தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!(வெளிச்சம்:034)

“எம்.ஏ. சுமந்திரனின் அதே அரசியல் குணாம்சங்களை கொண்ட  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தமிழரசுகட்சிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இவரின் சிறிதரன், செல்வம் ஊடான நகர்வு நிச்சயமாக சுமந்திரனுக்கு எதிரானது என்பது வெளிச்சம்.  இது தமிழரசுக்கட்சியின் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?”

மேலும்

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிகள்

“அடிப்படை ஜனநாயக பண்பு கூட இல்லாதவர்களினால் தமிழ் மக்களை எவ்வாறு சரியான அரசியல் வழித்தடத்தில் வழிப்படுத்த முடியும் எனும் கேள்வி எழுகிறது. ஆனால் இந்தக் கேள்வி எதுவும் தழிழரசுக் கட்சியின் தொண்டர்களுக்கு எழுவதில்லை. அவர்களும் பொதுவெளியில் இரு அணிகளாகப் பிரிந்து நின்று ஆளையாள் குற்றம் சுமத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எண்ணையூற்றி எரியவைப்பவர்களாக புலம்பெயர் தமிழர்களும் சமூகஊடகங்களும் மிகக் காத்திரமாகச் செயற்படுகின்றன.
இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் எதிர்ப்பரசியலால் உணர்வூட்டப்பட்டு அரசியலுக்கு நுழைந்த இவ்வரசியல் தலைவர்கள் அந்த எதிர்ப்பரசியல் போக்கைத்தான் தமது கட்சியின் முரண்பாட்டுக்கும் தீர்வாகக் கருதுகிறார்கள். இதைத்தவிர அவர்களால் வேறு எதைத்தான் தர முடியும் தொண்டர்களுக்கும் அதுதானே தேவையாக இருக்கின்றது.”

மேலும்

வரலாற்றின் எதிர்பார்ப்பு

“எளிமையான அரசாங்கம் என்ற ஒரு புதிய தோற்றமும் பண்புருவாக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கப்படுகிறது. ஆனால், இவை மட்டும் மாற்றங்களுக்குப் போதாது. நாட்டுக்கு வருவாயைத் தேடும் வழிகளை அரசாங்கம்  கண்டறிய வேண்டும். அவற்றை விருத்தி செய்ய வேண்டும். ஊழல் பெருச்சாளிகளாக நாட்டைச் சூறையாடியோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பை பொருத்தமான முறையில் பன்மைத்துவத்தின் அடிப்படையில், பல்லினத்தன்மைக்குரியதாக மாற்றியமைக்க வேண்டும். பொருளாதார மறுசீரமைப்புக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண வேண்டும். வடக்குக் கிழக்கிலிருந்து படைகளைக் குறைக்க வேண்டும். அங்கே மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலங்களை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன. “

மேலும்

சொந்த  மண்ணின் சுகந்த நினைவுகள்! -40 (நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் தொடர்கிறது..)

தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், இந்திய அமைதிப்படை காலத்தில் தனது ஊருக்கான பிரசைகள் குழுவில் தான் இணைந்து ஆற்றிய சில பணிகள் குறித்து இங்கு பேசுகிறார்.

மேலும்

13வது திருத்தத்தை தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

“13 வது திருத்தம் போதுமானது என்று யாரும் வாதிடவில்லை. தமிழர் அரசியல் சமுதாயம் அதன் வரலாற்றில் மிகவும் மோசமாக பலவீனமடைந்து சிதறுப்பட்டிருக்கும் நிலையில் அதுவும் இல்லாமல் போனால் நிலைமை என்ன? அந்த திருத்தத்தை காப்பாற்றாமல் மேலும் கூடுதலான அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது சமஷ்டித் தீர்வு பற்றியோ பேசுவதில் உண்மையில் அர்த்தமில்லை. அந்த திருத்தத்தை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்ற தென்னிலங்கை சக்திகளை வலுப்படுத்தக்கூடிய நிலைப்பாடுகளை எடுப்பதில் உள்ள ஆபத்தை தமிழ்க் கட்சிகள் புரிந்துகொண்டு கற்பனாவாத அரசியல் உலகத்தில் இருந்து நிஜ உலகிற்கு  இறங்கி வரவேண்டும்.”

மேலும்

இந்திய இலங்கை சமாதான ஒப்பந்த அமுலாக்கல்: ‘பந்து’ நெடுநாளாக இலங்கைத் தமிழர் கைகளில்தான்.(சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-30)

“கடந்த 37 வருடங்களாகத் தமிழ் அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை தோழர் பத்மநாபா தலைமையிலான முன்னாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைத் தவிர தனிநபராக நோக்கும்போது முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கத்தைத் தவிர வேறு எந்த தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது தனிநபர் அரசியல் தலைவர்களோ இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதில் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் உழைக்கவேயில்லை.”

மேலும்

மன்மோகன்சிங்: ஜனாதிபதி அநுர படிக்க வேண்டிய புத்தகம்…!(வெளிச்சம்:033)

“இந்தியா குறித்து மன்மோகன் சிங் கூறியுள்ள கருத்துக்கள் இன்றைய அநுர அரசின் இலங்கையர் கோட்பாட்டிற்கு ஒரு எச்சரிக்கையாக அமைகின்றன. கவனக்குறைவும், முன்யோசனையற்ற எந்த நகர்வும் குறிப்பாக சிறுபான்மை தேசிய இனங்கள் குறித்த நகர்வுகள் சர்வதேச, பிராந்திய பூகோள அரசியல் சுற்றுப்பாதையில் இருந்து நாட்டை தூக்கி வீசிவிடக்கூடியவை.”

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 58)

கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளம் அபிவிருத்தி செய்யப்படுவதற்கான முயற்சிகள் குறித்து இந்தப்பகுதியில் பேசுகிறார் செங்கதிரோன்.

மேலும்

தமிழரசுக்கு ஆண்டுகள் 75: ஆனது ஒன்றும் இல்லை…..!

“இனப்பிரச்சினைக்கான தீர்வில் மட்டுமன்றி, போருக்கு பின்னரான எந்த கோரிக்கையிலும் தமிழரசுக்கட்சி கொழும்பிலோ, பிராந்தியத்திலோ, சர்வதேசத்திலோ சாதிக்கவில்லை. காலத்திற்கு காலம் காற்று வளத்தைபார்த்து பட்டம் விடுதலே தொடர்கிறது.  அதுவும் இவர்களின் கணிப்பீடு எதிர்காற்றாக மாறியதே அதிகம். இதுதான் 75 ஆண்டுகால பழம்பெரும் பாரம்பரிய அரசியலால் மக்களுக்கு கிடைத்தது.”

மேலும்

அநுரகுமார முன்னிலையில்  13 வது திருத்தம் பற்றி  பேசாமல் மோடி இலங்கை தமிழர்களுக்கு கூறிய செய்தி?

“பெருமளவுக்கு மாறிவிட்ட அரசியல் சூழ்நிலைகளில் இந்தியா காலப்போக்கில் 13 வது திருத்தம் பற்றி பேசுவதை கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பெரும்பாலான  தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு கற்பனாவாத அரசியல் உலகில் சஞ்சரித்துக் கொண்டு அந்த திருத்தத்தை பற்றி அக்கறை காட்டுவதில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் விரும்பாத ஒரு விடயத்தைப் பற்றி இந்தியா ஏன் வில்லங்கத்துக்கு அக்கறைப்படப் போகிறது?”

மேலும்