“இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அட்டமஸ்தானாதிபதி போன்ற உயர் நிலை மதகுருமார் சம்பந்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சாதிக்கும் மௌனம் உணர்ச்சிபூர்வமான விவாதத்துக்குரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், சிறுவர் துஷ்பிரயோகத்துக்கும் சுரண்டல்களுக்கும் எதிராக மகாநாயக்கர்கள் உறுதியாகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். சமூகத்தில் ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறிப் போதனைகளைச் செய்கின்ற தலைவர்கள என்ற வகையில் அது அவர்களின் தலையாய கடமையாகும். இந்த மௌனம் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களைப் பாதூகாப்பதில் நிறுவன மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வியாகவே நோக்கப்படுகிறது.”
