முஸ்லிம் தமிழ் உறவு குறித்துப்பேசும்
‘இப்படியும் ஒரு காலமிருந்து’ என்ற பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் புத்தகம் பற்றிய எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் பார்வை இது.
Category: அரசியல்
செம்மணி: இனியும் உள்ளகப்பொறிமுறை சாத்தியமா……?(வெளிச்சம்:071)
“இறுதிவரை தோண்டி எடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு கூட இன்னும் இல்லை. புதைகுழியில் காணப்படும் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு, கண்ணியமான அடக்கத்திற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். இந்த வகையில் சர்வதேச மேற்பார்வைக்கான அழைப்புகள் முற்றிலும் நியாயமானவை…”
புதிய அரசியலமைப்பின் நோக்கம்?
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பைப் போன்றே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பதே புதிய அரசியலமைப்பு முயற்சியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அல்லாவிட்டால், புதிய அரசியலமைப்பு நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பது நிச்சயமானது.”
வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன
செம்மணிப் புதைகுழி உள்ளிட்ட விடயங்களை ஒவ்வொன்றாகச் சீர்ப்படுத்தினால்தான் நாட்டில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக நீதியுணர்ச்சி வலுத்து, நடைமுறையாக வேண்டும். அரசியலில் நீதியுணர்ச்சி என்பதற்கு ஏராளம் வியாக்கியானங்கள் உண்டு. அப்படி ஒன்று இல்லை என்ற கருத்தும் உண்டு. ஆனாலும் சட்டமும் நீதியும் மக்களின் நம்பிக்கையோடும் நாட்டின் நலனோடும் சம்மந்தப்பட்டவை. அதை நோக்கிச் செல்ல வேண்டும் என்றே செம்மணி என்புக்கூடுகளும் வலியுறுத்துகின்றன.
’13 ஆவது திருத்தத்தின் முழு அமுலாக்கலின் முக்கியத்துவம் (சொல்லித்தான் ஆகவேண்டும் -சொல்-43)
“இலங்கை-இந்திய சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்படாமைக்கும்-முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும்-இன்று இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார-அரசியல் பின்னடைவுகளுக்கும் முழுக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தன்முனைப்போடு கூடிய தவறான அரசியல் மற்றும் இராணுவச் செயற்பாடுகளே ஆகும். இதற்குப்போய் இந்திய அரசாங்கத்தையும் இலங்கை அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதில் எந்த அரசியல் நேர்மையும் இல்லை.”
ஈழம் -பாலஸ்தீனம் – சர்வதேசம்…! (வெளிச்சம்: 070)
இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிகள், இந்தியாவும் சீனாவும் எதிரிகள், இஸ்ரேலும் ஈரானும் எதிரிகள், உக்ரைனும் ரஷ்யாவும் எதிரிகள், அமெரிக்காவும் ரஷ்யாவும், சீனாவும் எதிரிகள் இவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து சிறிலங்கா அரசுக்கு புலிகளை அழிக்க அனைத்து ஆதரவையும் வழங்கக்கூடியதாக இருந்தது? புலிகளுக்கு பயிற்சியும், ஆயுதமும் வழங்கிய இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்தே இதை செய்தார்கள் என்றால் அதற்கான காரணங்கள் யாருக்கு தெரியாவிட்டாலும் புலிகளுக்கு தெரியாமல் இருக்க முடியாது.
முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி ஈரான் உள்ளிட்ட முஸ்லீம் உலகை பகைத்துக்கொண்டோம்.
பௌத்த கோயில்களில் தாக்குதல் நடாத்தி ஆசியாவின் பௌத்த நாடுகளை இலங்கை அரசின் பக்கம் நகர்த்தினோம்..
எதிரியுடன் இணைந்து இந்தியாவை எதிர்த்து, ராஜீவ்காந்தியை கொன்று இந்தியாவிலும், தமிழகத்திலும் ஆதரவை இழந்தோம்.
ஈழத்திற்கு எதிரிகளையும், சிறிலங்காவுக்கு நேச சக்திகளையும் புலிகளே உருவாக்கினர்.
உலகமயமாக்கல் வியாபார அரசியல் அன்றைய அனைத்து இராணுவ, வல்லரசு நிலைப்பாடுகளையும் தளர்த்தி பல பத்து ஆண்டுகளாகிறது. பூகோள அரசியல் என்பது இன்று முழுக்க முழுக்க சந்தை பொருளாதார அரசியல். இதை புரிந்து கொள்ளாமல் கலாவதியாகிப்போன குளிர்யுத்த கால வல்லரசு பூகோள அரசியலை “கலாநிதிகளும்” விளங்கிக்கொள்ளாததால், விளங்கியும் விடுதலையின் பேரில் கூலிக்கு மாரடித்ததால் வந்த வினை.”
வேந்தர் செல்வராசா: மட்டக்களப்பின் சுடர் ஒன்று அணைந்தது…..!(வெளிச்சம்: 069)
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மானாகப்போடி செல்வராசா காலமானார்.
அவர் குறித்த அழகு குணசீலனின் ஒரு நினைவுக்குறிப்பு இது.
அன்னாருக்கு அரங்கத்தின் அஞ்சலியும் உரித்தாகட்டும்.
அமெரிக்காவுக்கு விழுந்த இடி: பாலஸ்தீனத்தை அங்கீகரித்தது பிரான்ஸ்.!(வெளிச்சம்: 068)
“பாலஸ்தீனத்தை சுய இராச்சியமாக அங்கீகரிக்கும் அறிவிப்பை நான் எதிர்வரும் செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் வெளியிட தீர்மானித்துள்ளேன்.
மத்திய கிழக்கில் நீதியானதும், நிரந்தரமானதுமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எனது வரலாற்று ரீதியான அனுபவத்தின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். இது ஒரு தார்மீகக் கடமை (DEVOIR MORAL: MORAL DUTY/ MORAL OBLICATION) என்று நான் கருதுகிறேன்”
கடந்துபோன யுகமொன்றின் கம்யூனிஸ்ட் தலைவரின் நினைவைக் கொண்டாடுதல்
“மாவோவை நன்கு தெரிந்த தோழர் சண் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சண் மாவோவை சந்தித்து கலந்துரையாடிய ஒரே இலங்கையர் மாத்திரமல்ல, தெற்காசியாவைச் சேர்ந்த சிலரில் ஒருவருமாவார். நக்சலைட்டுக்கள் என்று நன்கு அறிப்பட்ட இந்தியாவின் மாவோவாத இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்– லெனினிஸ்ட்) யின் தலைவரான சாரு மசுந்தார் மாவோவை ஒருபோதும் சந்தித்ததில்லை.”
எல்லாளனாக உருவெடுத்து, அரங்கை அதிரவைத்த பேராசிரியர் மௌனகுரு!
“அபிநய சேத்திர ஆடலகம்” என்னும் ஆற்றுகைக்குழுவின் ஒரு நீண்ட ஆடல் நிகழ்வில் எல்லாள மன்னனாக தன்னை உருவாக்கி 83வது வயதிலும் ரசிகர்களை அதிசயிக்க வைத்தார் பெருங்கூத்தனாக பலராலும் வர்ணிக்கப்படும் பேராசிரியர் மௌனகுரு.
அந்த ஆற்றுகைக்கான முன்னேற்பாடு, பயிற்சி, தனது பாத்திரம் உருவானவிதம், ஒப்பனை, ஒத்திகை போன்றவை குறித்த தனது அனுபவத்தை அவர் இங்கு சுவாரசியமாக விபரிக்கிறார்.
