிர்க்க முடியாதது மட்டும் அன்றி , 2028 இல் கடன்களை மீளச்செலுத்தல் என்பதும் வெறும் கனவாகவே இருக்கும்.”

மேலும்

மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்

“கடந்த பதினாறு வருடகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது  இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தமிழர்கள் நெடுகவும் கானல் நீரை விரட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான் விதியோ என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.”

மேலும்

மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?

NPP  அலை இன்னும் ஓயவில்லை. அதற்குள்தான் நாம் வெற்றியைப் பெற வேண்டியுள்ளது. அறுதிப் பெரும்பான்மையை யாரும் பெறப்போவதில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் தம்மை – தமிழரசுக் கட்சியை ஆதரிப்பார்கள் என்று தான் நம்புவதாக – எதிர்பார்ப்பதாக.
 
ஆனால், தமிழரசுக் கட்சி என்பது எப்போதோ காலாவதியாகிப்போன ஒன்று. அதற்கு உயிரூட்ட முயற்சிப்பது இறந்த உடலுக்கு saline ஏற்றுவதைப்போன்றதாகும். அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.

மேலும்

பிரித்தானிய தடை:  துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!(வெளிச்சம்:048.)

சர்வதேச  மேலாதிக்க அரசியல் இதுவரை நாடுகள், அவற்றின் தலைவர்களுக்கு எல்லாம் ஐ.நா.வின், பெயரிலும், அமெரிக்க அணியின் பெயரிலும் விதித்த தடைகள் 20 வீதம் இலக்கை கூட எட்டவில்லை என்பது சர்வதேச நிபுணர்களின் கருத்து. போயும்… போயும்..  இலங்கையைச் சேர்ந்த நான்கு தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை  சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் அநுர அரசுக்கு மூக்கணாங்கயிறு குத்தவும், தென்னிலங்கை பேரினவாத சக்திகளை மேலும் வளர்த்து விடவுமே உதவும்.

மேலும்

வரவு செலவுத் திட்டம்: அபிவிருத்தியும், அரசியல் தீர்வும்…..! (வெளிச்சம்:047 (பகுதி 3))

“வரவு – செலவுத்திட்டத்தில்  யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு 100மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முழு இலங்கையிலும் பிற பிராந்திய நூல் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய்களில் 50 வீதம். அல்லது பிராந்திய நூல்நிலையங்களுக்கான மொத்த ஒதுக்கீட்டில் 33.3 வீதம்.(1/3). இதற்கு அநுரகுமாரவை தோளில் தடவ நமது  தமிழ்த்தேசிய அரசியல் வாதிகளும் தவறவில்லை. இதன் மூலம் அவர் வடக்கில் உள்ளூராட்சி அரசியலுக்கு முதலிட்டாலும், ஒரு வகையில் தோழருக்கு தோளில்  காட்டவேண்டிய விடயம் தான். 

ஆனால் மட்டக்களப்பில் ஒரு நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்னும் நிறைவு பெறாத நிலையில் கிடக்கிறது. அது இந்த ஆசான்களுக்கு தெரியவில்லை. இந்த நூல் நிலையம்  மட்டக்களப்பு தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் எம்.பி.க்கள்- மாநகர முதல்வர், உதவி முதல்வர் போன்றவர்களின் கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியினால்தான் இந்தளவுக்கு இழுபடுகிறது. இன்னும் இவர்களுக்கு மட்டக்களப்பு அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் தகுதி இருக்கிறதா? மட்டக்களப்பு மக்கள் மீதான உங்கள் சமூக அக்கறை என்ன?”

மேலும்

1 22 23 24 25 26 179