மகளிர் தினம்…. (கறுப்பு நட்சத்திரங்களில் இருந்து  ஒரு நட்சத்திரம்..!)

அரபு மொழியில் ‘மகளிர் தினம் ‘ எனத் தலைப்பிட்டு எழுதப்பட்ட இக்கதை பிரபல அரபுலகப் படைப்பாளி சல்பா பக்கிரால் எழுதப்பட்டது. ‘மௌனத்தின் உண்மையான முக்ககாடு’ என்ற தொகுப்பில் வெளிவந்துள்ள இச் சிறு கதையை ஜேர்மன் மொழிக்கு மாற்றம் செய்தவர் சுலேமான் தௌபிக்.  அண்மையில் மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட அழகு.குணசீலனின் ” கறுப்பு நட்சத்திரங்கள்” மொழிபெயர்ப்பு சிறுகதைத்தொகுப்பில் உள்ள பதினான்கு கதைகளில் இதுவும் ஒன்று.

மேலும்

வரலாற்றில் கற்றுக்கொள்ள மறுத்த பாடம்

“தேசிய மக்கள் சக்தியிடம் தோல்வியைச் சந்தித்து, தமிழ் அரசியல் பின்னடைவுக்குள்ளாகிய பின்னும் தம்மை நிதானப்படுத்திக் கொள்வதில் தமிழ் அரசியற் தரப்புகள் தவறுகின்றன. இந்த நெருக்கடியை, தளர்வை, சீர்செய்வதற்கு இவை முயற்சிக்கவில்லை. பதிலாக ஒன்றையொன்று கண்டித்துக் கொண்டும், ஒன்றையொன்று குற்றம்சாட்டிக் கொண்டும் உள்ளன. இதில் இன்னும் உச்சமாகவும் சிரிப்பாகவும் இருப்பது இந்த நிலையிலும் இவை துரோகி – தியாகி விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதுதான்.”

மேலும்

எங்களுக்கும் காலம் வரும்!

விட்டில்களும் ஒருநாள் உயரப்பறக்கும். அப்படி பெண்களும் வீறுகொண்டு உயர்வர். உயர்ந்ததால் வீழ்ந்தாலும் அடக்குமுறை தீயை அணைப்போம் என்று அவர்கள் உறுதி கொள்கின்றனர். உலக பெண்கள் தினத்தை முன்னிட்ட செங்கதிரோனின் கவிதை.

மேலும்

பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும்

“இனநெருக்கடியின் விளைவாக மூண்ட மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போரும் தென்னிலங்கையில் இரு ஆயுதக்கிளர்ச்சிகளும்  சமூகத்தில் ஆயுதங்கள் பரவலாக  புழக்கத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணங்களாகும். வன்முறைகளை தூண்டிய அரசியல் கலாசாரத்தின் விளைவுகளையே இலங்கை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை தோற்றுவிக்கப் போவதாக  கூறிக்கொண்டு பதவிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி தற்போதைய நிலைவரத்தை எவ்வாறு கையாளப்போகிறது என்பதை  அறிவதற்கு  நாமெல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஸ்ரீலங்காவை ‘கீளீன்’ பண்ணுவது சுலபமான வேலை அல்ல.”

மேலும்

அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா?

“வரவு செலவுதிட்டத்தில் வடக்கிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அரசாங்கம், கிழக்கிற்கு வழங்கத் தவறியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள்.
 
“வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி யாழ்ப்பாணத்துக்குள் மட்டும் செலவழிக்கப்படாமல், வன்னிக்கும் பகிரப்பட வேண்டும். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்கின்றனர்  வன்னித் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் அமைப்பினரும்.

மேலும்

ஏ.பீர் முகம்மது எழுதிய ‘தைலாப்பொட்டி’ 

“புதியகோலத்துடன் வித்தியாசமான உருவம் – உள்ளடக்கங்களுடனும் உத்தியுடனும் நண்பர் பீர்முகம்மதுவின் ‘தைலாப்பொட்டி’ வெளிவந்துள்ளது. ‘மண்ணின் மொழியில் மக்களின் கதைகள்’ என மகுடமிட்டு வந்துள்ள ‘தைலாப்பொட்டி’க் கதைகள்யாவும் பருவமழை வயற்காட்டு மண்ணில் முதன்முதலாக விழும்போது எழும் புழுதிவாசம்போல மண்வாசனை கமழுமாறு பின்னப்பட்டுள்ளன.”

மேலும்

வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா?

வடக்கின் சுற்றுலாவை பல வகையில் விருத்தி செய்யலாம் –  செய்ய வேண்டும். இலங்கையின் பிரதான வருவாயில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். அதற்கு வடக்கு மாகாணமும் தாராளமாகப் பங்களிக்க முடியும். சம நேரத்தில் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுலாவுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்வாய்ப்புகளைப் பெறக் கூடியதாகவும் இருக்கும்.
 
ஆனால், புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வடக்கின் சுற்றுலாத்துறைக்கென சிறப்பான நிதி ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அது குறித்த சிரத்தையைக் காணவும் முடியவில்லை. இது புதிய அரசாங்கத்தின் முதலாவது பாதீடு என்பதால், அடுத்த ஆண்டுகளில் இதைக் குறித்த அக்கறைகள் மேலெழக் கூடும். அதைக்குறித்த சிந்தனை இருக்குமானால், எதிர்காலத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடியதாக இருக்கும்.

மேலும்

அழகு குணசீலனின் “கறுப்பு நட்சத்திரங்கள்”

அழகு குணசீலன் மொழி பெயர்ப்புக்கு எடுத்துக் கொண்ட கதைகளின் மாந்தர்கள், சூழல், கதைக்களம் என்பவை வேறுபட்டவைகளாக இருந்த போதிலும் குணசீலனுக்குள்; இருந்த மானுட நேசிப்பின் காரணமாக ஒவ்வொரு கதையின் பாத்திரத்தினுள்ளும், கதைக்களத்தினுள்ளும் தன்னை அடையாளம் கண்டிருக்கின்றார். இந்த அடையாளம் காணல் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. சமூக யதார்த்தத்தின் மீதும் அந்த யதார்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தின் அனுபவத்தின் மீதும் அவருக்கிருந்த உறவாடுகையின் விளைவாகும்.

மேலும்

யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும்

“அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் எதிராக ‘போர்க்கொடி’ தூக்கியவர்கள் பெரும்பாலும் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாதவர்கள். இன்று இத்தகையவர்கள்   நிறவெறியையும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான உணர்வுகளையும் கொண்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியை பாராட்டுவதில் திருப்தி காண்கிறார்கள். 

அமெரிக்க மக்களின் வரிப்பணம் வெளிநாடுகளில் ஒதுக்கீடு செய்யப்படுவதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ச தங்களது குடும்பத்தின் ஆட்சிக் காலத்தில் சொந்த நாட்டு மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டதில் இருந்த வெளிப்படைத் தன்மையின் இலட்சணத்தை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.”

மேலும்

மாவையும் அம்பாறை மாவட்டமும்

‘சரி பிழைகளுக்கப்பால் தமிழரசுக்கட்சிமீது வைக்கப்படக்கூடிய விமர்சனங்களுக்கும் அப்பால் தமிழரசுக்கட்சி மீது இனிமேலும் வைக்கப்படக்கூடிய நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் அப்பால் தமிழரசுக்கட்சியின் சகாப்தம் மாவைசேனாதிராஜாவின் மரணத்துடன் முற்றுப்பெற்றுவிட்டது. இனித்தமிழ் மக்களின் தேவை தமிழர் அரசியலிலும் ஒரு முறைமை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு (புதிய) மாற்று அரசியல் அணியேயாகும். அதற்கான இடைவெளியை மாவையின் மரணம் ஏற்படுத்தியுள்ளது.’

மேலும்