தமிழர் அரசியல்வெளியில் அற்றுச் செல்லும் அரசியல் அறம்?-அரசியல் நாகரீகம்??- அரசியல் விழுமியங்கள்??? (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-40)

“ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மைத்தானே குறிசுட்டுக் கொண்டுள்ள கட்சிகளிடமிருந்த இரட்டை வேடம் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலில் இருக்கவில்லை.
 
 டக்ளஸ் தேவானந்தா பத்மநாபா தலைமையிலான ஈ பி ஆர் எல் எஃப் இயக்கத்திலிருந்த காலத்திலும்  பின் ஈ பி ஆர் எல் எப் ஐ விட்டுப் பிரிந்து ஈ பி டி பி கட்சியை ஆரம்பித்து ஜனநாயக வழிக்கு மீண்டு அரசியல் செய்த இன்று வரையிலான காலம்வரை புலிகளின் – பிரபாகரனின் பாசிசப் போக்குக்கு எதிராகவே இயங்கி வந்துள்ளார். அதனால் புலிகளின் கொலைத் தாக்குதல்களிலிருந்து பல தடவைகள் உயிர் பிழைத்துள்ளார். தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு தமது சுயலாப அரசியலுக்காகவும் தேர்தல் மைய அரசியல் தேவைகளுக்காகவும் உள்ளுக்குள்ளே புலிகளுக்கு எதிரான உணர்வுகளை வைத்துக் கொண்டு வெளியிலே புலிகளின் முகவர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டு புலிகளின் வாலைப் பிடித்துத் தொங்கிய போலித் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் போன்று ஒருபோதும் அவர் இரட்டை வேடம் போட்டதில்லை. சரி பிழைகளுக்கு அப்பால் அவரது அரசியல் வெளிப்படைத்தன்மையானது.”

மேலும்

வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle)

வயலின் இசைக்கருவியின் வரலாறு, உருவாக்கம், வகைகள், இசைக்கும் முறை, சிறந்த வயலின் கலைஞர்கள் பற்றிய ஒரு இசை ஆசிரியையின் சிறு குறிப்புகள் இவை.

மேலும்

கன்னடம் குறித்த கமல்ஹாசனின் கருத்தால் மூண்டிருக்கும் சர்ச்சையை புரிந்து கொள்தல் 

“அந்த நிலைப்பாட்டுக்கு பின்னால் எத்தகைய வர்த்தகக் கணிப்பீடுகள் இருந்தாலும், அத்தகைய அறிவிப்பு ஒன்றைச் செய்வதற்கு அவருக்கு இருந்த துணிச்சலை மெச்சவேண்டும். நீதிமன்றம் கூறியதைப் போன்று இது ஒரு அகங்காரப் பிரச்சினை அல்ல.  சுயமரியாதைப் பிரச்சினை.  கருத்தொன்றைக் கூறுவதற்கு ஒருவருக்கு சகல உரிமையும் இருக்கிறது. தான் கூறியது சரியானது என்று அவர் நம்பினால் அதில் உறுதியாக நிற்பதற்கான உரிமையும் அவருக்கு இருக்க வேண்டும்.”

மேலும்

துரோகிகள் Vs தியாகிகள்!

“உலகில் இந்தளவுக்குத் துரோகி என்ற சொல்லோடு மிக நீண்ட காலம் – ஏறக்குறைய 75 ஆண்டுகள் – சீரழிந்த இனமோ சமூகமோ வேறு இருந்திருக்க முடியாது. அரசியலில் மட்டுமல்ல, கலை இலக்கியத்திலும் ஊடகத்துறையிலும் இந்தத் ‘துரோகி‘ முத்திரை குத்தும் போக்கு நீடித்தது.
 
ஆக இந்த முட்டாள்தனம் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும் செழித்துப் பரந்து வளர்ந்துள்ளது.“

மேலும்

ஜேர்மனியில் அநுர:  குவியும் போர்க்குற்ற, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்…! (வெளிச்சம்: 063)

“ஐ.நா.கடந்த காலங்களில் பல தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தும் எதுவும் இலங்கை அரசாங்கங்களால் நடைமுறைப்-படுத்தப்படவில்லை. கடந்த கால இலங்கைத்தலைவர்களிடம் இருந்து அநுரகுமாரவின் தலைமைத்துவத்தையும் இதுவரை வேறுபடுத்த முடியவில்லை. போர்க்குற்றங்களோடு தொடர்பான முன்னாள் படைத்துறை முக்கியஸ்தர்களை ஐ.நா. பிரேரணைக்கு முரணாக பாதுகாப்பதுடன், பிரேரணையையும் அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நிராகரித்துள்ளது.”

“இதன் விளைவுகள் போகப்போக புரியும்…!. 2026 இல்  கடன் மீளளிப்பு ஆரம்பமாகும் போது தெரியும்….!”

மேலும்

இருளில் தேடும் தமிழ்ப்பூனை

“இதொன்றும் தமிழ் வரலாற்றுக்குப் புதியதல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய் தொடங்கி விட்டது. அப்பொழுது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டி மகிழ்ந்தன.
அதற்குப் பிறகு இயக்கங்கள் துப்பாக்கியினால் விளையாடின. துரோக- – தியாகி அடையாளப்படுத்தல் தொடர்ந்தது. இந்த விளையாட்டுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் தம்மையே பலிகொடுக்க வேண்டியிருந்தது.”

மேலும்

உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதில் தமிழ்க் கட்சிகளின் அணுகுமுறைகள்

“வடக்கில் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளையும்  அமைக்கப்படும் கூட்டணிகளையும் நோக்கும்போது ‘துரோகிகள்’ என்று ஒருதரப்பு  அரசியல்வாதிகளை அழைக்கும் கலாசாரத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்று தெரிகிறது. “

மேலும்

கிழக்குத்தமிழர் அரசியல்: தனித்துவம் -மாற்று!  சந்தர்ப்பங்கள் -சவால்கள்!!(வெளிச்சம்:062)

வடக்கில் ஈ.பி.டி.பி. யோடு பேசிய, பேச திகதி குறித்த தமிழ்த்தேசியம் கிழக்கில் ரி.எம்.வி.பி.யுடன் பேசத்தயாரில்லை. “துரோகி” என்றாலும் “நாங்கள் வடக்கார்” என்ற பிரதேசவாத மேலாண்மை அரசியல் அதிகார திமிர் நியாயம். வடக்கில் “தமிழ்க்கட்சிகளோடு” / “தமிழ்பேசும் கட்சிகளோடு ” பேச முடிவெடுக்கப்பட்டதாம். ஆக, கிழக்கில் தமிழ்க் கட்சிகளும் இல்லை. தமிழ்பேசுபவர்களும் இல்லை. இதற்கு பெயர்  “புரட்டு அப்புக்காத்துதனம்”.

மேலும்

டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்!

இங்கே மிகப் பெரிய சிக்கலாக இருப்பது, தற்போதைய சூழலில் ஈ.பி.டி.பி ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதேயாகும். தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் இரண்டுக்கும் இப்போது ஈ.பி.டி.பி யின் ஆதரவு வேண்டும். ஆனால், அதைப் பகிரங்கமாகப் பெற முடியாது. இதுதான் பிரச்சினை. கள்ள உறவுக்குத் தயார். அதில் கிடைக்கின்ற இன்பத்தையும் சுகத்தையும் இலாபமாக அனுபவிக்கத் தயார். ஆனால், அதைப் பகிரங்கப்படுத்தத் தயாரில்லை. இந்தக் கேவலமான சிந்தனையை என்னவென்று சொல்வது?

மேலும்

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியுள்ளது (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-39)

“எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கிழக்கு மாகாணத் தமிழர்களே. 
 எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சி உட்பட வடக்கைத் தளமாகக் கொண்ட அத்தனை தமிழ் அரசியல் கட்சிகளையும் முற்றாக நிராகரித்து கிழக்கைத் தளமாகக் கொண்ட மாற்று அரசியல் அணியொன்றை அடையாளம் காணவேண்டிய தேவை முன்னெப்பொழுதும் இல்லாத முன்னுரிமையோடு இப்போது கிழக்குத் தமிழர்களை எதிர்நோக்கியுள்ளது. கிழக்குத் தமிழர்கள் இப்போதிருந்தே தம்மைத் தனித்துவமான அரசியல் கட்டமைப்பாகத் தகவமைத்துக்கொள்ளல் அவசியம். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணுவதால் பலனில்லை.”

மேலும்

1 14 15 16 17 18 130