‘ஜனாதாபதி திசாநாயக்கவிடம் ‘மெய்யான மாற்றம் ‘ ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய ‘புதிய தொடக்கம்’ ஒன்றையே மக்கள் எதிர்பார்த்தார்கள். நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில் வழமைக்கு மாறான தீவிர மாற்றத்தைச் செய்ததன் மூலமாக அந்த புதிய தொடக்கத்தை நோக்கிய திசையில் முதலாவது அடியை இலங்கை மக்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.
ஆனால், முறைமை மாற்றம் என்பதையும் புதிய கலாசாரம் என்பதையும் மக்கள் மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் கூட எவ்வாறானதாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் சந்தேகம் எழக்கூடியதாக கடந்த ஆறு மாதகால அரசியல் மற்றும் ஆட்சிமுறை நிகழ்வுப் போக்குகள் அமைந்திருக்கின்றன. ‘