இன்றைய “கனகர் கிராமம்” தொடர் நாவலின் அங்கத்தில் கனகரட்ணம் அவர்களின் மறைவுக்குப்பின்னர் அம்பாறையில் நடந்த சில விடயங்கள் குறித்துப்பேசும் செங்கதிரோன், முக்கிய கதாபாத்திரமான கோகுலன் எதிர்கொண்ட சில அரசியல் அழுத்தங்கள் குறித்தும் விபரிக்கிறார்.
Category: அரசியல்
சாத்தியமானவையே வெற்றியின் படிகள்
“தாமும் எதையும் செய்யாமல், பிறரால் செய்யக் கூடியதையும் செய்ய விடாமல் தடுப்பதென்பது 2009 க்கு முந்திய ஏக நிலைப்பாட்டு உளநிலையின் வெளிப்பாடேயாகும். அதையே தொடர்ந்தும் பின்பற்ற விரும்புகின்றனர். ஆனால், அந்த யுகம் மாறிவிட்டது. இது போருக்குப் பிந்திய சூழல். தீர்வுக்கான காலம்.”
சிங்க(ள) அரசியலில் புலிப் பொருளாதாரம் சாத்தியமா…….?(வெளிச்சம்: 036)
“பொருளாதார வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டை கட்டி எழுப்ப துரித பொருளாதார சீர்திருத்தங்கள், கொள்கைகள் அவசியம். இலங்கையில் பொருளாதாரத்தை வீழ்த்தியது இனநெருக்கடியும், அதனால் ஏற்பட்ட உள்நாட்டு போரும் என்பதை இரண்டாம், மூன்றாம் நிலைக்கும் அப்பால் தள்ளிவிட்டு கட்சி பிரச்சார அரசியலை முன்னெடுப்பது பொருளாதார மேம்படுத்தலுக்கு உதவாது .”
தமிழ்ப் புத்தாண்டும், தமிழரின் பாரம்பரியத் தைத்திங்கள் பண்டிகையும்!
தமிழர் பெருநாளாம் தைத்திங்கள் பண்டிகையின் தொன்மை குறித்து இலக்கியங்களை ஆதாரமாகக்கொண்டு நிறுவுகிறார் பாடும்மீன், சு. ஶ்ரீகந்தராசா.
புவிசார் அரசியல் சிக்கல்களுக்கு மேலாக கயிற்றில் நடக்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி அநுரா குமார
“பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிபெறுவதற்கு முயற்சிக்கும் இலங்கை தற்போதைய தருணத்தில் எந்தவொரு வல்லாதிக்க நாட்டுடனும் முரண்படக்கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது கட்டுப்படியாகாகாது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டிக்குள் இலங்கை சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யக்கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது ஜனாதிபதி திசாநாயக்கவைப் பொறுத்தவரை கயிற்றில் நடப்பதைப் போன்றதாகும்.”
வரலாற்றின் எதிர்பார்ப்பு!
“ஆயுதப் போராட்டத்தின் மூலம் எட்ட முடியாத வாய்ப்பை, தேர்தல் மூலம் பெற்றுள்ளது ஆளுங்கட்சி. அதை அது சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தி, வரலாற்றை உருவாக்க வேண்டும். அநுர குமார திசநாயக்க வரலாற்று நாயகர் என்றால், அவர் தடைகளைத் தாண்டவும் உடைக்கவும் வேண்டும். அரசியல் என்பது ஓயாத தடைதாண்டலும் ஓயாத முன்னேற்ற நடவடிக்கையும்தான். அதைச் செய்யாத தரப்புகள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்ளேயே செல்லும். அதைச் செய்யும் தரப்புகள் வரலாற்றின் மேற்படியில் ஏறிச் செல்லும். “
“கனகர் கிராமம்”. அரசியல் – சமூக – வரலாற்று நாவல். (அங்கம் – 59)
“கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதியில் அமைச்சர் கனகரட்ணம் அவர்களின் மரணம், இறுதி நிகழ்வுகள் ஆகியவை குறித்து செங்கதிரோன் நினைவு கூர்கிறார்.
எந்தப் பெறுமானமும் இல்லாத தமிழரசு!
“கட்சியை வளர்த்துக் கொள்வதற்காக தன்னோடு இணைந்து நின்ற தரப்புகளையே உறிஞ்சித் தோற்கடிக்கத் தெரிந்த தமிழரசுக் கட்சிக்கு – கட்சியினருக்கு – எதிர்த்தரப்பாக அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கான தேவைகளையோ உரிமைகளையோ பெற முடியவில்லை. குறைந்த பட்சம் அரசாங்கத்துக்கு சிறிய அளவிலேனும் நெருக்கடியை உருவாக்க முடியவில்லை. பிராந்திய சக்தியாகிய இந்தியாவைத் தமிழருக்குச் சாதகமாக்கவில்லை. சர்வதேச சமூகத்தை வென்றெடுக்க முடியவில்லை. “
‘மாயமானின்’ பின்னே சென்று பற்றியதையும் பறிகொடுக்கத் தயாராகும் தமிழ் மக்கள்.(சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-32)
“புதிய அரசியலமைப்பின் மூலம் தற்போதுள்ள 13 ஆவது திருத்தம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுமானால் அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை தமிழர்கள் வெறுங்கையுடன்தான் நிற்கவேண்டிய நிலையேற்படும்.
புதிய அரசியலமைப்பைத் தமிழர்கள் நம்பியிருப்பது இறுதியில் இலவு காத்த கிளியின் கதையாகவே முடியும்.
புதிய அரசியலமைப்பு தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு ‘மாயமான்’. அதன் பின்னால் போவது ஆபத்தைத்தான் கொண்டுவரும்.”
தமிழ்த்தரப்பு யார்…? அருணின் கேள்விக்கு என்ன பதில்!(வெளிச்சம்:035)
“தேசிய இனங்களை அங்கீகரிப்பதும், அவற்றின் அடையாளங்களை பேணுவதற்கான வசதி, வாய்ப்புக்களையும், உரிமைகளையும் வழங்குவது ஒரு இடதுசாரி (?) அரசாங்கத்தின் ஆகக்குறைந்த பட்ச கொள்கையாகவாவது அமையாவிட்டால் “இலங்கையர்” என்பது இல்லாத ஒன்றுக்கான கற்பிதம். அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட என்.பி.பி. எம்.பிக்கள் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக மனித உரிமைகளுக்காக போராடவேண்டும். இல்லையென்றால் இவர்கள் இலங்கையர்களாக இருந்து விட்டு போகட்டும் அது அவர்களின் உரிமை. ஆனால் இவர்கள் தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகளோ, தமிழ்த் தரப்போ இல்லை.”