“மக்களுடைய அரசியல் பிரதிநிதியாக இருப்பவர் சொந்த விருப்பு வெறுப்புகளையும் தனி நலன்களையும் ஓரங்கட்ட வேண்டும். முடிந்தளவுக்கு இறங்கியும் இணைந்தும் செயற்பட வேண்டும். இந்தப் பண்பு இல்லாதிருப்பதே சிறிதரனின் தோல்வியாகும். இந்தக் குறைபாட்டை விலக்கவில்லை என்றால், தேர்தல்களில் அவர் தொடர்ந்து வெற்றியீட்டலாம். வரலாற்றில் தோல்வி கண்ட அரசியல்வாதியாகவே அவர் மதிப்பிடப்படுவார். வரலாற்றின் நாயகர்கள் யாரென்றால் சமூக வளர்ச்சியை, சமூக மாற்றத்தை உருவாக்கியவர்களே. அவர்களுக்கே வரலாறுண்டு. “
Category: செய்திகள்
“அப்பா…..! நுஃமான் மாமா முஸ்லிமா..?” (வெளிச்சம்: 077)
“கடும்போக்கை” அங்கீகரிக்கவும் அல்லது அதில் நெகிழ்ச்சிப்போக்கை கடைப்பிடிக்கவும் சமூகங்கள் தயார்படுத்தப்படவேண்டும். இது பேராசிரியர் மௌனகுரு, பேராசிரியர் நுஃமான் போன்ற இருதரப்பு மூத்த கல்வியாளர்களின் பணியாகும். இவர்கள் இருவரும் வாய்திறக்க வேண்டிய ஒரு காலத்தில் மௌனம் சாதித்தவர்கள். சகல தரப்பு ஆயுத வன்முறைகளையும் கண்களை மூடிக்கொண்டு கடந்து சென்றவர்கள். இவர்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இருதரப்பு உறவை பலப்படுத்த தேவையான போது, போதுமான பங்களிப்பை வழங்கி சமூகங்களுக்கு முன்னோடிகளாக வழிகாட்டத்தவறியவர்கள். இப்போது வெள்ளம் தலைக்குமேல் வந்த நிலையில் இன்னும் கடந்த காலம்பற்றியே பேசுகிறோமேயன்றி நிகழ், எதிர்காலங்கள் பற்றி பேசவில்லை. “இப்படியும் ஒரு காலம் இருந்தது” தான். ஆக , அது இப்போது இல்லையே. அதற்கு, இனி செய்யவேண்டியது என்ன?
ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம்
“ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் மீண்டும் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை தமிழ்நாட்டின் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களின் மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக சில இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஜனாதிபதியின் விஜயத்தை இலங்கை கடற்படையினர் கச்சதீவுக்கு அண்மையாக மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை தாக்குவதற்கு கிடைத்திருக்கும் “இலவச அனுமதியாக” கருதாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்கு கொழும்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தைக் கேட்டிருப்பதாக டெக்கான் ஹெரால்டசெய்தி வெளியிட்டிருந்தது.
திசநாயக்கவின் விஜயம் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு நேரடியான ஒரு சவாலே தவிர வேறு ஒன்றுமில்லை என்று தமிழ்நாடு படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் என்.ஜே. போஸ் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் எத்தகைய வியாக்கியானத்தை செய்யும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.”
துரையப்பா படுகொலையும் தமிழ்த் தேசியப்பரப்பில் ‘துரோகி’ மொழியாடலும்
“துரையப்பா கொலைக்கு பின்பு பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் எனது பாட்டி வீட்டில் நான் அடைக்கலம் கொடுத்தேன். பிரபாகரன் எனது பாட்டி வீட்டில் குறைந்தது ஒருவருடம் தங்கி இருந்தார். பற்குணம் பின்னர் இயக்கத்தை கைவிட்டுச் செல்ல முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரபாகரனால் கொல்லப்பட்டதும் நிகழ்ந்தது. ஆரம்பத்தில் புதிய தமிழ் புலிகள் அமைப்பிலும், பின்னர் 1976 -இல் தமிழீழவிடுதலைப்புலிகளுடனும் இணைந்து செயல்பட்டேன்.
ஏப்ரல் 1984 -இல் புலிகளிலிருந்து நான் விலகிய பின்னர் இனத்துவ தேசியவாதச் சிந்தனை மரபின் அழிவுக் கருத்தியலை நான் படிப்படியாகத் தரிசிக்க தொடங்கினேன். தமிழ்த்தேசியவாதத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டு பயணித்து, பின்னர் அந்தக் கருத்தியலை விமர்சனத்திற்குள்ளாக்கிய எனது நீண்ட பயணத்தின் சுய பிரதிபலிப்பு இது. இறுக்கமான கருத்தியல் கட்டுமானத்திலும் மாற்றங்கள் ஏற்படும் எனும் தாற்பரியத்தைப்புரிந்து, எமது கடந்தகால வரலாறு சங்கடத்துக்கு உரியதெனினும் அதனை துணிச்சலுடன் வெளிப்படுத்துவது அவசியம்.” – ராகவன்.
அறகலய: அமெரிக்காவே சாதன லத …..! (வெளிச்சம்: 076)
“யு.என்பி – ஜே.வி.பி. நினைத்துப்பார்க்க முடியாத பின்கதவு உறவு அறகலய காலத்தில் ஏற்பட்டதல்ல. 2009 யுத்த முடிவுக்கு பின்னர் 2010 பொதுத்தேர்தலில் ஏற்பட்டது. ராஜபக்சாக்களுக்கு எதிரான இந்தக் கூட்டில் களங்கப்படுத்தப்பட்ட அரசியல் ஊடாக தமிழரசுக்கட்சியின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து கொண்டது. இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை தமிழ்பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தது என்பதும், புலிகளையும், மக்களையும் அழித்த படைத்தளபதியை வெட்கமின்றி ஆதரித்தது என்பதும் வரலாறு.”
கைதானதை அடுத்து ரணில் எதிர்க்கட்சிளை ஐக்கியப்படுத்தும் பலமான தலைவராக மாறிவிட்டாரா?
“விக்கிரமசிங்க விவகாரத்தில் முக்கியமான ஒரு அம்சத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர் இலங்கையின் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர். அவரது கைதும் நீதிமன்றத்தில் அவர் பல மணி நேரமாக அனுபவிக்க வேண்டியிருந்த அசௌகரியங்களும் கொழும்பு உயர் வர்க்கத்தவர்களுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி திசநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக, ஜே.வி.பி.யின் தலைவர்களின் எளிமையான குடும்பப் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு வர்க்க வன்மம் வெளிக்காட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு.”
கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்!
“கிளிநொச்சி மாவட்டத்தில் அதி கூடிய காலம் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துக் கொண்டிருப்பவர் சிறிதரன். இந்தப் பதினைந்து ஆண்டு காலப்பகுதியில் எவ்வளவு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி – உருவாக்கி வெற்றியடையச் செய்திருக்க முடியும்!
குறைந்த பட்சமாக இரண்டு படை முகாம்களையாவது விலக்குவதற்குப் போராடியிருக்கலாம்.
அல்லது உண்மையைப் பேசி, சமூகங்களின் நல்லிணக்கத்தைப் பேணி, மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வைக் காண முயற்சித்திருக்கலாம் என்று கேள்வியெழுப்புகிறார் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செய்தியாளர் கருணாகரன்.”
ஆகஸ்ட் 18 ஹர்த்தால் கூறிய செய்தி
“முரண்பாடுகள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் நடைபெற்ற ஹர்த்தாலின்போது இரு மாகாணங்களிலும் பல பகுதிகளில் காலையில் சில மணித்தியாலங்கள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அதேவேளை, இராணுவமயத்துக்கு எதிரான போராட்டம் என்பதையும் பொருட்படுத்தாமல் வேறு பல பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் ஒத்துழைப்பை வழங்கவில்லை. மற்றைய தமிழ்க் கட்சிகள் வெளிப்படையாக ஹர்த்தாலை எதிர்த்து அறிக்கை எதையும் வெளியிட்டிருக்க முடியாது என்கிற அதேவேளை, போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் மீதான அரசியல் பகைமை காரணமாக அது தோல்வியில் முடிவடைய வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்தன என்பதில் மறைத்துப் பேசுவதற்கு எதுவுமில்லை.”
ரணில் விக்கிரமசிங்க: பழுத்த ஓலை விழும் போது குருத்தோலை சிரிக்குமாம்! (வெளிச்சம்: 075)
“குற்றவாளிகள் ரணில் அல்ல கடவுளாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது நீதிமன்றத்தின் வேலை. ஆனால் சந்தேக நபர் ஒருவரை ‘குற்றவாளியாக’ புனைவதும், பொதுச்சொத்து துஷ்பிரயோகத்துடன் சம்பந்தம் இல்லாத குப்பைகளை கிளறுவதும் சுற்றவாளி ஒருவரை குற்றவாளியாக்கி விடாது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நாட்டின் முன்னாள் தலைவருக்கு சந்தேகநபர் என்ற அந்தஸ்தில் வைத்து அதற்குரிய கௌரவமும், மனிதாபிமானமும் காட்டப்படவில்லை என்பதாகும். ஒரு வகையில் இது சந்தேக நபர் ஒருவருக்குரிய மனித உரிமைகளை சட்டம், நீதித்துறை மீறுவதாகும்.”
சாமியார்களின் சங்கட அரசியல்…..! (வெளிச்சம்: 074)
“மன்னார் வைத்தியசாலையில் மட்டும் அல்ல வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பல்வேறு பிரச்சனைகள் உண்டு. நிதிவளம், ஆளணி, மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள் பற்றாக்குறையுடன், ஊழல், அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகள் என்று நீண்ட குறைபாட்டு பற்றாக்குறை உள்ளது. அதற்காக கிடைத்த அதிகாரப்பகிர்வு வாய்ப்பை வெறும் குறுங்கால சுய இலாப நோக்கில் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஆயர் வழங்கியுள்ள ஆலோசனை/ கோரிக்கை தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர நீண்ட கால தீர்வு நோக்கில் அப்பட்டமான அவலம்.”
