“இந்த நாட்டில் மாற்றம் வேண்டும் என்றால், அது தனியே NPP யில் மட்டும் நிறைவேறக் கூடியதல்ல. அனைத்துத் தரப்பினதும் அனைத்துச் சமூகங்களினதும் பங்களிப்புடன்தான் ஏற்படக்கூடியது. அதற்கான கதவுகளை (வாசல்களை) திறக்க வேண்டிய பொறுப்பு, கடப்பாடு அனைவருக்கும் உண்டு.”
Category: கட்டுரைகள்
ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!(வெளிச்சம்:073)
“அரசாங்கம் நல்லெண்ண அடிப்படையில் இந்த யுத்த சூழல் எச்சங்களை படிப்படியாக குறைக்க முயற்சிக்கிறது. அரசாங்கம் தென்னிலங்கை சிங்கள பௌத்த தீவிர அரசியல் சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாத தமிழ்த்தேசிய உணர்ச்சி எதிர்ப்பு அரசியல் இராணுவத்தை நிலைநிறுத்தவும், இனப்பிரச்சினைக்கான தீர்வை பின் தள்ளவும், பயங்கரவாத சட்டத்தின் நீக்கத்தை தடுக்கவும் தமிழ்த்தேசியம் அரசாங்கத்திற்கு செய்யும் சேவகமாக அமையும். எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.
இதுதான் தமிழரசுக்கட்சியினதும், சுமந்திரனதும் பின்கதவு இலக்கா….?”
ஒரு முகப்பட வேண்டிய சூழல்
“ஹர்த்தால், ஊர்வலம், பாராளுமன்றத்தில் முழக்கம், தேர்தல் மேடைகளில் ஆவேசம், அரசியல் பத்திகளில் கண்டனம் போன்றவற்றினால் அரசியல் தீர்வோ, மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளோ கிடைக்கும் என்பது பொய்யென நிரூபிக்கப்பட்டாயிற்று. வடக்குக் கிழக்கை மையப்படுத்தி நடத்தப்படும் போராட்டங்களால் எந்தப் பயனுமில்லை. இதற்கு உதாரணம் அறகலய. அது கொழும்பில் நடத்தப்பட்டது. அரசாங்கத்தை முடக்கும் விதமாக நடத்தப்பட்டது. பல்வேறு தரப்புகளையும் பல தரப்புச் சக்திகளையும் ஒருங்கிணைத்து அல்லது அவற்றின் ஆதரவோடு நடத்தப்பட்டது. அதுதான் அந்தப் பெரிய வெற்றியை ஈட்டுவதற்குக் காரணமாகியது.”
தமிழர் சூனியம்: பூச்சியத்திற்குள் ஒரு இராட்சியம்…..!
“எல்லோரும் சேர்ந்து பொய்க்கு வலுச்சேர்த்து இருளை வெளிச்சமாகக் காட்டி விட்டு சூனிய அரசியலில் வந்து நின்று ஆதங்கப்படுகிறோம். அப்படி என்றால் “தமிழீழம் சாத்தியமற்றது” என்று சொன்னவர்கள், புலிகளின் ஆயுதப்போராட்டம் தோல்வியில் முடியும் என்று சொன்னவர்கள் தான் உண்மையை பேசியவர்கள். அதற்காக அவர்களுக்கு உங்களால் வழங்கப்பட்ட பட்டம் “துரோகி”. பொய்மை, வெளிப்படைத்தன்மையின்மை, அளவுக்கு மீறிய கற்பிதம், ஏகபோக அதிகாரவெறியை அங்கீகரித்தமை, நியாயப்படுத்தியமை, ஒத்தோடியமை, வழிபாட்டு அரசியல் எல்லாம் இறுதியில் சூனியத்தில் கொண்டு நிறுத்தியிருக்கின்றன. இது அரசியல் வெறுமை அதனால்தான் பூச்சிய அரசியல்….!”
கற்பனையில் தமிழ்ச்சமூகம்!
“இங்கே கற்பனைக் குதிரைகளே அதிகம். அவை நிஜமாக ஓடுவதுமில்லை. நிஜமாகக் கனைப்பதுமில்லை. நிஜமாக வெற்றியடைவதுமில்லை.
பாவம் தமிழ் மக்கள். இல்லை இல்லை. மன்னிக்க வேண்டும். இன்னும் தண்டனை பெற வேண்டும் தமிழ் மக்கள். ஏனென்றால், இவ்வளவு பட்ட பிறகும் இன்னும் புத்தி தெளியாமல் இருந்தால், அதற்கான தண்டனையைப் பெறத்தானே வேண்டும்!.
ஆகவே தொடர்ந்தும் சிங்கள மேலாதிக்கத் தரப்புக்கு வெற்றிகளைக் குவிக்கிறார்கள் தமிழ் மக்கள்.”
மாகாணசபை தேர்தல்களை நடத்த மூன்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கை
“மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் அவசரம் காட்டுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்ற பரவலான ஒரு அபிப்பிராயமும் இருக்கிறது. எது எவ்வாறிருந்தாலும், மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முற்று முழுதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பேயாகும். அதை தட்டிக்கழிப்பதற்கு உருப்படியான எந்த காரணத்தையும் அரசாங்கத்தினால் கூறமுடியாது.”
ஒரு எச்சரிக்கை!
“16 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரன் இறந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதைத் தெரிந்து கொண்டே இவ்வளவு காலமும் இழுத்தடித்து வந்து இப்பொழுது சண்டையிடுகிறார்கள். இதை என்னவென்று சொல்வது?
அப்படித்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உச்ச முரண்பாடு நிலவுகிறது.”
எல்லா இனத்துப் பேரப்பிள்ளைகளுக்கும் ஒரு பாட்டனின் கதை!
முஸ்லிம் தமிழ் உறவு குறித்துப்பேசும்
‘இப்படியும் ஒரு காலமிருந்து’ என்ற பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் புத்தகம் பற்றிய எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் பார்வை இது.
செம்மணி: இனியும் உள்ளகப்பொறிமுறை சாத்தியமா……?(வெளிச்சம்:071)
“இறுதிவரை தோண்டி எடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு கூட இன்னும் இல்லை. புதைகுழியில் காணப்படும் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு, கண்ணியமான அடக்கத்திற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். இந்த வகையில் சர்வதேச மேற்பார்வைக்கான அழைப்புகள் முற்றிலும் நியாயமானவை…”
புதிய அரசியலமைப்பின் நோக்கம்?
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பைப் போன்றே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பதே புதிய அரசியலமைப்பு முயற்சியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அல்லாவிட்டால், புதிய அரசியலமைப்பு நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பது நிச்சயமானது.”
