“1930களின் இறுதி ஆண்டுகள் மற்றும் 1940களின் ஆரம்ப ஆண்டுகளின் போது உள்ளுராட்சி அமைச்சராக இருந்த பண்டாரநாயக்காவும் ஏனைய சில சிங்களத் தலைவர்களும் இலங்கையில் மூன்று மாகாணங்கள் கொண்ட தமது பழைய சமஸ்டிக் கோரிக்கை பற்றி தமிழ்த் தலைவர்களுடன் பேசினார்கள். ஆனால் அப்போது யாழப்பாண தலைப்பா கட்டி மேட்டுக்குடியினரின் பென்னம் பெரிய தலைவராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தார், அது தனது ஐம்பதுக்கு ஐம்பது (50 க்கு 50) கோரிக்கைக்கு எதிரான சதித் திட்டம் என்றார், அத்துடன் சமஸ்டி என்பது ‘இலங்கைக்கு கூடாத ஒன்று என்பதோடு, தமிழர்களுக்கு மிக மோசமான ஒன்று’ என முழக்கங்கள் இட்டு, யாராவது சமஸ்டி பற்றி பேசினால் அது தமிழினத் துரோகம் என்று பட்டம் தெளிக்கும் கட்டத்தில் தமிழர்களை நிறுத்தினார். அவர் அப்போது மட்டுமல்ல, சந்தனப் பொட்டு பொன்னம்பலத்தார் 1970ம் ஆண்டு தேர்தலில் தோற்று மலேசியா போகும் வரை சமஸ்டி கேட்ட செல்வநாயகத்தை திட்டித் தீர்ப்பதையே தமது அரசியலாகக் கொண்டிருந்தார்.”
“முதலில் இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளபடி முறையாகவும் முழுமையாகவும் மாகாண ஆட்சி முறை மக்களாட்சி கொண்டவையாக, காத்திரமான ஆற்றல்களுடன் செயற்படட்டும். தொடரந்து காலம் கனியும் போது இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறை மலரட்டும்.”
