பிரதமர் ஹரிணி அபயசேகர வடக்கு தமிழ்மக்களை ஏமாற்று பேர்வழிகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். அதற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு எம்.பி.யை என்.பி.பி.க்கு வழங்கி நன்றி செலுத்தினாலும் தகும்.
Category: தொடர்கள்
திசைகாட்டிக்குச் செல்லும் முஸ்லிம் வாக்குகளை தடுக்கும் நோக்கிலான பிரச்சாரம்: வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு கோவணம் கட்டிக் கொள்ளும் முட்டாள்தனம்!
ஒரு புறம், முஸ்லிம் வாக்குகள் திசைகாட்டிக்குச் செல்வதைப் பார்த்து ஒப்பாரி வைக்கும் இவர்கள் மறுபுறம், பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்து செயற்பட விரும்புவதாக சொல்லி வருகிறார்கள்.
இந்த நபர்களின் தார்மீக ரீதியான இந்தச் சீரழிவே ‘முஸ்லிம் அடையாள அரசியல்’ மிக வேகமாக அஸ்தமித்துச் செல்வதற்கு பங்களிப்புச் செய்திருக்கிறது.
ஆட்சிசெய்யும் ஆற்றலை நிரூபிக்க அநுராவுக்கு அவகாசம் தேவை
“ராஜபக்சாக்கள் செய்ததைப் போன்று பொருளாதார நெருக்கடியை கையாளமுடியாமல் போகும்போது அநுரா குமார திசாநாயக்கவும் தன்னை அழைத்து ஆட்சிப்பொறுப்பை ஏற்குமாறு கேட்பார் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்பாவித்தனமாக எதிர்பார்கின்றார் போன்று தெரிகிறது.”
மாற்றத்துக்கான தேர்தல்: நேர்நிலையும் எதிர்நிலையும்
“நாட்டிலே ஏற்பட்ட அழிவு, நெருக்கடிகள், பின்னடைவுகள் அனைத்துக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் மட்டுமல்ல, மக்களும் பொறுப்புடையவர்களே. அதற்கான பொறுப்பை மக்கள் ஏற்கத்தான் வேண்டும்.”
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 54)
இந்த வார “கனகர் கிராமம்” தொடரில் கஞ்சிக்குடிச்சாறு குள அபிவிருத்திக்கான முன்முனைப்புகள் குறித்து விளக்கும் செங்கதிரோன், அத்துடன் அக்கால அலுவலக அரசியல் குறித்தும் கொஞ்சம் பேசுகிறார்.
பாராளுமன்ற தேர்தல்: படுவான்கரையின் தேவையும், தேர்வும் என்ன?(வெளிச்சம்:019)
இராசதுரை, இராஜன் செல்வநாயகம், தேவநாயகம், கனகரெட்ணம், கருணா, பிள்ளையானை இதே காரணங்களுக்காக துரோகி என்றவர்கள் இப்போது அபிவிருத்தி சிக்னல் போட்டு திரும்புகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் எதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பது? தடுமாறும் எதிரணி கட்சிகள்
“ஜனாதிபதியும் அமைச்சரும் தெரிவித்த கருத்துக்கள் 47 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மகத்தான வெற்றி பெற்றபோது தேர்தல் வரைபடைத்தை சுருட்டி வைப்பது குறித்து ஜே.ஆர். ஜெயவர்தன பேசியதை தவிர்க்க முடியாமல் நினைவுபடுத்துகிறது.”
கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..!(வெளிச்சம்:018)
கடந்த ஒரு மாதத்தில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த நம்பிக்கை சிறுபான்மை மக்களிடம் படிப்படியாக இழக்கப்பட்டு வருகிறது. இதுவே வடக்கு, கிழக்கில் பாராளுமன்ற தேர்தல் முடிவை தீர்மானிக்கின்ற முக்கிய போக்காக அமையும்.
இனியும் தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களா?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, உடைந்து நொறுங்கி இல்லாமற்போய் விட்டது. பதிலாக ‘தமிழ்த்தேசியம்‘ என்ற அடையாளத்தோடு (மஞ்சள் – சிவப்பு நிறத்தில்) பல கட்சிகளும் குழுக்களும் போட்டியில் இறங்கியுள்ளன. இவற்றின் பெயரையெல்லாம் மனதில் வைத்திருப்பதற்குக் கடவுளாலும் முடியாது. சாத்தானாலும் இயலாது.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்- 53)
“வரலாற்றை நுணுகி ஆராய்ந்தால் தமிழரசுக்கட்சியின் மூலோபாயமற்ற இனவாத நடவடிக்கைகளே இதற்குக் காரணம். தமிழரசுக்கட்சியின் போராட்ட நடவடிக்கைகள் யாவும் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுப்பதாயும் – பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கைப் பிடித்த கதையாகவுமே முடிந்திருக்கின்றன. “