“ஒட்டு மொத்தத்தில் டாக்டர் சுப்பிரமணியனின் விரிவுரை இலங்கை புத்தி ஜீவிகளுக்கு ஒரு சவால். பொதுவாக ஜனநாயகம் என்பது அரசியல், மற்றும் பொருளாதார சீர்குலைவுக்கு எதிரான பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த அரசியல், பொருளாதார நச்சு இரத்த சுற்றோட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இலங்கைக்கு “அரசியல், பொருளாதார சுய பரிசோதனை” என்பது காலத்தின் கட்டாயம். இது விடயத்தில் பழைய பொருளாதார இரத்த சுற்றோட்டத்திலேயே பயணிக்கும் அநுர அரசாங்கம் இலங்கையை அரசியல், பொருளாதார சிறையில் இருந்து மீட்குமா? என்பதுதான் இன்றைய கேள்வி.”
Category: செய்திகள்
ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியம் -பகிர்வுகள்(பகிர்வு – 07)
ஈழத்தமிழ்க் கலைஞர்களை நாடளவிய ரீதியிலே ஒன்றிணைக்கும் வலையமைப்பைக் கொண்டு செயற்பட்டு வருவது இவ்வமைப்பின் குறிப்பிடத்தக்க பரிமாணமாகும்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகம் பிராந்திய செயற்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழு பிராந்திய ரீதியாகத் தனித்தனியே மேடைக்கு அழைக்கப்பெற்று ஒவ்வொரு பிராந்தியக் குழுவுக்கும் பணிகளைப் பாராட்டும் சின்னங்கள் பிரதமர் விருந்தினர் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களால் வழங்கி வைக்கப்பெற்றன.
கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – பகுதி V.(பக்கம்-08)(சொல்லித்தான் ஆகவேண்டும்)-சொல்-50
“தமிழர்களுடைய வாக்குகள் சிதறி அம்பாறை மாவட்டத் தமிழர்களுடைய ஒரேயொரு பிரதிநிதித்துவமும் பறி கொடுக்கப்பட்டது.
இதற்கு அடிப்படைக் காரணமாகவிருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியின் (தமிழரசுக் கட்சியின்) கிழக்குத் தமிழர்களின்-அம்பாறை மாவட்ட தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தின் மீது அக்கறையற்ற யாழ் மேலாதிக்க அரசியல் குணாம்சமேயாகும்.”
இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது?
எது எவ்வாறிருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மீண்டும் அவர் அக்கறை காண்பிக்க தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளை, தமிழ்நாடு சட்டசபை தேர்தல்கள் நெருங்கும் நிலையில், தனது மாநிலத்தின் மற்றைய அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கு முன்னதாக பிரதமருக்கு கடிதம் எழுதியதன் மூலம் ஸ்ராலின் முந்திக் கொண்டார் என்ற விமர்சனமும் உண்டு.
கல்விச் சீர்திருத்தம் படும்பாடு…! (மூன்றாவது கண்: II)
“கல்விச் சீர்திருத்தம் பற்றிய விடயதானங்களை பேசாது கல்வியமைச்சர் மீது எதிர்க்கட்சியினரும், சிங்கள -பௌத்த அடிப்படை வாதிகளும் , சமூக ஊடகங்களும் அள்ளி வீசுகின்ற அநாகரிகமான தனிநபர் தாக்குதல்கள் அதுவும் ஒரு பெண்ணாக ஹருணி அமரசூரிய எதிர்கொள்ளும் அபாண்டமான பழிகள் எந்த ஒரு நாகரிக சமூகத்தாலும், அரசியலாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால் அதற்காக அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம் தவறுகள் அற்றது என்று சால்வை போடுவதற்கும் இல்லை. சீர்திருத்தங்களுக்கு கல்வி அமைச்சர் பொறுப்பு கூறவேண்டியவர் என்றாலும், முழுமையான கூட்டுப் பொறுப்பு அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவைக்கும் இருக்கிறது. இந்த பொறுப்பை அரசாங்கமும், அமைச்சரவையும் கருத்தில் கொண்டார்களா? என்ற கேள்வியும் தவிர்க்க முடியாததாகிறது.”
நீலாவணனின் காவியங்கள்: (பகிர்வுகள்- பகிர்வு6)
தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையும் தமிழ்ச்சங்கமும் இணைந்து
23.10.2025 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட
கேட்போர் கூடத்தில் மொழித்துறைத் தலைவர் (தெ.கி.ப) கலாநிதி அமரசிறி
விக்கிரமரத்ன அவர்களின் தலைமையிலும் கலை கலாசார பீடாதிபதி (தெ.கி.ப) பேராசிரியர் எம்.எம்.எம். பாஸில் அவர்களின் முன்னிலையிலும்
நடாத்திய ‘இலக்கியவெளி’ கலை இலக்கிய அரசியல் பண்பாட்டு இதழின்
நீலாவணன் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் ‘நீலாவணனின் காவியங்கள்’
எனும் தலைப்பில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய உரை.
யாழ்ப்பாணத்தில் அனுர குமார: வழங்கல் இன்றி உருவான பிரபலமா அல்லது ஒரு அரசியல் மாயையா?
“அனுர குமார திசாநாயக்கின் யாழ்ப்பாண விஜயம் ஒரு அபூர்வமான அரசியல் தருணமாகும். இளைஞர்கள் குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் உருவான அவரது ஈர்ப்பு செயற்கையான அரசியலால் சோர்ந்த நாட்டில் உண்மைத்தன்மைக்கான ஆழ்ந்த தேவை இருப்பதை வெளிப்படுத்துகிறது.
இந்தத் தருணம் ஒரு திருப்புமுனையாக மாறுமா அல்லது இன்னொரு மாயையாக முடிவடையுமா என்பது அதன் பிந்தைய செயல்பாடுகளிலேயே நிர்ணயிக்கப்படும். வட பகுதி மக்களிடையே நம்பிக்கை மெதுவாக மீண்டும் உருவாகிறது ஆனால் உண்மையான நம்பிக்கை செயல்பாடுகளின் மூலம் மட்டுமே உறுதியாகும்.”
கேள்விக்கு உள்ளாகியிருக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்
“சர்வதேச சட்டம் தனக்கு தேவையில்லை என்றும் இரண்டாவது உலகப் போருக்கு பின்னரான காலப்பகுதியில் அமெரிக்காவின் உதவியுடன் நிறுவப்பட்ட உலக ஒழுங்கு இன்று அநாவசியமான ஒரு சுமையாக இருக்கிறது என்றும் ட்ரம்ப் கூறிய வார்த்தைகள் உலகம் வரும் நாட்களில் எதிர் நோக்கப்போகும் ஆபத்துக்கு கட்டியம் கூறுகிறது.”
செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம் (நூல் விமர்சனத்தின் வழியாக ஒரு அரசியல் பார்வை)
“1974-இல் இருந்தே தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கிய இலங்கை தமிழரசுக் கட்சியுடைய நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்திற்கும் கம்யூனிஸ்ட் தலைவர் நா. சண்முகதாசனுக்கும் இடையே 1975 ஆம் ஆண்டு சுன்னாகத்தில் ஒரு பகிரங்க அரசியல் விவாதக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் ‘தனிநாட்டை அடைவதற்கான தமிழசுரக் கட்சியின் செயற்திட்டம் என்ன?’ என்று சண்முகதாசன் கேள்வி எழுப்பியபோது, தர்மலிங்கம் ‘அது கட்சியின் உயர்மட்ட இரகசியம்’ என்று பதிலளித்து நழுவிக் கொண்டார். தனிநாட்டை அடைவதற்கான அந்த ‘உயர்மட்ட இரகசியம்’ என்னவென்று இன்று வரை யாருக்குமே தெரியாது.
இப்போது பலவிதமான அரசியல் கோரிக்கைகளை எழுப்பிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளும் அவற்றை அடைவதற்கான செயற்திட்டம் எதுவென மக்களுக்குத் தெளிவுபடுத்தாமலேயே தேர்தல்களில் வாக்குகளைச் சேகரித்து நாடாளுமன்றம் சென்று, ஒற்றையாட்சிக்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு சுகமாகக் காலத்தைக் கழித்து வருகின்றனர். இந்த நாற்காலிச் சுகவாசமும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது.”
வெனிசுவேலா: 21ம் நூற்றாண்டின் சோஷலிச விளைநிலம்.! (மூன்றாவது கண்: l.)
“”அமெரிக்க ஏகாதிபத்தியமும், பல்தேசிய கம்பனிகளும் மனித குலத்திற்கு பெரும் சவால் விடுகின்ற இக்காலத்தில் சோஷலிசத்தின் கடமையும், பொறுப்பும், செயற்றிறனும் புதிய வடிவில் பங்காற்ற வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது” என்ற 21ம் நூற்றாண்டின் சோஷலிசத்தின் தேவை குறித்த அறிஞர்களின் கருத்துக்கு வெனிசுவேலா அதிபர் நிக்கலஸ் மதுரோவின் கடத்தல் வலுச்சேர்திருக்கிறது.”
