கன்னடம் குறித்த கமல்ஹாசனின் கருத்தால் மூண்டிருக்கும் சர்ச்சையை புரிந்து கொள்தல் 

“அந்த நிலைப்பாட்டுக்கு பின்னால் எத்தகைய வர்த்தகக் கணிப்பீடுகள் இருந்தாலும், அத்தகைய அறிவிப்பு ஒன்றைச் செய்வதற்கு அவருக்கு இருந்த துணிச்சலை மெச்சவேண்டும். நீதிமன்றம் கூறியதைப் போன்று இது ஒரு அகங்காரப் பிரச்சினை அல்ல.  சுயமரியாதைப் பிரச்சினை.  கருத்தொன்றைக் கூறுவதற்கு ஒருவருக்கு சகல உரிமையும் இருக்கிறது. தான் கூறியது சரியானது என்று அவர் நம்பினால் அதில் உறுதியாக நிற்பதற்கான உரிமையும் அவருக்கு இருக்க வேண்டும்.”

மேலும்

துரோகிகள் Vs தியாகிகள்!

“உலகில் இந்தளவுக்குத் துரோகி என்ற சொல்லோடு மிக நீண்ட காலம் – ஏறக்குறைய 75 ஆண்டுகள் – சீரழிந்த இனமோ சமூகமோ வேறு இருந்திருக்க முடியாது. அரசியலில் மட்டுமல்ல, கலை இலக்கியத்திலும் ஊடகத்துறையிலும் இந்தத் ‘துரோகி‘ முத்திரை குத்தும் போக்கு நீடித்தது.
 
ஆக இந்த முட்டாள்தனம் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும் செழித்துப் பரந்து வளர்ந்துள்ளது.“

மேலும்

ஜேர்மனியில் அநுர:  குவியும் போர்க்குற்ற, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்…! (வெளிச்சம்: 063)

“ஐ.நா.கடந்த காலங்களில் பல தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தும் எதுவும் இலங்கை அரசாங்கங்களால் நடைமுறைப்-படுத்தப்படவில்லை. கடந்த கால இலங்கைத்தலைவர்களிடம் இருந்து அநுரகுமாரவின் தலைமைத்துவத்தையும் இதுவரை வேறுபடுத்த முடியவில்லை. போர்க்குற்றங்களோடு தொடர்பான முன்னாள் படைத்துறை முக்கியஸ்தர்களை ஐ.நா. பிரேரணைக்கு முரணாக பாதுகாப்பதுடன், பிரேரணையையும் அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நிராகரித்துள்ளது.”

“இதன் விளைவுகள் போகப்போக புரியும்…!. 2026 இல்  கடன் மீளளிப்பு ஆரம்பமாகும் போது தெரியும்….!”

மேலும்

இருளில் தேடும் தமிழ்ப்பூனை

“இதொன்றும் தமிழ் வரலாற்றுக்குப் புதியதல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய் தொடங்கி விட்டது. அப்பொழுது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டி மகிழ்ந்தன.
அதற்குப் பிறகு இயக்கங்கள் துப்பாக்கியினால் விளையாடின. துரோக- – தியாகி அடையாளப்படுத்தல் தொடர்ந்தது. இந்த விளையாட்டுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் தம்மையே பலிகொடுக்க வேண்டியிருந்தது.”

மேலும்

உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதில் தமிழ்க் கட்சிகளின் அணுகுமுறைகள்

“வடக்கில் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளையும்  அமைக்கப்படும் கூட்டணிகளையும் நோக்கும்போது ‘துரோகிகள்’ என்று ஒருதரப்பு  அரசியல்வாதிகளை அழைக்கும் கலாசாரத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்று தெரிகிறது. “

மேலும்

கிழக்குத்தமிழர் அரசியல்: தனித்துவம் -மாற்று!  சந்தர்ப்பங்கள் -சவால்கள்!!(வெளிச்சம்:062)

வடக்கில் ஈ.பி.டி.பி. யோடு பேசிய, பேச திகதி குறித்த தமிழ்த்தேசியம் கிழக்கில் ரி.எம்.வி.பி.யுடன் பேசத்தயாரில்லை. “துரோகி” என்றாலும் “நாங்கள் வடக்கார்” என்ற பிரதேசவாத மேலாண்மை அரசியல் அதிகார திமிர் நியாயம். வடக்கில் “தமிழ்க்கட்சிகளோடு” / “தமிழ்பேசும் கட்சிகளோடு ” பேச முடிவெடுக்கப்பட்டதாம். ஆக, கிழக்கில் தமிழ்க் கட்சிகளும் இல்லை. தமிழ்பேசுபவர்களும் இல்லை. இதற்கு பெயர்  “புரட்டு அப்புக்காத்துதனம்”.

மேலும்

டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்!

இங்கே மிகப் பெரிய சிக்கலாக இருப்பது, தற்போதைய சூழலில் ஈ.பி.டி.பி ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதேயாகும். தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் இரண்டுக்கும் இப்போது ஈ.பி.டி.பி யின் ஆதரவு வேண்டும். ஆனால், அதைப் பகிரங்கமாகப் பெற முடியாது. இதுதான் பிரச்சினை. கள்ள உறவுக்குத் தயார். அதில் கிடைக்கின்ற இன்பத்தையும் சுகத்தையும் இலாபமாக அனுபவிக்கத் தயார். ஆனால், அதைப் பகிரங்கப்படுத்தத் தயாரில்லை. இந்தக் கேவலமான சிந்தனையை என்னவென்று சொல்வது?

மேலும்

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியுள்ளது (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-39)

“எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கிழக்கு மாகாணத் தமிழர்களே. 
 எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சி உட்பட வடக்கைத் தளமாகக் கொண்ட அத்தனை தமிழ் அரசியல் கட்சிகளையும் முற்றாக நிராகரித்து கிழக்கைத் தளமாகக் கொண்ட மாற்று அரசியல் அணியொன்றை அடையாளம் காணவேண்டிய தேவை முன்னெப்பொழுதும் இல்லாத முன்னுரிமையோடு இப்போது கிழக்குத் தமிழர்களை எதிர்நோக்கியுள்ளது. கிழக்குத் தமிழர்கள் இப்போதிருந்தே தம்மைத் தனித்துவமான அரசியல் கட்டமைப்பாகத் தகவமைத்துக்கொள்ளல் அவசியம். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணுவதால் பலனில்லை.”

மேலும்

ஊடகம்:  பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும் காண்…! (வெளிச்சம் 061)

“மட்டக்களப்பில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கை குறித்த தகவல் பரிமாற்றத்தில்/ செய்தியில் சமூக ஊடகங்களின் தேடுதல், கண்டறிதல், பகிர்தல் என்ற சமூக ஊடக அடிப்படை கருத்தியல் பொய்யான, பழைய தகவல்களை திரிபு படுத்தி பதிவிட்டு, படம் போட்டு கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை தவறானவை என்று வெளிப்படையாக தெரியவந்த பின்னரும்/ பிடிபட்ட பின்னரும் எந்த ஒரு மரபு ஊடகமும், சமூக ஊடகமும் அதற்கான பொறுப்பை ஏற்று  தவறை திருத்திக்கொள்ள தயாராக இல்லை.  இது மிகவும் துரதிஷ்டவசமானது. அப்படியானால் மற்றவர்களை பொறுப்புக்கூறச் சொல்ல இவர்களுக்கு இருக்கின்ற தார்மீக உரிமை என்ன?”

மேலும்

NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா?

“NPP தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளவும் கவனத்திற் கொள்ளவும் வேண்டிய விடயங்கள் பல உள்ளன. 
தனக்குக் கிடைத்திருக்கும் வரலாற்று வாய்ப்பை NPP சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்று அதனால் கண்டறிய முடியாதிருக்கிறது. முதிர்ச்சியும் பக்குவமும் நிதானமும் இல்லாத பலருடைய கைகளில் பொறுப்புகள் பகிரப்படுகின்றன. ஆற்றலுள்ளவர்களையும் NPP யின் மெய்யான ஆதரவாளர்களையும் அது கண்டறிய முடியாமல் தடுமாறுகிறது. அல்லது அவ்வாறானவர்களை அதனால் உள்வாங்க முடியவில்லை. அதற்குள் நிலவுகின்ற உளக் குழப்பங்களே இதற்குப் பெரிய காரணங்களாகும். இதெல்லாம் NPP ஐப் பலவீனப்படுத்துகின்றன.”

மேலும்

1 14 15 16 17 18 53