சொல்லித்தான் ஆகவேண்டும்: ‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர். (சொல்-53) 

“இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அதிகாரப் பகிர்வுக்காகக் கடந்த காலத்தில் கிடைத்த பல அரிய சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் ஆரம்ப காலத்தில் அரசியல் மதீயீனத்தாலும் பின்னர் சண்டித்தனத்தினாலும் தொலைத்துவிட்டோம். இறுதியில் விவேகமற்ற வீரம் உயிரழிவுகளையும் சொத்தொழிவுகளையும் விளைவித்த பின்னர் தமிழர்களைப் பிச்சை வேணாம், நாயைப் பிடி எனும் நிலைக்குத் தள்ளிவிட்டு கையறு நிலையில் திக்குத் தெரியாத காட்டில் கண்களைக் கட்டிவிட்ட நிலைக்கு ஆக்கிவிட்டு 2009 இல் முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழர்களைச் சமாதியாக்கித் தானும் சமாதி அடைந்தது.”

மேலும்

இயக்கச்சி படையினரின் ஆக்கிரமிப்பு நில மீட்பு போராட்டத்தில் கட்சி அரசியல்

“இந்தப் போராட்டத்தின்போது பிரதேச செயலகத்திலிருந்து காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் வருகை தந்திருந்தனர். அவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் (மாவட்டச் செயலர்) தகவல் ஒன்றை மக்களுக்கு அறிவித்தனர். அதில் தற்காலிகமாக காணி அளவீடு செய்வது இடைநிறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பைச் செய்வதற்கு வந்திருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்களை, மறித்து, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர்  சுரேன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் அழைத்துச் செல்வதற்குக் கடுமையாக முயற்சித்தார். அதைப் படம் எடுத்துக் கொள்வதற்கும் தமது அணியைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால். பிரதேச செயலக உத்தியோகத்தர்களோ, நாம் மக்களுக்கே தகவல் சொல்ல வேண்டும். அதற்காகவே வந்தோம் என்று மக்களுக்கு முன்னிலையில் தெரிவித்தனர்.
இப்படி ஏராளம் இழுபறிகள், திசைமாற்ற முயற்சிகளுக்கு மத்தியில் ஒரு சிறிய மக்கள் போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது.”

மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணையும் தமிழரசுக்கட்சியும்..!(மூன்றாவது கண்: XV)

“சிறிலங்காவின் சுதந்திரதினம், குடியரசு தினம்….. போன்று அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை” என்று தமிழரசுக்கட்சி நழுவிவிடமுடியாது.   கறுப்புக்கொடிக்கு பதிலாக நிலக்கரி சாம்பலை அள்ளி முகத்தில் பூசிக் கொள்ளவும் முடியாது. தேசிய விவகாரங்களில் எதிர்க்கட்சி என்ற வகையில் தமிழரசுக்கட்சி எதிர்க்கட்சிகளோடு  பொதுவான விவகாரங்களில் ஒத்துழைக்காது விட்டால், மாகாணசபை தேர்தல் கோரிக்கை போன்ற, மற்றும் தமிழர் விவகாரங்களில் மற்றைய எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. 159 எம்.பி.க்களை கொண்டுள்ள என்.பி.பி.அரசாங்கம் மிகவும் இலகுவாக இந்த நம்பிக்கை இல்லாப்பிரேரணையை தோற்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் குறிப்பிட்ட விவகாரம் தொடர்பான கொள்கையே இங்கு முக்கியமானது.”

மேலும்

ஒரு கட்சி முறைமையில்  நாட்டம் தொடர்பில்  அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் 

“ஆளும் கட்சியின் உறுப்பினர்களினால் அல்லது ஆதரவாளர்களினால் நிரப்பப்படும் சமூக அபிவிருத்தி சபைகள் அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் சமூகத்தின் அடிமட்டத்தில் கட்சி அரசியலுக்கான  ஒரு கட்டமைப்பாக இயங்கக்கூடிய ஆபத்து இருப்பதாக எதிரணி கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஆயுதப் போராட்டப் பாதையைக் கைவிட்டு ஜனநாயக மார்க்கத்துக்கு வந்து விட்ட ஜே.வி.பி. முதலாளித்துவக் கட்டமைப்பை ஒழிக்க முயற்சிப்பதற்கு பதிலாக அந்த முறைமைக்குள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.”

மேலும்

ஞானபீட விருதும் அகவிழி திறப்பும்

“வைரமுத்து தன்னுடைய வெவ்வேறு அரசியல் தொடர்புகளாலும் சினிமாவின் மூலமாகக் கிடைத்த பிரபலத்தினாலும் விருதுகளைக் குறிவைத்து வேட்டையாடும் ஒரு தாகமுடைய விலங்கு. அதற்குரிய நுணுக்கங்களையும் கீழ்மையான தந்திரோபாயங்களையும் செய்யும் மனிதர். தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய கீழ்மைச் செயல்களின் மூலமாக அவர் நேசிப்பதாகச் சொல்லும் தமிழையும் அதனுடைய வளமான இலக்கியச் செழிப்பையும் அவமதிப்புச் செய்துள்ளார். மட்டுமல்ல, தன்னையும் தன்னுடைய எழுத்துகளையும் ஞானபீடம் வரையில் முன்னிறுத்தியதன் மூலமாக தமிழின் செழிப்பான இலக்கிய வளத்தை வெளிச்சமூத்தின் முன் மறைக்க முற்பட்டிருக்கிறார். வைரமுத்துவை ஆதரிப்போருக்கும் வைரமுத்துவை விருதுக்காகத் தெரிவு செய்தோரையும் இந்தப் பழி சேரும்.”

மேலும்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை தேடி……! (மூன்றாவது கண்:XIV)

“சதிக்கோட்பாடுகளை கட்டமைப்பதற்கும், உளவு அமைப்புக்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட சில முக்கிய பிரச்சினைகள் குறித்து இப்புத்தகம் புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. இது நிச்சயம் விவாதத்தை தூண்டும். நாலாசிரியருக்கு எதிராக பழிவாங்கும் வேட்டை நடக்காது என்று மட்டுமே நம்பமுடியும் ..” என்ற “த ஐலண்ட்” இன் நம்பிக்கையும், கருத்துருவாக்கமும்  புதிய தேடல்களை நோக்கி அநுர அரசாங்கத்தை நகர்த்துமா? என்பதற்கான பதில் அவர்களுக்கே வெளிச்சம்.”

மேலும்

பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும்

“1930களின் இறுதி ஆண்டுகள் மற்றும் 1940களின் ஆரம்ப ஆண்டுகளின் போது உள்ளுராட்சி அமைச்சராக இருந்த பண்டாரநாயக்காவும் ஏனைய சில சிங்களத் தலைவர்களும் இலங்கையில் மூன்று மாகாணங்கள் கொண்ட தமது பழைய சமஸ்டிக் கோரிக்கை பற்றி தமிழ்த் தலைவர்களுடன் பேசினார்கள். ஆனால் அப்போது யாழப்பாண தலைப்பா கட்டி மேட்டுக்குடியினரின் பென்னம் பெரிய தலைவராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தார், அது தனது ஐம்பதுக்கு ஐம்பது (50 க்கு 50) கோரிக்கைக்கு எதிரான சதித் திட்டம் என்றார், அத்துடன் சமஸ்டி என்பது ‘இலங்கைக்கு கூடாத ஒன்று என்பதோடு, தமிழர்களுக்கு மிக மோசமான ஒன்று’ என முழக்கங்கள் இட்டு, யாராவது சமஸ்டி பற்றி பேசினால் அது தமிழினத் துரோகம் என்று பட்டம் தெளிக்கும் கட்டத்தில் தமிழர்களை நிறுத்தினார். அவர் அப்போது மட்டுமல்ல, சந்தனப் பொட்டு பொன்னம்பலத்தார் 1970ம் ஆண்டு தேர்தலில் தோற்று மலேசியா போகும் வரை சமஸ்டி கேட்ட செல்வநாயகத்தை திட்டித் தீர்ப்பதையே தமது அரசியலாகக் கொண்டிருந்தார்.”

“முதலில் இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளபடி முறையாகவும் முழுமையாகவும் மாகாண ஆட்சி முறை மக்களாட்சி கொண்டவையாக, காத்திரமான ஆற்றல்களுடன் செயற்படட்டும். தொடரந்து காலம் கனியும் போது இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறை மலரட்டும்.”

மேலும்

கனகர்கிராமம்: கிழக்குகரை வாழ்வியலின் நீள் வெட்டு முகம்..!-பகுதி 3 (மூன்றாவது கண்: XIII)

“செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் கோகிலனாக கிழக்கில் மூடப்பட்டுக்கிடந்த ஒரு பெட்டகத்தை திறந்து காட்டியுள்ளார். அதில் பூட்டப்பட்டிருந்த ஆதாரங்கள் இன்றைய, எதிர்கால சந்ததியினருக்கு தேவையானவை. அவற்றை  நுகரவேண்டியது வாசகர் பொறுப்பு. கிழக்கில் பொதுவாகவும் – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் குறிப்பாகவும், சிறப்பாகவும்   சமூக ஆர்வலர்கள் வாசிக்கவேண்டியதும்,  வீட்டு நூலகங்களில் இடம் ஒதுக்கப்பட வேண்டியதுமான ஒரு  வரலாற்று ஆவணம் கனகர் கிராமம்.”

மேலும்

மத்திய கிழக்கில் போரில் இருந்து விடுபடமுடியாமல் தடமாறும் ட்ரம்ப்

“இந்த கட்டத்திலாவது போரை நிறுத்துவதற்கு ட்ரம்புக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால், எந்தவொரு இராஜதந்திர முயற்சியிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு முன்னதாக  வெறிபிடித்த அடாவடிக்காரன் போன்று ஈரான் மற்றும் லெபனான் மீது குண்டுமாரி பொழிந்து கொண்டிருக்கும் தனது போர்க் கூட்டாளியான இஸ்ரேலியப் பிரதமர் நெதான்யாகுவை அவர்  அடக்கிவைக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.”

மேலும்

மாகாண ஆட்சி முறையின் தேவையை தமிழர்களின் அரசியலே தீர்மானிக்க வேண்டும்​

“இலங்கையின் சிறுபான்மையான தேசிய இனங்களாக உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் சமூக சக்திகளே மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற விடயத்துக்கான அரசியல் செயற்பாடுகளை நோக்கி திரள வேண்டும், முனைப்போடு விடா முயற்சியாக செயற்பட வேண்டும். அத்துடன், மாகாண ஆட்சிகளுக்காக அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும்.”

மேலும்